Call மற்றும் SMSக்கு மட்டும் தனியே Recharge - TRAI உத்தரவு
Call மற்றும் SMSக்கு மட்டும் தனியே ரீசார்ஜ் வவுச்சரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும்
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI உத்தரவு
ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் டேட்டா ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இனி இருக்காது
கால் மற்றும் எஸ்.எம்.எஸ்க்கு மட்டும் தனியே ரீசார்ஜ் வவுச்சரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும்...
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவு
தற்போதைய சிக்கல்கள் என்ன..?
பல பயனர்கள் ஒரே மொபைலில் 2 சிம்கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதில் ஒரு சிம் மட்டுமே முழுமையாக செயல்படுகிறது. மற்றொரு சிம் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால், இரண்டாவது சிம் மட்டுமே குரல் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு பயன்படுத்தப்பட்டாலும், முழு தொகுப்பிற்கு (Combo Plan) பணம் செலுத்த வேண்டியுள்ளது.
மொபைல் எண்கள் அரசின் சொத்து என்பதால், அவை தொலைத்தொடர்பு நிறுவனங்களால் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். பயனர்கள் தேவையற்ற சேவைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என்பதற்காக டிராய் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு டிராய் (TRAI) என்று அழைக்கப்படுகிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமானது (Telecom Regulatory Authority of India) புது விதிகளை கொண்டுவருகிறது. இந்த விதிகள் மூலம் ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களிடையே நேரடி மாற்றம் ஏற்பட இருக்கிறது. டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் என்று மூன்றுக்கும் கிடைத்த ரீசார்ஜ் திட்டங்கள், இனிமேல் தனித்தனியாக கிடைக்க போகிறது. இதனால், கஸ்டமர்களுக்கு என்ன நடக்கும்? இந்த விதிகள் என்ன சொல்கிறது? விவரம் இதோ.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும். மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்கனவே வாய்ஸ் கால்களுக்கு தனியாக திட்டங்கள் இருக்கின்றன. இதனால், மலிவான விலையில் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைக்கிறது. ஆனால், ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்களில் அப்படி கிடையாது.
இதனால், முன்னணி நிறுவனங்களின் கஸ்டமர்கள் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆகிய மூன்றையும் சேர்த்து கொடுக்கப்படும் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள் மட்டும்போதும் என்றாலும்கூட டேட்டா இருக்கும் திட்டத்தை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடிகிறது. ஒரு சில திட்டங்களில் லம்ப்-சம் டேட்டா கிடைக்கின்றன.
ஆனால், அதிலும் வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ்கள் (SMS) தனித்தனியாக கிடைப்பதில்லை. ஆகவே, டேட்டா தேவைப்படாத கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொடுக்கக்கூடிய ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர்கள் (Special Tariff Vouchers) ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று டிராய் அதிரடி உத்தரவை கொடுத்துள்ளது.அதே நேரத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமானது, அதிகபட்சமாக 90 நாட்கள் வேலிடிட்டியில் மட்டுமே கிடைத்துவந்த சிறப்பு ரீசார்ஜ் கூப்பன்களின் (Special Recharge Coupons) வரம்பை 365 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டுமே தனியாக கிடைக்கும் திட்டங்கள் வருடம் முழுவதும் கிடைக்கப் போகிறது.
டிராய் உத்தரவின்படி, ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு திட்டத்தையாவது, இப்படி வைத்திருக்க வேண்டும். அதாவது, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களுக்கு தனியாக திட்டத்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும். இந்த ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர்களின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேல் செல்லக்கூடாது.டெலிகாம் கஸ்டமர்கள், அவர்களுக்கு எந்த சேவை வேண்டுமோ அதற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து அதற்காக தொகையை கொடுக்க வேண்டும். இதையே இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவில் விளக்கி இருக்கிறது. ஆகவே, விரைவில் டேட்டாவுக்கு மட்டுமே வவுச்சர்கள் கிடைப்பதை போல, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு வவுச்சர்கள் கிடைக்க இருக்கிறது.
தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபோது, டிராய் அதை மறுத்தது. ஆனால், அதே நேரத்தில், ரீசார்ஜ் செலவை குறைக்கும்படி டேட்டா தேவையில்லாத கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்களை மட்டும் மலிவான விலைக்கு கொடுக்க தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட திட்டமிட்டது.
இதனால், கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செய்யும் செலவு மிச்சமாகும். ஏனென்றால், குறைந்தபட்சம் ரூ.200 ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இப்போது சிம் கார்டு ஆக்டிவ் கிடைக்கிறது. அதுவும் ஒரு மாதத்துக்கு மேல் இருக்காது. இதனாலேயே 2 சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செலவே அதிகமாக இருக்கிறது. இதை குறைக்க டிராய் இந்த உத்தரவை கொடுத்துள்ளது.
இனிமேல் பிஎஸ்என்எல்லில் கிடைப்பதை போல மலிவான விலைக்கு தனியார் நிறுவனங்களிலும் திட்டங்கள் கிடைக்கும். ஆனால், டேட்டா சேவை அதில் எதிர்பார்க்க முடியாது. சிம் ஆக்டிவ் மட்டும் மலிவான விலைக்கு கிடைப்பதை இது உறுதி செய்ய இருக்கிறது. இது கஸ்டமர்களுக்கு லாபத்தை கொடுக்கும்