கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஜியோ ப்ரீபெய்ட் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணம் 21% உயர்வு(Recharge Plan for Jio prepaid service increased by 21%)...
01-12-2021 முதல் ஜியோ ப்ரீபெய்ட் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணம் 21% உயர்வு(Recharge Plan for Jio prepaid service increased by 21%)...
Airtel நிறுவனம் அதன் மிகவும் மலிவான Monthly Prepaid Recharge Plan ஆன ரூ.49 Planஐ நிறுத்தியது - இனி ரூ.79 பிளான் ரீசார்ஜ் மட்டுமே கிடைக்கும்...
பார்தி ஏர்டெல் நிறுவனம் ஜூலை 28, புதன்கிழமை முதல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவின் மலிவு விலை ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.49-ஐ நிறுத்திக்கொண்டதோடு மட்டுமில்லாமல் அதற்கு பதிலாக ரூ.79-ஐயும் அறிவித்துள்ளது.
இந்த திருத்தம் ஜூலை 29, வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.
ரூ.49 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது ரூ.38.52 டால்க் டைம், 100MB டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியை வழங்கியது.
ஆக ஏர்டெல் பயனர்கள் இனிமேல் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.49 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அணுக முடியாது. அதற்கு பதிலாக ரூ.79 திட்டம் பயர்களுக்கான மிகவும் மலிவு விருப்பமாக இருக்கும்.
ரூ.79 ரீசார்ஜ் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது?
ரூ.79 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.64 டாக் டைம், வினாடிக்கு 1 பைசா உள்ளூர் / எஸ்.டி.டி அழைப்பு விகிதத்தில் கட்டணம், 106 நிமிடங்கள் வெளிச்செல்லும் அழைப்புகள் மற்றும் 200 எம்பி டேட்டா போன்ற நன்மைகளை அதே 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் வழங்கும்.
முதலில் இலவசமாக கிடைத்தது; தற்போது நிறுத்தப்பட்டுள்ளது!
55 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட பயனர்களுக்கு பயனளிக்கும் என்று கூறப்பட்டு, கடந்த மே மாதத்தில் நாட்டில் அதிகரித்த COVID-19 இடையே வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக ரூ.49 இலவசமாகவும் மற்றும் ரூ.79 ஆனது டபுள் நன்மைகளையும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது ஏர்டெல் தனது மலிவான மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.49-ஐ நிறுத்தியுள்ளது.
இந்நிறுவனம் கடந்த வாரம்தான், சில்லறை மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களை திருத்தியது. ரூ.749 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தையும் நிறுத்தியது.
ஏர்டெல் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களை திருத்தி சில்லறை வாடிக்கையாளர்களுக்கான மிகக் குறைந்த பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமாக ரூ.999-ஐ கொண்டு வந்தது. முன்னதாக இந்த இடத்தில் ரூ.749 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம் இருந்தது.
இதற்கிடையில், Vi (முன்னர் வோடபோன் ஐடியா) ஏர்டெல்லின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அதன் சில்லறை மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களை திருத்தியது.
ஆனால் ஏர்டெல் நிறுவனத்தை போலல்லாமல், வி அதன் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.38 டாக் டைம் மற்றும் 100 எம்பி டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் தொடர்ந்து வழங்கி வருகிறது.
ஆயினும், வி நிறுவனம் விரைவில் மேலும் சில மாற்றங்களை கொண்டு வரும் என்று, அதாவது எதிர்வரும் நாட்களில் ஏர்டெல் போன்றே திருத்தத்தை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூபாய் 49 ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு...
குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூபாய் 49 ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு
கொரோனா காலகட்டத்தில் குறைந்த வருவாய் கொண்டே வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் 49 ரூபாய் ரீசார்ஜ் இலவசமாக அளித்திட ஏர்டெல் முன்வந்துள்ளது.
38 ரூபாய் டாக்டைம் 100 எம்பி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கக்கூடிய 49 ரூபாய் ரீசார்ஜ் பேக்கை தனது 5 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்க முன்வந்துள்ளது.
பெரும்பாலும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்தச் இலவச ரீசார்ஜ் ஒருமுறை மட்டும் அளிக்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...