கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரூபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரூபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பழைய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு - ரிசர்வ் வங்கி...

பழைய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்படுகிறதா? ரிசர்வ் வங்கி விளக்கம்

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் ரூ .100, ரூ .10, மற்றும் ரூ .5 உள்ளிட்ட பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி.மகேஷ் கூறியுள்ளார்.

மங்களூருவில் மாவட்ட வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்புக் குழு (District Level Security Committee (DLSC)) மற்றும் மாவட்ட அளவிலான நாணய மேலாண்மைக் குழு (District Level Currency Management Committee (DLMC) கூட்டத்தில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி மகேஷ் பேசும் போது, மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் ரிசர்வ் வங்கி பழைய 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதால், அவை புழக்கத்தில் இருக்காது என்று கூறினார்.

அக்கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், “10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும், வர்த்தகர்களும் வியாபாரிகளும் அந்த நாணயங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள், இது மற்ற வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால் பெரும்பாலான வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் குவிந்துள்ளன.

10 ரூபாய் நாணயம் செல்லாது என கூறப்படுவது ஒரு வதந்தி என்பதை வங்கிகள் மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும், ரூ .10 நாணயத்தை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கொண்டுவருவதற்கான வழிகளை வங்கிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மகேஷ் கூறினார். புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை சில வருடங்களுக்கு முன்பு மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புதிய ரூபாய் நோட்டு இளம் ஊதா நிறத்தில் இருந்தது. ரூபாய் நோட்டின் பின்புறத்தில் குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற ராணி ( RANI KI VAV) படிக்கல் கிணற்றின் படம் இடம்பெற்றுள்ளது.

மேலும் அதில் தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமும், ஸ்லோகனும் இடம்பெற்றிருக்கும். கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட விவரங்களும் முற்றிலும் மாற்றப்பட்டிருந்தன. பழைய 500 ரூபாய் நோட்டில் காந்தியின் தண்டி யாத்திரை படம் இடம்பெற்றிருக்கும். புதிய 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

பிங்க் நிறத்தில் வெளிவந்த 2,000 ரூபாய் நோட்டு தான் அவற்றில் ஹைலைட். இந்த வரிசையில் 100 ரூபாய் நோட்டும் புதுப்பொலிவு பெற்றிருந்தது. அதேபோல், புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி 2018 ஜன. 5ஆம் தேதி வெளியிட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு 10 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2017ல் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. புதிய நோட்டில் அப்போதைய RBI கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்களின் கையொப்பம் இடம்பெற்றிருந்தது. சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தியின் உருவப்படம், பின்புறத்தில் கோனார்க் சூரியக் கோயில் படமும் அச்சிடப்பட்டுள்ளது.

63 மிமீ×123மிமீ என்ற அளவில் ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டுள்ளது. 10 என்பது தேவநகரி மொழியில் எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்புறத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் இலச்சினையும் இடம்பெற்றுள்ளது. புதிய நோட்டு புழக்கத்திற்கு வந்தாலும் பழைய ரூ.10 நோட்டுகளும் செல்லும் என RBI முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் இப்போது பழைய 10 ரூபாய் நோட்டுகள் நம்மிடமிருந்து விடைபெறவுள்ளது. 

2019 ஆம் ஆண்டில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் (ரிசர்வ் வங்கி) கேட்கப்பட்ட கேள்விக்கு (RTI query) பதிலளித்த RBI, அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...