இடுகைகள்

சத்துணவு பணி நியமனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை (நிலை) எண் : 55, நாள்: 30-08-2024 வெளியீடு...

படம்
  புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை (நிலை) எண் : 55, நாள்: 30-08-2024 வெளியீடு... Ordinance G.O. (Ms) No: 55, Dated: 30-08-2024 Issued for the creation of new posts for the implementation of the Nutrition Scheme for the newly created 6 districts of Chengalpattu, Ranippettai, Mayiladuthurai, Tirupattur, Tenkasi and Kallakurichi... >>> அரசாணை (நிலை) எண் : 55, நாள்: 30-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

🍁🍁🍁 சத்துணவுத் திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்திவைப்பு ஏன்? அமைச்சர் வெ.சரோஜா விளக்கம்.

  கரோனா தொற்று தடுப்பு பணிகள் நடந்து வருவதால் சத்துணவு திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அமைச்சர் இதனை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 5,411 சத்துணவு அமைபப்பாளர்கள், 2,459 சமையலர்கள், 8,326 சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பும் பணி மேற்கொள்ள அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், சத்துணவு வேலை வாய்ப்பிற்கு அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் அதிக கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு சத்துணவு பணியாளர்கள் தேர்வு செய்யும் பணியை பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா குறிப்பிட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...