கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சேமிப்பு திட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேமிப்பு திட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செல்வமகள் சேமிப்புத் திட்ட விதிகள் மாற்றம்...



செல்வமகள் சேமிப்புத் திட்ட விதிகள் மாற்றம்...


Changes in Sukanya Samriti Yojana Saving Scheme Rules...


சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்த சிறப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது.  இந்த சூழலில்  திட்டத்தின் (சுகன்யா சம்ரித்தி யோஜனா) பல விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொருளாதார அமைச்சகத்தால் புதிய வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அனைத்து தபால் நிலையங்களும் இந்த வழிகாட்டுதல்களை (SSY கணக்கு) பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.


2 கணக்குகள் இருந்தால் உடனடியாக மூடப்படும்:


நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, புதிய வழிகாட்டுதல் அனைத்து வகையான சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் பொருந்தும். இந்த சூழ்நிலையில் சுகன்யா சம்ரித்தி கணக்கில் முதலீடு செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த புதிய விதிகளை அறிந்திருக்க வேண்டும். இந்தப் புதிய வழிகாட்டுதல்களின்படி, பெண் குழந்தையின் தாத்தா அல்லது பாட்டி தனது பேத்திக்காக செல்வ மகள் கணக்கைத் திறந்திருந்தால், அந்தக் கணக்குகள் பேத்தியின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். ஒருவேளை ஒரே விவரங்களுடன் இரண்டு செல்வ மகள் திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டால், அது உடனடியாக மூடப்படும். அத்தகைய கணக்குகள் நெறிமுறையற்றதாக கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


பான் ஆதார் இணைப்பு கட்டாயம்:

மகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்களின் பான் மற்றும் ஆதார் எண்களை உடனடியாக எந்த தாமதமும் இன்றி சேகரித்து கணக்கு விவரங்களில் இணைக்க தபால் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுபுதிய வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெரிவிக்க தபால் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, நெறிமுறையற்ற மற்றும் ஒழுங்கற்ற செல்வமகள் திட்ட கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரம் இனி நிதி அமைச்சகத்திடம் மட்டுமே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், அத்தகைய கணக்குகள் தங்கள் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.


செல்வமகள் கணக்கிற்கு 8.2 சதவிகித வட்டி:


செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், நீங்கள் வருடம் ஒன்றுக்கு 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்த செல்வமகள் கணக்கிற்கு இந்த காலாண்டில் ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் வட்டியை ஈட்டுகிறது. பெண் பிள்ளைக்ளுக்கு 21 வயதாகும் போது இந்தக் கணக்கு முதிர்ச்சியடையும். இந்த செல்வமகள் திட்ட கணக்கில் இருந்து மகளுக்கு 18 வயது நிறைவடைந்தால் மட்டுமே மொத்த டெபாசிட்டில் 50% எடுக்க முடியும். இந்தக் கணக்கைத் திறக்க மகளின் பிறப்புச் சான்று தேவைப்படும். பெற்றோருக்கும் பான் கார்ட் மற்றும் ஆதார் அட்டை தேவைப்படும்.


மகளிர் மேன்மை சேமிப்புப் பத்திரம் (Mahila Samman Savings Certificate) - அஞ்சலக வட்டி விகிதம் 7.5% - முதிர்வுத் தொகை விவரங்கள் - கடைசி நாள்: 31-03-2025 (Women Eminence Savings Bond - Postal Interest Rate 7.5% - Maturity Amount Details - Last Date: 31-03-2025)...



>>> மகளிர் மேன்மை சேமிப்புப் பத்திரம் (Mahila Samman Savings Certificate) - அஞ்சலக வட்டி விகிதம் 7.5% - முதிர்வுத் தொகை விவரங்கள் - கடைசி நாள்: 31-03-2025 (Women Eminence Savings Bond - Postal Interest Rate 7.5% - Maturity Amount Details - Last Date: 31-03-2025)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-24 முதல் காலாண்டுக்கான (அதாவது 01/04/2023 முதல் 30/06/2023 வரை) அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்வு - (Postal Savings Interest Rates for 1st quarter of 2023-24 - i.e., 01/04/2023 to 30/06/2023)...

