கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Child Safety in School Handbook - 2024-2025



பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு - 2024-2025 - வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை



Child Safety in School Handbook - 2024-2025 - Published by: Department of School Education - Samagra Shiksha, State Project Directorate, Chennai



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் - DEE Proceedings, நாள் : 14-10-2024...



 தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டு பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-10-2024...


Elementary Education - Precautionary Rainfall Safety Measures in Panchayat Union / Municipal / Government Primary and Middle Schools for the academic year 2024-25 issuance of instructions regarding - Proceedings of the Director of Elementary Education, Dated : 14-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


COMBINED DEFENCE SERVICES EXAMINATION (I), 2024 - 457 Vacancies - Last Date for Submission of Applications: 09.01.2024...



COMBINED DEFENCE SERVICES EXAMINATION (I), 2024 - INCLUDING SSC WOMEN (NON-TECHNICAL) COURSE - Last Date for Submission of Applications: 09.01.2024...



>>>  CLICK HERE TO DOWNLOAD EXAMINATION NOTICE NO.4/2024.CDS-I, DATED 20.12.2023...



தேசிய பாதுகாப்பு அகாடமியில் 400 காலியிடங்கள்...


NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION: 2024ம் ஆண்டுக்கான தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (I) தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் ஜனவரி 9ம் தேதிக்குள் (09.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதில் தேர்வானால் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ சேவைகள் தேர்வு வாரியம் நடத்தும் (எஸ்.எஸ்.பி) நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறலாம். நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், 2025 ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்கவுள்ள 115-வது கடற்படை பயிற்சி வகுப்பு மற்றும் 153-வது தேசிய ராணுவ அகாடமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: 400

தேசிய பாதுகாப்பு அகாடமி

ராணுவம் - 208 (மகளிர் 10)

கடற்படை - 42 (மகளிர் 12)

விமான படை -120 (மகளிர் - 06)

கடற்படை அகாடமி

இந்திய கடற்படை அகாடமி - 30 (மகளிர் - 09)

யார் விண்ணப்பிக்கலாம்: திருமணமாகாத ஆண்/பெண் இந்திய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 2005 ஜுலை 2ம் தேதிக்கு பின்பாக பிறந்தவர்கள் மற்றும் 2008, ஜுலை 1ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்வித் தகுதி: 10+2 கல்வி முறையில் அல்லது இதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் கடற்படை, விமான படை பதவிக்கும், கடற்படை அகாடமி பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


முக்கியமான நாட்கள்:

அறிவிக்கை வெளியான நாள்: 20.12.2023 ;

விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள் : 09.01.2024;

விண்ணப்பம் செய்வது எப்படி:

விண்ணப்பதாரர்கள், upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம்.

இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பான் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை , மாணவர் அடையாள அட்டை என மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணலின் போது, பதிவேற்றம் செய்த அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மகளிர்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முடிவுகள் வெளியான 2 வாரத்துக்குள், இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் joinindianarmy.nic.in பதிவு செய்ய வேண்டும். அதன்பின்பு வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான தேர்வு மையம் மற்றும் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தெளிவுரை வேண்டுவோர்: மேலும் தகவல்களுக்கு, யுபிஎஸ்சி 'சி' நுழைவு வாயில் அருகேயுள்ள உதவி மையத்தை நேரடியாகவும், 011-23385271/011-23381125 / 011-23098543 என்ற போன் எண்களிலும், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.


நகர்ப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய ஏதுவாக நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றில் வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை (WLCPC) அமைத்தல் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 50, நாள்: 17-07-2023 (G.O. (Ms) No: 50, Dated: 17-07-2023 regarding setting up of Ward Level Child Protection Committees (WLCPC) in Town Panchayat, Municipality, Corporation and Chennai Metropolitan Corporation to ensure child safety in urban areas)...

 

>>> நகர்ப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய ஏதுவாக நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றில் வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை (WLCPC) அமைத்தல் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 50, நாள்: 17-07-2023 (G.O. (Ms) No: 50, Dated: 17-07-2023 regarding setting up of Ward Level Child Protection Committees (WLCPC) in Town Panchayat, Municipality, Corporation and Chennai Metropolitan Corporation to ensure child safety in urban areas)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பத்தாம் வகுப்பு / ஐடிஐ படித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு - 1793 பணியிடங்கள் (Employment in Ministry of Defense of India for Matriculation / ITI Holders - 1793 Vacancies - DETAILED ADVERTISEMENT - GOVERNMENT OF INDIA, MINISTRY OF DEFENCE - FILLING UP OF THE DEFENCE CIVILIAN POSTS AT VARIOUS UNITS/DEPOTS IN GOVERNMENT OF INDIA, MINISTRY OF DEFENCE - CENTRAL RECRUITMENT CELL C/O ARMY ORDNANCE CORPS CENTRE, SECUNDERABAD, PIN-500015 - ADVERTISEMENT NUMBER: AOC/CRC/2023/JAN/AOC-02)...

