கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதல்வரின் முகவரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்வரின் முகவரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கம் - அரசாணை (நிலை) எண்: 944, நாள்: 03-11-2021 வெளியீடு - இந்த துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பாபிரபாகர் சதீஷ் இ.ஆ.ப. நியமனம் (Creation of a new department called "Chief Minister's Address")...

>>> அரசாணை (நிலை) எண்: 944, நாள்: 03-11-2021...

முதல்வரின் குறைதீா்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ’முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு(IIPGCMS), உங்கள் தொகுதியில் முதல்வா் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.

முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும்.

இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Unit 5 - February 3rd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Std

  4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - அலகு5 – பிப்ரவரி 4வது வாரம் (Term 3 - Unit 5 - February 3rd Week - Les...