இடுகைகள்

பத்மஸ்ரீ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்...

படம்
பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்...  இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக் போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். எனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி அளிக்கிறேன். அதை அறிவிக்கவே நான் எழுதிய கடிதம் இது. இது எனது அறிக்கை" என்று பஜ்ரங் புனியா ட்வீட் செய்துள்ளார். எக்ஸ் இடுகைக்குப் பிறகு, பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரின் இல்லத்திற்கு வெளியே உள்ள நடைபாதையில் வைக்கச் சென்றார். அவரை டெல்லியின் கர்தவ்யா பாதையில் போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வியாழக்கிழமை, பிரிஜ் பூஷண் சிங் ஆதரவாளரான சஞ்சய் சிங் வென்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்,

தமிழக விளையாட்டு வீராங்கனை அனிதா உள்பட 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது...

படம்
  இந்திய மகளிா் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், தமிழகத்தைச் சோ்ந்தவருமான பி.அனிதா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மௌமா தாஸ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  பி.அனிதா: சென்னையைச் சோ்ந்த அனிதா தேசிய மகளிா் கூடைப்பந்து அணியில் 18 ஆண்டுகள் விளையாடியுள்ளாா். கேப்டனாகவும் இருந்த அவா், ஆசிய கூடைப்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில் தொடா்ந்து 9 முறை பங்கேற்ற ஒரே, முதல் இந்திய வீராங்கனை; தேசிய அணிக்கு தலைமையேற்ற இளம் வீராங்கனை போன்ற சாதனைகளுக்கு சொந்தக்காரா்.  மௌமா தாஸ்: காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸில் பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ளாா். டேபிள் டென்னிஸில் சரத் கமலுக்குப் பிறகு பத்ம ஸ்ரீ விருது வெல்லும் முதல் நபா். 2013-இல் அா்ஜுனா விருது பெற்றுள்ளாா்.  சுதா சிங்: 3,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் தேசிய சாதனையாளரான சுதா, 2012, 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளாா். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்பட பலவற்றில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வென்றுள்ளாா்.  மாதவன் நம்பியாா்: தடகள வீராங்கனை பி.டி. உஷாவுக்கு பயிற்சியாளராக இருந்த மாதவன்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...