10 நாட்களுக்குள் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS திட்டம்) குறித்த அரசாணை வெளியிடப்படும் - ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தகவல்
* ஓய்வூதிய வழக்கில் 10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை வெளியீடு .
* உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல்.
* உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி வாயிலாக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜர்.
* CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (06.01.2026)விசாரணைக்கு வந்தது.
* 10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை வெளியீடு செய்ய உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல் கூறினார்.
* இதனை அடுத்து நீதியரசர்கள் 21.01.2026 அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த Bluetooth Headphones...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.