கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PM SHRI திட்டத்தில் இருந்து விலகியது கேரள அரசு




 PM SHRI திட்டத்தில் இருந்து விலகியது கேரள அரசு


* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் சேரும் முடிவை கைவிட்டுள்ளது கேரள அரசு. 


* மத்திய அரசின் இந்த திட்டத்தில் உள்ள எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளது.


* மேலும், மத்திய அரசின் தகுந்த பதில் கிடைக்கும் வரை, இந்த திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டில் அமலாகாது எனவும் தகவல்


மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.


திடீரென கேரள அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.


மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.


இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழ்நாடு அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.


இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டார்.


இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.


இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் இணையும் முடிவைக் கேரள அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.


PM SHRI திட்டத்தில் எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மத்திய அரசுக்கு, மாநில அரசு தரப்பில் கடிதம் எழுத இருப்பதாகவும், உரிய பதில் கிடைக்கும் வரை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)


Actual Price: Rs. 2490

Offer Price : Rs. 999

Benefit : Rs. 1491


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Grama Sabha Meeting on 01-11-2025

    கிராம சபைக் கூட்டம் உள்ளாட்சிகள் தினம் 01-11-2025 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள்கள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கடிதம்,...