கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Gold Rate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Gold Rate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தங்க நகைகள் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள்



 தங்கம் வாங்கும் பொழுது இதையெல்லாம் சரிபார்த்து வாங்கினால் பின்னாளில் விற்கும் போதும், நகை அடமானம் வைக்கும் போதும் அது நமக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக இந்த பதிவு 


தங்க நகைகள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள்


Important things to consider when buying gold jewelry


நீங்கள் வாங்கும் தங்க நகைகளில்


1. BIS (Bureau of Indian Standards) இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் முத்திரை உள்ளதா என பார்க்க வேண்டும்.



2. நகைகளில் ஆறு இலக்க HUID (Hallmark Unique Identification) Number உள்ளதா என பார்க்க வேண்டும்.. நகைகள் ஹால்மார்க் செய்யும் போது ஒவ்வொரு நகைகளுக்கும் 6 இலக்க HUID number குறிப்பிடப்படுகிறது



3. 22K அல்லது 24K நகைகளில் 916 ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதை கவனிக்கவும்..


இதையெல்லாம் சரிபார்த்து வாங்கினால் அதன் தரம், தூய்மை இவைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.


இதுநாள் வரை நகை வாங்கும்போது இதையெல்லாம் கவனிக்காமல் வாங்கி இருந்தால் பரவாயில்லை இனிமேல் வாங்க சென்றால் இதையெல்லாம் கவனித்து வாங்கவும்.


இந்த பதிவின் நோக்கம் உங்களைத் தங்க நகை வாங்க சொல்வதற்காக அல்ல.. ஒருவேளை நீங்கள் நகை வாங்க சென்றால் இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள் என்பதற்காக விழிப்புணர்வு கொடுப்பதற்காக  மட்டுமே.



தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3250 வரை குறையும் - பங்கு சந்தை நிபுணர் கணிப்பு

 


தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3250 வரை குறையும் - பங்கு சந்தை நிபுணர் கணிப்பு


தங்கத்தின் விலை 38% குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.


டிரம்ப் உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருக்கிறார். அதன் எதிரொலியாக தங்கம் மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறது.


தங்கம் விலை சுமார் 38 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடையும் என நிபுணர் ஜான் மில்ஸ் கணிப்பு


நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.


இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,560 ஆகும். இதில் 38% என்பது ரூ.3250 ஆகும்.


இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,480 ஆகும்.


இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.112 ஆகும்.


என்ன சொல்கிறார் நிபுணர்?

தங்கம் விலை குறையும்! - எவ்வளவு?



உலகமே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது, இன்னமும் உயரும் என்ற பயத்தில் இருக்கிறது. பெரும்பாலான நிபுணர்களின் கருத்து இந்தியாவில் தங்கம் விலை 2027-ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்பது ஆகும்.


ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்காவை சேர்ந்த மூத்த பங்குச்சந்தை நிபுணரான ஜான் மில்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை 38% குறையும் என்று கூறியுள்ளார்.


அவர் தற்போதுள்ள தங்கத்தின் விலையில் 38 சதவீதம் வரை குறையலாம் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பார்க்கும்போது கிராம் ஒன்றுக்கு ரூ. 3,250 வரையில் தங்கத்தின் விலை குறையக்கூடும்


அவர், "அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1,820 டாலர்களாக குறையும். இது கிட்டதட்ட 38 சதவிகித வீழ்ச்சி ஆகும்" என்று கணித்துள்ளார்.


இப்போதைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,153.64 டாலர்கள் ஆகும்.


சமீப நாள்களாகவே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களிலேயே சவரன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உயர்ந்திருந்தது. அதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே வரி விதித்து அதனை அறிவித்துள்ளார். இதுவும் உலக சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.


உச்சத்தில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் இந்திய ரூபாயில் 2 லட்சத்து 59 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. ஒரு அவுன்ஸ் என்பது 28.3 கிராம் ஆகும். அந்த வகையில், சர்வதேச சந்தையில் கிராம் ஒன்று சுமார் ரூ.8,330 ஆக உள்ளது என கூறலாம். சென்னையை பொறுத்தவரை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.68,480 ஆகவும், ஒரு கிராம் ரூ.8,560 ஆகவும் உயர்ந்துள்ளது. விரைவில் கிராம் ரூ.10 ஆயிரத்தை எட்டும் என பலர் கூறி வருகின்றனர்.



தங்கம் விலை 38% குறையும் - கணிப்பு

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக 38% வரை குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புதான் பலரையும் வியக்க வைத்துள்ளது. 


அதாவது, யாரும் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டிருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என அமெரிக்காவை சேர்ந்த பங்குச் சந்தை நிபுணரான ஜான் மில்ஸ் கணித்துள்ளாராம். அதாவது, கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 என்று இருந்த நிலையில், இதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.55,496 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.




Gold Price: ஜான் வில்ஸ் கூறும் 3 காரணங்கள்

ஜான் மில்ஸ் இதற்கு 3 காரணங்களை சொல்கிறார். தங்கம் விலை அதிகரிப்பால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும்; தங்கத்தின் மீதிருக்கும் தற்போதைய டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறையாது; உலகில் உச்சம் தொடும் ஒன்று நிச்சயம் ஒருநாள் வீழ்ச்சி அடையும் என்பதை வரலாறு நெடுக பார்த்திருக்கிறோம் - என இந்த மூன்று காரணங்களால் தங்கம் விலை 38% குறையும் என்கிறார்.



Gold Price: கணிப்பு மெய்யாகுமா...?

ஆனால், இன்னும் சில பொருளாதார நிபுணர்களோ இவர் கூறும் காரணங்களை ஏற்க மறுக்கின்றனர். தங்கத்தின் டிமாண்ட் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றாலும் அது இந்தளவிற்கு வீழ்ச்சியை காணாது என்றும் சிலர் கூறுகிறார்கள். சர்வதேச அரசியல் நிலவரத்தை  ஜான் வில்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். நிச்சயம் தங்கம் விலை 38% வீழ்ச்சி அடையாது என பலரும் கருதுவது குறிப்பிடத்தக்கது.


ஜான் மில்ஸ் என்கிற அமெரிக்க அனலிஸ்ட் தங்கத்தின் விலை தற்போதைக்கு அதிகரித்தாலும், நீண்ட கால நோக்கில் கணக்கிட்டால் 38% வரை குறையும் என கணித்திருக்கிறார். அதே சமயம், தற்போதைய தங்கத்தின் விலைக்கும், இந்த கணிப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.


இந்த மூன்று நிகழ்வுகள் நடந்தால், தங்கத்தின் விலை குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.



1. தங்கத்தின் விலை அதிகரிப்பதால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும் என கணிக்கிறார் மில்ஸ்.


2. தங்கத்தின் மீதிருக்கும் இந்த டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. மத்திய வங்கிகளும், முதலீட்டாளர்களும் தங்கத்தில் இப்போது அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். அதே சமயம், இந்த முதலீடு மேலும் அதிகரிக்காது என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இது குறையலாம் அல்லது இதே அளவில் இருக்கலாமே ஒழிய, முதலீடு அதிகரிக்காது .


3. பொதுவாகவே உச்சம் தொடும் எந்தவொரு விஷயமும் , கீழ் இறங்கும் என்பதே இத்தனை ஆண்டுகால வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.


ஜான் மில்ஸ் இப்படி கணித்திருந்தாலும், அமெரிக்க வங்கி, கோல்ட்மேன் சேக்ஸ் உள்ளிட்ட பிரபல கணிப்பாளர்கள் தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் உயரவே வாய்ப்பதிகம் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...