 


>>> பத்தாம் வகுப்பு / ஐடிஐ படித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு - 1793 பணியிடங்கள் (DETAILED ADVERTISEMENT - GOVERNMENT OF INDIA, MINISTRY OF DEFENCE - FILLING UP OF THE DEFENCE CIVILIAN POSTS AT VARIOUS UNITS/DEPOTS IN  GOVERNMENT OF INDIA, MINISTRY OF DEFENCE - CENTRAL RECRUITMENT CELL C/O ARMY ORDNANCE CORPS CENTRE, SECUNDERABAD, PIN-500015 - ADVERTISEMENT NUMBER: AOC/CRC/2023/JAN/AOC-02)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - ரூ.2000 நிதி விடுவித்தல் - பள்ளி & வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Safety and Security of Children at School Level - Release of Rs.2000 - Work to be done in Schools & Blocks - Proceedings of Chief Educational Officer)...


>>> பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - ரூ.2000 நிதி விடுவித்தல் - பள்ளி & வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Safety and Security of Children at School Level - Release of Rs.2000 - Work to be done in Schools & Blocks - Proceedings of Chief Educational Officer)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கோவிட் பாதிப்பு குழந்தைகள் பராமரிப்பு; மத்திய அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு...

 


கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக, மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.


உத்தரவு

கோவிட் தொற்றால், 9,346 குழந்தைகள், தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 1,700க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தையரை பறிகொடுத்துள்ளனர். இத்தகைய குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலர் ராம் மோகன் மிஸ்ரா, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


பெற்றோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, உறவுகள் ஏதுமில்லாத குழந்தைகளை பராமரிக்க, சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின் கீழ், தற்காலிக குழந்தை பராமரிப்பு மையங்களை, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது, குழந்தைகளை பராமரிக்கும் நம்பிக்கைக்குரியவரின் விபரங்களை பெறும்படி, மருத்துவமனைகளுக்கு, அரசு உத்தரவிட வேண்டும். பெற்றோரின் நிலையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, மன நல மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவதற்கு, உதவி தொலைபேசி எண் வசதியை ஏற்படுத்த வேண்டும்.


கலெக்டர்கள், மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு வசதிகளை கண்காணிக்க வேண்டும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் குடும்ப சொத்துக்களின் விற்பனை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தடுக்க வேண்டும். இதற்கு பத்திரப் பதிவு அலுவலகம் அல்லது வருவாய் துறை வாயிலாக உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.


பாதுகாப்பு

கோவிட் தொற்றால் அனாதையான குழந்தைகள் குறித்த விபரங்களை, நகர்ப்புறம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், இந்நிர்வாகங்களிடம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு அறிவித்து உள்ள திட்டங்களை விளக்கி, உரிய பயன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முகநூல் செயலியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி...?



How to use Facebook App safely ...?

முகநூல் நம் விவரங்களை நாம் ஆஃப்லைனில் இருக்கும்போதும் 

Settings -> Off-Facebook Activity சென்றால், அந்த பகுதியில் நாம் என்னென்ன வலைதளங்களுக்கு சென்றோம், செயலிகள் உபயோகித்தோம் போன்ற விவரங்களை காணலாம். (அதை விளம்பரதாரர்களுக்கு கொடுக்க, அவர்கள் நம்மை தொடர்பு கொள்கிறார்கள்).

Settings -> Off-Facebook Activity -> Clear Historyஐ அழுத்தினால், அடித்த பக்கத்தில் மீண்டும் Clear Historyஐ அழுத்தி உறுதி செய்ததும், History அழிகிறது. (இனி விளம்பரங்கள் வராது - அடுத்த ஹிஸ்டரி சேரும் வரை)

அதோடு முடிவதில்லை இந்த விவகாரம். மேலும் ஹிஸ்டரி சேராமல் இருக்க, 

Settings -> Off-Facebook Activity -> More Optionsஇல் அழுத்தவும். அதையடுத்து வரும் பக்கத்தில், “Manage Future Actvity”ஐ அழுத்தவும். 

அடுத்த பக்கத்தில் மீண்டும் Manage Future Actvityஐ கொடுத்து  அழுத்தவும்.

இறுதியாக தோன்றும் பக்கத்தில், “Future Off-Facebook Activity”ஐ Off நிலைக்கு தள்ளவும். மீண்டும் “Turn-Off”ஐ அழுத்தி -  உறுதி செய்யவும். 

இனி நீங்கள் பாதுகாப்பாக முகநூல் செயலியைப் பயன்படுத்தலாம்...

"பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் நிதி ஒதுக்கீடு...

 


பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக, “பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதன் உயரிய நோக்கம், உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில், பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும், தன்சுத்தத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும். எனவே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக, பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் அனைத்து வட்டார வளமையங்களுக்கு 1758 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக இணைப்பில் காணும் அட்டவணைப்படி நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.


வழிகாட்டுதல்கள்

மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டியவை:

மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து நிதி விடுவிக்கப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நிதியை விடுவித்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும்.

மேலும், அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது. அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

4. கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

மேற்காணும் வழிகாட்டுதல்கள் மற்றும் அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றவும் விடுவிக்கப்பட்ட நிதியினை ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.500/- வீதம் வட்டார வளமையத்திலிருந்து PFMS வாயிலாக தொகை விடுவித்தல் வேண்டும். தொகை விடுவிக்கப்பட்ட விவரத்தினை 23.12.2020 க்குள் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

இணைப்பு : Safety & Security Block wise Fund Released Abstract

>>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...