கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

‘அன்பாசிரியர்’ விருது குறித்த தகவல்கள்

 


‘அன்பாசிரியர்’ விருது குறித்த தகவல்கள் 


ஆசிரியர்களுக்கு அன்பின் அழைப்பு.


‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ராம்ராஜ் காட்டன் இணைந்து வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருது ஏழாம் ஆண்டாக வழங்கப்படவிருக்கிறது.


கல்விச்சூழலில் புத்துணர்வோடு புதிய முன்னெடுப்புகளைச் செய்துவரும் ஆசிரியப் பெருமக்களைப் பாராட்டிக் கவுரவிக்கும் நல்முயற்சி.


ஆர்வமுள்ள ஆசிரியர்கள் வரும் 2026 ஜூலை 12-ஆம் தேதிக்குள் விரைந்து பங்கேற்கவும்.


இணைப்பில் க்யூஆர் கோடு தரப்பட்டுள்ளது. அதனை ஸ்கேன் செய்தால் விண்ணப்பம் வரும். அதிலுள்ள விவரங்களைப் பூர்த்திசெய்து அனுப்புங்கள்.


ஆசிரியர்களுக்கு முன்னதான வாழ்த்துகள்.


மாற்றத்திறனாளிகள் சேவைக்கான Award பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



மாற்றத்திறனாளிகள் சேவைக்கான விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவையாற்றிய நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்படவுள்ள மாநில விருதுக்காக https://awards.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு


புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2026

 


அகர முதல்வர்களுக்கு சிகர விருதுகள்!


புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2026


விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது



Environmental Awards 2024 - Website Address to apply



 சுற்றுச்சூழல் விருதுகள் 2024 : செய்தி வெளியீடு எண் 2545, நாள் : 25.10.2025


Environmental Awards 2024 - Website Address to apply



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Indulekha Bringha, Ayurvedic Hair Oil, 250ml+250ml, for Hair Fall Control, with Amla & Coconut Oil, with Comb Applicator (Pack of 2)

Offer Price: Rs.778


Bundle List Price: ₹1,998

Combo Price: ₹778

You Save: ₹1,220 (61%) 


Amazon வலைதள முகவரி இணைப்பு : 

https://amzn.to/47c2PH6


தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கலைமாமணி விருது பெற்றவர்கள்



 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கலைமாமணி விருது பெற்றவர்கள் பட்டியல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


 List of Kalaimamani Awardees for the years 2021, 2022 and 2023 - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது

 மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது 


AWARD OF GANDHI ADIGAL POLICE MEDAL TO FIVE POLICE PERSONNEL FOR THEIR OUTSTANDING WORK IN PROHIBITION ENFORCEMENT




அன்பாசிரியர் விருதுகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு

 அன்பாசிரியர் விருதுகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


Post by Minister Anbil Mahesh presenting the Anbaasiriyar awards


இந்து தமிழ் திசை மற்றும் ராமராஜ் காட்டன் நிறுவனங்கள் இணைந்து “அன்பாசிரியர்” விருது வழங்கும் விழாவை திருச்சியில் ஒருங்கிணைத்திருந்தது.


குழந்தைகளை சிந்திக்க வைத்து நல்ல மனிதர்களாக இந்த சமுதாயத்திற்கு வழங்கும் ஆசிரியப் பெருமைகளைப் பாராட்டி அன்பாசிரியர் விருதுகள் வழங்கினோம்.



விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 2025-26ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சித்தலைவர்



 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 2025-26ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,அவர்கள் தகவல்



>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

 


தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


இதற்கான விண்ணப்ப படிவத்தை பின்வரும் இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tamilvalarchithurai.tn.gov.in/awards https://awards.tn.gov.in www.tamilvalarchithurai.tn.gov.in இத்தகவலை தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:


தமிழ்மொழி, பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றுபவா்களுக்கும், தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. 2026 ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, நிகழாண்டுக்கான (2025) மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, முத்தமிழறிஞா் கலைஞா் விருது, பெருந்தலைவா் காமராஜா் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, பேரறிஞா் அண்ணா விருது, தமிழ்த்தாய் விருது, இலக்கிய மாமணி விருது உள்ளிட்ட 73 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழறிஞா்கள் மேலே உள்ள இணையதளத்தில் 

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து 'தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600008' என்ற முகவரிக்கு செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களோடு அனுப்ப வேண்டும்.


தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 044- 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது

 சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கினார் முதலமைச்சர்



Perasiriyar Anbazhagan Award for Excellent Schools - G.O. (Ms) No: 34, Date : 12-02-2025 - Attachment: DSE Proceedings & Forms


சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது - அரசாணை (நிலை) எண்: 34, நாள் : 12-02-2025 வெளியீடு - இணைப்பு: பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 010421/ எம்2/ இ2/ 2025,  நாள்: 18-02-2025 & படிவங்கள்


Perasiriyar Anbalagan Award for Excellent Schools - Ordinance G.O. (Ms) No: 34, Date : 12-02-2025 Released - Attachment: Director of School Education Proceedings Rc.No : 010421/ M2/ E2/ 2025, Date: 18-02-2025 & Forms



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தெளிவான படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



"Perasiriyar Anbazhagan Award" for Best Schools - DSE Proceedings & Form



பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - "பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 010421/ எம்2/ இ2/ 2025,  நாள்: 18-02-2025 &  படிவம் 



"Perasiriyar Anbazhagan Award" for Best Schools - Request for Selection and Referral of Eligible Schools - Regarding - Proceedings of Director of School Education Rc.No. : 010421/ M2/ E2/ 2025, Date: 18-02-2025 & Form



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Online Interview & Teaching Efficiency Test Dates for Best Science Teacher Award Applicants


 சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தோருக்கு Online Interview &Teaching Efficiency Test நடைபெறும் நாட்கள் அறிவிப்பு


Notification of Online Interview & Teaching Efficiency Test Dates for Best Science Teacher Award Applicants



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Sahitya Akademy Award to A.R Venkatachalapathy



ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது


Sahitya Akademi Award to A.R.Venkatachalapathy


2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது.


'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' ஆய்வு நூலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு.


எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு


"திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.


வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.


ஆளுநர் விருதுகள் Governor Awards 2024 : விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம் - தலா ரூ.5 இலட்சம் பரிசுத்தொகை...



ஆளுநர் விருதுகள்  Governor Awards 2024 : விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம் - தலா ரூ. 5 இலட்சம் பரிசுத்தொகை...


'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


Applications invited for Tamil Nadu Governor Awards 2024 - Each Rs. 5 Lakhs Cash Award...


தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக "ஆளுநர் விருதுகள் 2024"-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அறிமுகப்படுத்திய இந்த விருதுகள், 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 09, 2024 மாலை 05:00 மணி.


'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நிறுவனங்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கப் பரிசும், விருதும் மற்றும் தனிநபர் பிரிவில் தேர்தெடுக்கப்படும் நபருக்கு ரூபாய் இரண்டு இலட்சம் ரொக்கப் பரிசும், விருதும் தமிழ்நாடு ஆளுநரால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26, 2025) வழங்கப்படும்.



தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சுயமாக பரிந்துரைக்கலாம். ஓய்வு பெற்ற இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள், அரசு செயலாளர்கள், அரசு இணை செயலாளர்கள், இந்திய அரசு, தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இரு பிரிவுகளில் சிறந்த வகையில் பணியாற்றிய தகுதியான தனிநபர்கள் / நிறுவனங்களை பரிந்துரைக்கலாம். விண்ணப்பதாரர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்கள் அந்தந்தத் துறையில் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10 வருட காலத்திற்கு சிறப்பான சேவையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.



விண்ணப்பங்களை, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இணையதளத்தில் (https://tnrajbhavan.gov.in/) வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து, awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அனுப்பிவைக்க வேண்டும்.



