கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விவசாய நிலத்தில் கிடைத்த 84 தங்கக் காசுகள் புதையல்

 


விவசாய நிலத்தில் கிடைத்த 84 தங்கக் காசுகள் புதையல்


திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தை சமன் செய்யும் போது கிடைத்த 84 தங்கக் காசுகள் புதையல் கிடைத்துள்ளது.


திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் தங்க புதையல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை



திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தை சமன் செய்யும் போது கிடைத்த தங்க புதையல்!


திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் நிலத்தை சமன் செய்யும் பணியின்போது, பழங்காலத்து குடுவையில் 86 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளது.



திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தை சமன் செய்தபோது தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதவன் (55). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் அதிகளவில் கற்கள் இருப்பதால் சமன் செய்ய முடிவு செய்தார். இதற்காக, கடந்த 22-ம் தேதி 'பொக்லைன்' இயந்திரத்தின் உதவியுடன் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக நிலத்தில் பள்ளம் தோண்டும் பணி நடந்தபோது பழங்கால சிறிய குடுவை ஒன்று கிடைத்துள்ளது. இதைப்பார்த்த ஆதவன் குடும்பத்தினர் குடுவையின் மூடியை உடைத்து திறந்து பார்த்தபோது தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.




இந்நிலையில், சுந்தரம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கந்திலி காவல் நிலைய போலீஸாருக்கு தங்க புதையல் குறித்து ஆதவன் குடும்பத்தினர் நேற்று தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். வட்டாட்சியர் நவநீதனிடம் தங்க நாணயங்கள் அடங்கிய குடுவையை ஆதவன் குடும்பத்தினர் ஒப்படைத்தனர். அந்த குடுவையில் 84 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.


கடந்த 22-ம் தேதி நிலத்தை சமன் செய்தபோது புதையல் கிடைத்த நிலையில், காலதாமதமாக தகவல் தெரிவித்துள்ளதால் ஆதவன் மீது வருவாய் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.



மேலும், குடுவையின் மூடி உடைந்திருப்பதும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, கந்திலி  காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் முருகன், நிலத்தின் உரிமையாளர் ஆதவன் மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


13PCS Vehicle Car T Shaped Handle Wrench Spanner with 8-19mm 1/2 Socket Tool Set (WITH SLEEVE)


https://amzn.to/4phdwhx




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2026 ஜூலை மற்றும் டிசம்பரில் TNTET - TRB அறிவிப்பு

    TN TET  in 2026 July and December  2026 ஜூலை மற்றும் டிசம்பரில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 2026...