கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

JEE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JEE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளிக்கல்வி - போட்டித்‌ தேர்வுகள்‌ - 2023-2024-ஆம்‌ கல்வியாண்டில்‌ NEET / JEE உள்ளிட்ட போட்டித்‌ தேர்வுகளுக்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல்‌- தொடர்பயிற்சி அளித்தல்‌ - வழிகாட்டு நெறிமுறைகள்‌ (Standard Operating Procedure - School Education - Competitive Examinations - Preparation of students for competitive examinations including NEET / JEE in the academic year 2023-2024 - Providing continuous training - Standard Operating Procedure)...


 பள்ளிக்கல்வி - போட்டித்‌ தேர்வுகள்‌ - 2023-2024-ஆம்‌ கல்வியாண்டில்‌ NEET / JEE உள்ளிட்ட போட்டித்‌ தேர்வுகளுக்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல்‌- தொடர்பயிற்சி அளித்தல்‌ - வழிகாட்டு நெறிமுறைகள்‌ (Standard Operating Procedure - School Education - Competitive Examinations - Preparation of students for competitive examinations including NEET / JEE in the academic year 2023-2024 - Providing continuous training - Standard Operating Procedure)...



>>> வழிகாட்டு நெறிமுறைகள்‌ - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இணை இயக்குநர்‌ (தொழிற்கல்வி)


விருப்பமுள்ள மாணவ / மாணவிகளை தேர்வு செய்ய வழிகாட்டுதல்‌

பயிற்சிக்கான கால அட்டவணையை மாநிலக்‌ குழுவின்‌ உதவியோடு தயார்‌ செய்தல்‌

பயிற்சிக்குரிய வினாத்தாட்களைத்‌ தயார்‌ செய்ய முகாம்‌ நடத்துதல்‌

வினாவிற்கான விடைகளைத்‌ தயாரித்தல்‌

பயிற்சிக்குத்‌ தேவையான காணொளிக்‌ காட்சிகளைத்‌ தயாரித்தல்‌

குழுக்களின்‌ பணிகளை ஒருங்கிணைத்தல்‌

மாவட்ட பணிகளை ஆய்வு செய்தல்‌

மாநில புலனக்குழு /மாவட்ட புலனக்குழு ஏற்படுத்துதல்‌ 

அரையாண்டு மற்றும்‌ முழு ஆண்டு விடுமுறை நாட்களில்‌ பயிற்சி 

வகுப்புகள்‌ நடைபெறச்‌ செய்தல்‌.


மாநில அளவிலான கல்வி சார்‌ உதவிக்குழு


JEE / NEET உள்ளிட்ட நுழைவுத்‌ தேர்வு  பயிற்சிக்கு கால அட்டவணை தயார்‌ செய்தல்‌

பயிற்சிக்குரிய வினாத்தாட்கள்‌/ விடைக்குறிப்புகள்‌ தயார்‌ செய்தல்‌ (உரிய காலக்கட்டத்திற்குள்‌ ஒப்படைத்தல்‌),

ஒவ்வொரு வாரமும்‌ வெள்ளிக்கிழமை மாணவ / மாணவிகளுக்கு ஏற்படும்‌ சந்தேகங்களை மாவட்டக்‌ குழுக்கள்‌ விளக்குவதை 

அரையாண்டு மற்றும்‌ முழு ஆண்டு விடுமுறை நாட்களில்‌ வட்டார அளவில்‌ பயிற்சி வகுப்புகள்‌  நடத்தப்படுவதைக்‌ கண்காணித்தல்‌. 

பாடம்‌ ஒன்றிற்கு 4 ஆசிரியர்கள்‌ வீதம்‌ 20 ஆசிரியர்களை ஒன்றிணைத்து செயல்படுதல்‌



ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE) (முதன்மை) - 2023 அமர்வு 2 (ஏப்ரல் 2023) 06 ஏப்ரல் 2023 அன்று தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான நுழைவு சீட்டு வெளியீடு - தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பு (Release of Admit Cards for the Candidates of Joint Entrance Examination (Main) – 2023 Session 2 (April 2023) scheduled to appear on 06 April 2023 - Regarding - Public Notice of National Testing Agency)...



>>> ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE) (முதன்மை) - 2023 அமர்வு 2 (ஏப்ரல் 2023) 06 ஏப்ரல் 2023 அன்று தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான நுழைவு சீட்டு வெளியீடு - தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பு (Release of Admit Cards for the Candidates of Joint Entrance Examination (Main) – 2023 Session 2 (April 2023) scheduled to appear on 06 April 2023 - Regarding - Public Notice of National Testing Agency)...

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

JEE - முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது (JEE - Main Exam Results Declared)...



 JEE - முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது (JEE - Main Exam Results Declared)...


2022ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



ஜேஇஇ முதல்நிலை மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும். மேலும், இந்தத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.




மாணவா்களின் வசதிக்காக ஜேஇஇ முதல்நிலைத் தோ்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தோ்வுகளில் மாணவா் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதனையே சோ்க்கைக்கான மதிப்பெண்ணாக தெரிவு செய்துகொள்ள முடியும்.




அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூன் மாதத்திலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூலையிலும் நடத்தப்பட்டது. இரண்டு கட்டத்திலும் 10,26,799 போ் பதிவு செய்து, 9,05,590 போ் எழுதினா். இவா்களில், 4,04,256 மாணவ, மாணவிகள் இரண்டு கட்ட முதல்நிலைத் தோ்விலும் பங்கேற்று எழுதினா்.