மேலும், விண்ணப்பத்துடன் துணை ஆவணங்களை இணைத்து, "ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கணக்காயர், ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை - 600 000'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:


“வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” Anna Award for act of bravery - அரசாணை மற்றும் நிபந்தனைகள் G.O.MS.NO. 333, Dated 12-02-1980...

 


“வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” Anna Award for act of bravery - அரசாணை மற்றும் நிபந்தனைகள்...


அண்ணா பதக்கம் 

Award for act of bravery


அரசாணை (நிலை) எண். 333, நாள் : 12-02-1980...

...

அண்ணா பதக்கம்

1.  G.O.MS.NO. 333,  Dated 12-02-1980...


>>> அரசாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அண்ணா பதக்கம்

i. இவ்விருது பதக்க வடிவில் இருக்கவேண்டும். “வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” என பெயரிடப்பட்டிருக்க வேண்டும்.


ii. இப்பதக்கம் வட்ட வடிவத்தில் தங்க முலாம் பூசிய வெள்ளியால் (3/3 விட்ட அளவில்) தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பதக்கத்திற்கான செலவு ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) ஆக இருக்க வேண்டும்.


iii. இப்பதக்கத்துடன் கூடுதலாக ரூ.1.00 லட்சத்திற்கான (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் விருதாளருக்கு வழங்கப்படவேண்டும்.


iv. இப்பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும் வயதினை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் அவர் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழக்கப்படவேண்டும்.


v. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பரிந்துரைகள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும். பரிந்துரைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.


பொது மக்கள் பிரிவில் மூவருக்கும், அரசு ஊழியர்கள் பிரிவில் மூவருக்கும் என ஆறு நபர்களுக்கு இப்பதக்கம் வழங்கலாம் என்பதற்கு அரசாணை (நிலை) எண்.734, பொது (பொது-1)த் துறை, நாள் 01.04.1986- ல் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவின் போது வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.


2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - தேர்வு பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது...

 


2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - தேர்வு பெற்றவர்களுக்கு  ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது...


மாணாக்கர்களின் அறிவை வடிவமைப்பதிலும் , அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும் , உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை தேர்ந்தெடுப்பதற்கும் மற்றும் அறிவியலாளர்களாக உருவாகுவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.



அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018-2019 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


2022-2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதை மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு ஆர்எஸ்ராஜகண்ணப்பன் அவர்கள் , உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் திரு ஆகார்த்திக் இஆப , மற்றும் அறிவியல் நகரம்  முதன்மைச் செயலர் துணைத் தலைவர் திரு. தேவ் ராஜ் தேவ் , இஆப ஆகியோர்களின் முன்னிலையில் இன்று ( 11.03.2024 ) சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார்கள்.


விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு

1. இயற்பியல் துறையில் திருமதி. ச.ர.பிந்துலேகா , முதுகலை ஆசிரியை அரசு மேல்நிலைப்பள்ளி , கொட்டாரம்- 629703. கன்னியாகுமரி மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது .


2. உயிரியல் துறையில் திருமதி சு.சங்கீதா , பட்டதாரி ஆசிரியை , அரசு மேல்நிலைப்பள்ளி சேடப்பட்டி -625 527 , மதுரை மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.



சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களால் தலா ரூ .25,000 / - (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.




தலா ரூ.10 இலட்சம் ஊக்கத்தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் - சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 100 தலைமை ஆசிரியர்கள் பட்டியல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024...



 பள்ளிக்கல்வி - அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 2023-2024 - மாநில தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா நடைபெறுதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024...



 தலா ரூ.10 இலட்சம் ஊக்கத்தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் - சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 100 தலைமை ஆசிரியர்கள் பட்டியல்...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது - 2023-2024 - தேர்வு செய்யப்பட்டுள்ள 76 பள்ளிகள் பட்டியல்...



 சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது - 2023-2024 - தேர்வு செய்யப்பட்டுள்ள 76 பள்ளிகள் பட்டியல்...



Perasiriyar Anbazhaganar Award for Best Schools - 2023-2024 - List of 76 Selected schools...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்