Revision of interest rates on Small Savings Schemes for Q1 of FY 2023-24.


>>> 2023-24 முதல் காலாண்டுக்கான (அதாவது 01/04/2023 முதல் 30/06/2023 வரை) அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்வு - (Postal Savings Interest Rates for 1st quarter of 2023-24 - i.e., 01/04/2023 to 30/06/2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

🍁🍁🍁 அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 9 சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...

 சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றிழைக்கப்படும் பிபிஎப், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா என ப்படும் செல்வ மகள் திட்டம் மற்றம் சில திட்டங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை என ஒவ்வொரு காலாண்டும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது. 

இந்த வட்டி விகித மாற்றமானது அரசு பத்திரங்கள் மூலமாகக் கிடைக்கும் வருவாயினைப் பொருத்து அளிக்கப்படுகிறது. எனவே தபால் நிலயத்தில் வழங்கப்படும் 9 வகையான சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன் குறித்து விளக்கமாக இங்கு பார்க்கலாம்.


தபால் அலுவலகச் சேமிப்பு கணக்கு 

தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதுவும் வங்கிகளில் 3.5 சதவீதம் மட்டுமே லாபம் அளிக்கும் நிலையில் தபால் அலுவலகம் 4 சதவீதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாய் வைத்துக் கணக்கை துவங்கும் போது செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும். சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும்.


5 வருட தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள் 

தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஒரு வருடத்திற்கு 7.3 சதவீதம் லாபம் அளிக்கிறது. குறைந்தபட்சம் மாதம் 10 ரூபாய் எனவும் சேமிப்பினை தொடர அனுமதி அளிக்கிறது. ஆனால் வங்கிகளில் குறைந்தபட்சம் 500 ரூபாய் என டெபாசிட் செய்ய வேண்டும். எனவே இது பள்ளி குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கத்தினைக் கற்றுக்கொடுக்கு ஏற்றதாக இருக்கும்.


போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கு         போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. தற்போது ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை வட்டி விகிதம் எப்படி அளிக்கப்படுகிறது என்று இங்குப் பார்க்கலாம். 1 வருட கணக்கு: 6.9% 2 வருட கணக்கு: 7.0% 3 வருட கணக்கு: 7.2% 5 வருட கணக்கு: 7.8% அதிகபட்ச டெபாசிட் வரம்பு என்று ஏதுமில்லை. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.


 தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு 

தற்போது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 7.3 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்ச்ம் வரை டெபாசிட் செய்யலா. இதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் கணக்கு திறக்கும் போது இருவரும் ஒரே சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். முதிர்வு காலம் 5 வருடம். ஒரு வருடத்திற்குப் பிறகு தேவைப்பட்டால் முன்கூடியே பணத்தினை எடுத்துக்கொள்ளலாம்.


மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 

60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு காலம் 5 வருடம். ஆண்டுக்கு 8.7 சதவீத லாபத்தினை அளிக்கிறது.


பிபிஎப் பொது வருங்கால வைப்பு நிதி

பிபிஎப் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5,00 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மொத்தமாக ல்லது 12 மாத தவணையாகவும் முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்ய முடியும். டெபாசிட் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் ஆனால் வட்டி வருவாய்க்குச் செலுத்த தேவையில்லை.


5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் 

5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் தற்போது 8 சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. இன்று 100 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 5 வருடத்திற்குப் பிறகு உங்களுக்கு 144.23 ரூபாய் கிடைக்கும். அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை. வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


கிசான் விகாஸ் பத்ரா 

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆண்டுக்கு 7.7 சதவீத வட்டி விகித லாபத்தினை அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் 118 மாதம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்றும் ஏதும் கிடையாது. பெரியவர்கள் அல்லது மைனர் என யார் பேரில் வேண்டும் என்றாலும் இந்தத் திட்டத்தில் பத்திரதிட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா

 பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக இந்தச் செல்வ மகள் சேமிப்பு திட்டம் இருக்கிறது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யத் துவங்கி 15 வருடம் வரை தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் தற்போது 8.5 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் வரி விலக்கும் பெற முடியும். ஆண்டுக்கு அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns