கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு

 


தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு: பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு


மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்களுக்கு 2026-27-ம் ஆண்டுக்கான உத்தேச காலிப்பணியிடங்கள் குறித்து அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, ஆணைகள் எதிர்நோக்கப்படுகின்றன.


பெயர் பட்டியல் தயாரிப்பு: மேலும், பணி மாறுதல் மூலம் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்குவதற்கு தகுதியானவர்கள் பெயர்ப் பட்டியலும் தயார் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்னுரிமைப் பட்டியலில் இருந்து தகுதியான தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள, தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.


வழிகாட்டுதல்கள்: இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். வருங்காலத்தில் இதில் புகார் ஏதும் பெறப்பட்டால், பரிந்துரை செய்த முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS Exam 2025-2026 SAT Question Paper

  தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2025-2026 - படிப்பறிவுத் திறன் பகுதித் தேர்வு வினாத்தாள்  National Means ...