கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளி குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோவிட் பாதிப்பு குழந்தைகள் பராமரிப்பு; மத்திய அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு...

 


கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக, மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.


உத்தரவு

கோவிட் தொற்றால், 9,346 குழந்தைகள், தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 1,700க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தையரை பறிகொடுத்துள்ளனர். இத்தகைய குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலர் ராம் மோகன் மிஸ்ரா, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


பெற்றோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, உறவுகள் ஏதுமில்லாத குழந்தைகளை பராமரிக்க, சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின் கீழ், தற்காலிக குழந்தை பராமரிப்பு மையங்களை, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது, குழந்தைகளை பராமரிக்கும் நம்பிக்கைக்குரியவரின் விபரங்களை பெறும்படி, மருத்துவமனைகளுக்கு, அரசு உத்தரவிட வேண்டும். பெற்றோரின் நிலையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, மன நல மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவதற்கு, உதவி தொலைபேசி எண் வசதியை ஏற்படுத்த வேண்டும்.


கலெக்டர்கள், மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு வசதிகளை கண்காணிக்க வேண்டும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் குடும்ப சொத்துக்களின் விற்பனை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தடுக்க வேண்டும். இதற்கு பத்திரப் பதிவு அலுவலகம் அல்லது வருவாய் துறை வாயிலாக உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.


பாதுகாப்பு

கோவிட் தொற்றால் அனாதையான குழந்தைகள் குறித்த விபரங்களை, நகர்ப்புறம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், இந்நிர்வாகங்களிடம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு அறிவித்து உள்ள திட்டங்களை விளக்கி, உரிய பயன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா பரவலால் 2.4 கோடி குழந்தைகள் படிப்பை கைவிடும் அபாயம்...

'கொரோனா வைரஸ் நெருக்கடியால், உலகம் முழுவதும், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடக்கூடும்' என்ற தகவல், ஆய்வில் தெரியவந்துள்ளது.



உலகில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து நாடுகளும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த கொரோனா நெருக்கடியால், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், பள்ளி படிப்பை கைவிடக்கூடும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது.


இந்தியாவிலும், ஏராளமான ஏழைக் குழந்தைகள், பள்ளிக்கு மீண்டும் செல்வதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. ' கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால், அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தமுடியாமல், பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடப்பதால், அதற்கு தேவையான உபகரணங்கள் இன்றி, ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், நிதிச் சுமையில் தள்ளாடும் ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுவதாக, சமூக நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...