கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Rectification லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Rectification லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் மற்றும் அடிப்படை விதி (Senior - Junior Pay Rectification - CM Cell Reply & Rules 22- B - Appointments & Regularisation made on the same day - Senior Junior Pay Anamolies Rectification - Chief Minister's Special Cell Reply and Fundamental Rule)...



>>> ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் மற்றும் அடிப்படை விதி (Senior - Junior Pay Rectification - CM Cell Reply & Rules 22- B - Appointments & Regularisation made on the same day - Senior Junior Pay Anamolies Rectification - Chief Minister's Special Cell Reply and Fundamental Rule)...


 கோரிக்கை

ஒத்த கல்வி தகுதியுடைய இருவரில்‌, மூதுரிமை பட்டியல்படி மூத்தவர்‌ முதலில்‌ பதவி உயர்வில்‌ செல்கிறார்‌. மூதுரிமை பட்டியல்படி இளையவர்‌ சில காலம்‌ கழித்து அதே பதவிக்கு பதவி உயர்வில்‌ செல்கிறார்‌. இருவரும்‌ கீழ்நிலைப்பதவியில்‌ ஒத்த ஊதிய விகிதம்‌ உடைய ஒத்த பதவியில்‌ பணியாற்றி வந்தனர்‌. இருவரும்‌ ஒத்த பதவி உயர்விற்கு சென்ற பின்பு இளையவர்‌ அதிக ஊதியம்‌ பெறுகிறார்‌. ஊதிய முரண்பாடு எழுகிறது. இருவரும்‌ ஒரே நாளில்‌ பணிநியமனம்‌ பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ என்பதால்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ அடிப்படையில்‌ ஊதிய முரண்பாடு களைய இயலாது என தணிக்கை தடையில்‌ கூறப்பட்டுள்ளது.


1. தணிக்கைதடையில் கூறப்பட்டுள்ளபடி இருவரும்‌ ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்‌ என்பதால்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ அடிப்படையில்‌, ஊதிய முரண்பாடு களைய இயலாது என்பதற்கான அரசாணைகள்‌ செயல்முறைகள்‌, அரசு விதிமுறைகள்‌ இருப்பின்‌ அனுப்ப வேண்டுகிறேன்‌.


2 அரசாணைகள்‌. செயல்முறைகள், ‌அரசு விதிமுறைகளுக்கு முரணாக தவறான தணிக்கை தடை ஏற்படுத்தப்பட்டால்‌ எத்தனை நாட்களுக்குள்‌ தணிக்கை தடைநிவர்த்தி செய்ய வேண்டும்‌ என்ற விவரம்‌ தர வேண்டுகிறேன்‌. இதற்கான அரசாணைகள்‌, செயல்முறைகள்‌, அரசு விதிமுறைகள்‌ இருப்பின்‌ நகல்‌ தர வேண்டுகிறேன்‌




பதில்: 

வரிசை எண்‌-1 குறித்து பணியில்‌ மூத்தவர்‌ மற்றும்‌ இளையவருக்கிடையே ஊதிய முரண்பாடு களைவது குறித்து அடிப்படை விதி 22-Bன்‌ கீழுள்ள விதித்துளி 2ன்படி களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌ என்பதை தங்களுக்குத்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு, மேற்சொன்ன விதியினை https://www.tn.gov.in/rules/dept/22 என்ற தமிழ்நாடு அரசின்‌ இணையதள முகவரியிலிருந்து இலவசமாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் ‌என்பதையும்‌ தங்களுக்கு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.


வரிசை எண்‌: 2  குறித்து-- தணிக்கை தடை ஏற்படுத்தப்பட்டது குறித்து நிதித்‌ துறைக்கு. தனியாக விண்ணப்பித்து தங்களுக்கான பதிலை பெற்றுக்‌ கொள்ளும்படி கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.


கோ. எண்‌. 37097/ அ.வி.IV/ 2021, ம.வ.மே.(அ.வி. IV) துறை, நாள்‌ : 30-11-2021...


>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...