கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதுமைப் பெண் திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுமைப் பெண் திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Percentage of girls enrolled in colleges through 'Puthumai Penn' scheme



 


 'புதுமைப்பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் சேர்ந்துள்ளவர்கள் சதவீதம்


Percentage of girls enrolled in colleges through 'Puthumai Penn' scheme


விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 27.6% விவசாயம் அல்லாத குடும்பங்களைச் சார்ந்தவர்கள் 39.3% 'புதுமைப்பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்


புதுமைப்பெண் திட்டம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை சென்னை பாரதியார் மகளிர் கல்லூரியில் 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிட ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023ம் நிதியாண்டில் 2,09,365 மாணவியர்கள் பயனடைந்து வந்த நிலையில், 2023-2024ம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் என்பதே இத்திட்டத்தின் வெற்றிக்கு அடையாளமாகும்.


புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 3,28,280 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இச்சிறப்பு வாய்ந்த திட்டமானது 2024-2025ம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுவது போல, அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியன்று கோவை மாநகரில் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.


இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயனடைகிறார்கள். இந்த மகத்தான திட்டத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு ரூ.360 கோடி இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது. பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது.


புதுமைப்பெண் திட்டம் குறித்து மாநில திட்டக் குழுவினால் ஈரோடு, வேலூர், திருவள்ளூர், சென்னை, சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 5,095 மாணவிகள் பயிலக்கூடிய 84 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு 2023 நவம்பர் முதல் 2024 பிப்ரவரி வரை நடைபெற்றது. இந்த ஆய்வின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள மாணவிகளைவிட கிராமப்புற மாணவிகள் இத்திட்டத்தால் அதிகளவில் பயனடைந்துள்ளனர் என்பதும், பொருளாதாரக் குறைவு காரணமாக படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருந்த கிராமப்புற மாணவிகள் உயர்கல்வியைத் தொடர்வதற்கு நல்ல வாய்ப்புகளை வழங்கியுள்ளது.


இத் திட்டப் பயனாளிகளில், பிற்படுத்தப்பட்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சமூகங்களைச் சார்ந்தவர்கள் 99.2 சதவீத மாணவிகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களில், ஏறத்தாழ 3 சதவீதத்தினர் பெற்றோர் இருவரையும் அல்லது தாய்-தந்தை இருவரில் ஒருவரை இழந்தவர்கள் என்பதுடன் இவர்களில் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 27.6 சதவீதத்தினரும், விவசாயம் அல்லாத குடும்பங்களைச் சார்ந்தவர்கள் 39.3 சதவீதத்தினரும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகளை இத்திட்டத்தினால் பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.







PUDHUMAI PEN Scheme - 38 Districts - Total No. Data for Verification - Action Taken - Verification Pending - School Data Updation Pending Report

 


புதுமைப் பெண் திட்டம் - 38 மாவட்டங்களில் விண்ணப்பித்தோர்,  சரிபார்க்கப்பட்ட & நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எண்ணிக்கை அறிக்கை


PUDHUMAI PEN Scheme - 38 Districts - Total No. Data for Verification - Action Taken - Verification Pending - School Data Updation Pending Report as on 15/11/2024 05:00PM



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டம் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை G.O. Ms. No. 16, Dated: 11-03-2024 வெளியீடு...



மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டம் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை G.O. Ms. No. 16, Dated: 11-03-2024 வெளியீடு...


நிதி உதவி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் மூவாமிர்தம் அம்மையார் நினைவு நிதி உதவித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது...


Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme - Pudhumai Penn Scheme - Extending to girl students studying in government aided schools, G.O. Ms. No. 16, Dated: 11-03-2024 Released...



>>> Click Here to Download G.O. Ms. No. 16, Dated: 11-03-2024...


அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது (The scheme, which provides Rs.1000 per month for Higher Education to girl students Studied in Government Schools, is named ``Innovation Girl Scheme'')...

 அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது (The scheme, which provides Rs.1000 per month for Higher Education to girl students Studied in Government Schools, is named ``Innovation Girl Scheme'')...













இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...