ஐஐடியில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி பெற்ற 40,712 பேரில் 6,516 பேர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 30% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 26.17% ஆக குறைந்துள்ளது.





JEE Main நான்காம் கட்ட தேர்விற்கான தேதி மாற்றம்...

 


ஜேஇஇ மெயின் நான்காம் கட்ட தேர்விற்கான தேதி மாற்றம்:


ஜேஇஇ மெயின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25 வரையும், நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


மூன்றாம் கட்ட தேர்விற்கும், நான்காம் கட்ட தேர்விற்கும் இடையே குறைந்தது 4 வாரங்கள் இடைவெளி தேவை என தேசிய தேர்வுகள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


இதனால், ஜேஇஇ நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 தேதிகளுக்கு மாற்றப்படுகிறது.


ஜேஇஇ நான்காம் கட்ட தேர்விற்கு இதுவரை 7.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 


விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக ஜூலை 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது.


JEE & NEET நுழைவுத்தேர்வு எப்போது ? தேசிய தேர்வு முகமை அதிகாரி தகவல்...

 JEE & NEET நுழைவுத்தேர்வு எப்போது ? தேசிய தேர்வு முகமை அதிகாரி தகவல்...

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டு வருவதாக என்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




நாடுமுழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில்தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நடப்பாண்டு முதல் ஜேஇஇ தேர்வானது ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படவுள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி, மார்ச்மாதங்களில் 2 கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.


அதன்பின் கரோனா பரவல்காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ 3, 4-ம் கட்ட முதல்நிலைத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன. அதேபோல், ஜூலை 3-ம் தேதி நடத்தப்படவிருந்த ஜேஇஇ பிரதானத் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.


அதேநேரம் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்து இதுவரை எந்த தகவலையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் நீட், ஜேஇஇதேர்வுகளை நடத்துவதுதொடர்பான ஆலோசனைகளில் என்டிஏ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வை செப்டம்பர் மாதமும், ஜேஇஇ தேர்வை ஆகஸ்ட் மாதமும் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இதுதொடர்பாக என்டிஏ அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகளை ஆகஸ்ட் மாதமும், நீட் நுழைவுத்தேர்வை செப்டம்பரிலும் நடத்துவது குறித்து பரிசீலனை செய்துவருகிறாம். இதற்காக நாடு முழுவதும் கரோனா பரவல் நிலைமையை பகுப்பாய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே தேர்வுகள் நடத்தப்படும்’’ என்றனர்.



JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் - மத்திய அரசு...

 


ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் நீட் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



இதற்காக நிலைமையை பகுப்பாய்வு செய்து வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக ஜேஇஇ தேர்வுகள் நடப்பாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முதற்கட்டமாகவும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2ம் கட்டவும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.


நீட் தேர்வுகள் குறித்து முடிவெடுக்காத நிலையில் கடந்த மே மாதம் 1ம் தேதி நடந்த தேர்வுக்கான பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் நூலகமாக மாற்றமா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்....

 மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும், அதனால் தான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் நீட் தேர்வுக்கு 21 ஆயிரம் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,800 பேர் மட்டுமே இலவச பயிற்சி எடுக்கின்றனர். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். அதனையடுத்து 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 


10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


இந்தநிலையில் நேற்று 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை. அதற்கு பதில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

ஜேஇஇ மெயின் தேர்வு இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் -மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்...

 


நீட் தேர்வைப் போலவே, ஜேஇஇ மெயின் தேர்வும் இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.


2021 ஆம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 23 முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேர்வு முடிந்த 4 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்படும் என்றும், கணினிவழித் தேர்வாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பிஆர்க், படிப்பில் சேருவதற்கான ஜேஇஇ மெயின் தேர்வு மட்டும் எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

JEE மெயின் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது...

அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெற உள்ள JEE Main தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாகவும், வரும் ஜனவரி 16-ம் தேதி வரை https://jeemain.nta.nic.in/webinfo2021/Page/Page?PageId=1&LangId=P இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விடுத்துள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் JEE Main தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ஐ.டி. / ஜே.இ.இ. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச பயிற்சி - 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித் துறை...

 


ஐ.ஐ.டி. / ஜே.இ.இ. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச பயிற்சி - 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித் துறை...

பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஐ.ஐ.டி./ஜே.இ.இ. போட்டி தேர்வுகளில் கலந்துகொண்டு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் நெக்ஸ்ட்ஜென் வித்யா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முதன்மை செயலாளர் தீரஜ்குமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரவ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பனும் உடன் இருந்தனர்.

இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் தொழில்நுட்ப கல்வியை சேர்ந்த ஐ.ஐ.டி./ ஜே.இ.இ. உயர்கல்விக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்படும். இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தனியாக லாக்-இன் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். இதற்கான பதிவு வருகிற 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும், பயிற்சி வகுப்புகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கும். 

http://play.google.com/store/apps/details?id=com.vidhyaeducation.android

என்ற முகவரியில் மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்திலிருந்து JEE தேர்வுகள் வருடத்திற்கு 4 முறை நடத்தப்படும் - மத்திய கல்வி அமைச்சர்...

 அடுத்த வருடத்திலிருந்து JEE தேர்வுகள் வருடத்திற்கு 4 முறை நடத்தப்படும் மத்திய கல்வி அமைச்சர் தகவல்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers are important for the development of the country - nuclear scientist pride

 ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் - அணு விஞ்ஞானி பெருமிதம் Teachers are important for the development of the country -...