கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2 தேர்வு முடிவுகள்[TNPSC Group II Examination Results]
>>>தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2 தேர்வு முடிவுகள் அறிய இங்கே சொடுக்குங்கள்[Click here to TNPSC Group II Examination Results]
>>>எழுத்துத்தேர்வு நடைபெற்ற நாள்: 30-07-2011
>>>வாய்மொழித்தேர்வு நடைபெறும் நாட்கள்: 20-06-2012 முதல் 23-07-2012 முடிய >>>ஜூன் 8 [June 8]....
- உலக கடல் நாள்
- படிவ நிரலாக்க மொழி பி.எம்.பி வெளியிடப்பட்டது(1995)
- உலகக் கடல் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது(1992)
- அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது(2007)
>>>மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளர் நியமனம் மற்றும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியல் [Tentative Provisional List of Candidates Called for Certificate Verification for the Recruitment of Senior Lecturer in DIET Under DTERT & Tentative Provisional List of Candidates Called for Certificate Verification for the Recruitment of Assistant Elementary Educational Officer]
>>>மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியல் [Tentative Provisional List of Candidates Called for Certificate Verification for the Recruitment of Senior Lecturer in DIET Under DTERT]
>>>2010-2011 உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியல் [Tentative Provisional List of Candidates Called for Certificate Verification for the Recruitment of Assistant Elementary Educational Officer]
>>>உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் நியமனம் - உங்கள் தேர்வு முடிவினை அறிய இங்கே சொடுக்குங்கள் [Click here to know your Result for the Recruitment of AEEO]
>>>2010-2011 உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியல் [Tentative Provisional List of Candidates Called for Certificate Verification for the Recruitment of Assistant Elementary Educational Officer]
>>>உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் நியமனம் - உங்கள் தேர்வு முடிவினை அறிய இங்கே சொடுக்குங்கள் [Click here to know your Result for the Recruitment of AEEO]
>>>உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் - பாதிப்புகள்
உணவு உற்பத்தி நிறுவனங்கள், உணவு விடுதிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகள், நடைமுறைக்கு ஒவ்வாது என்பதே சிறிய, நடுத்தர வணிகர்களின் கருத்து. பன்னாட்டு நிறுவனங்களை வளர்க்கவும், சிறிய மற்றும் நடுத்தர உணவு விடுதிகளை படிப்படியாக ஒழித்து விடவும் தான் இந்த விதிமுறைகள் பயன்படும் என்கின்றனர் வணிகர்கள். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும், இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்தது.
இந்த விதிமுறைகள், ஒழுங்குமுறைகளை உணவு பாதுகாப்பு ஆணையம் வகுத்துள்ளது.ஆணையம் வகுத்துள்ள பல விதிமுறைகள் தங்களை பாதிப்பதாக உணவு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய, நடுத்தர வணிகர்கள் கூறுகின்றனர்.
முக்கிய விதிமுறைகள்:
*சிறிய அளவில் உணவு உற்பத்தி செய்பவர்கள் கூட, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்து பதிவு செய்ய வேண்டும். உரிமம் பெற வேண்டும்.
*உணவு உற்பத்தியை கண்காணிக்க தொழில்நுட்ப அறிவு பெற்றவரை, அந்த நிறுவனம் நியமிக்க வேண்டும். அவர் குறைந்தது பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
*உணவு உற்பத்தி செய்யும் இடத்திலேயே, உணவுப் பொருட்களை பரிசோதனை செய்வதற்கு பரிசோதனைக் கூடம் இருக்க வேண்டும். அல்லது ஆணையம் அறிவிக்கும் சோதனைக் கூடங்களில் உணவுப் பொருட்களை பரிசோதிக்க வேண்டும்.
*உணவுப் பொருட்களைத் தயாரித்து பொட்டலம் போட்டு அளிக்கப்படுவனவற்றில், லேபிள் ஒட்டி கொடுக்க வேண்டும். உணவுப் பொருளில் அடங்கியுள்ள புரோட்டீன், தாதுச் சத்து, ஊட்டச் சத்து அளவை, அந்த லேபிளில் குறிப்பிட வேண்டும்.
*உரிமத்தில் கூறப்பட்டுள்ள உணவுப் பொருளைத் தவிர வேறு எதையும் தயாரிக்கக் கூடாது. பொருளில் மாற்றம், உட்பொருளில் மாற்றம் செய்தால், அதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பொருந்தாது: நுகர்வோருக்கு தரமான, பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தான் இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன என மத்திய அரசு தரப்பில் கூறினாலும், இதனால் பாரம்பரிய உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரும்பாதிப்பு வரும் என்கின்றனர்.உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டமானது, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குப் பொருந்தாது.நேரடியாக விவசாயிகள், மீனவர்களிடம் இருந்து மூலப் பொருட்களை வாங்கும்போது, அவைகளைப் பரிசோதிக்க இயலாது. வெவ்வேறு பருவங்களில் விளையும் விளைபொருட்கள், வெவ்வேறு விதத்தில் இருக்கும். ஆணையம் நிர்ணயிக்கும் தரத்துக்கு உட்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியாது.கலப்படமற்ற, சுத்தமான, சுகாதாரமான உணவுகளை பொது மக்களுக்கு வழங்க, வணிகர்களும் கடமைப்பட்டுள்ளனர். அபராதம்:ஆணையத்தின் விதிமுறைகள் பற்றி, ஐகோர்ட் வழக்கறிஞர் ஜி.சங்கரன் கூறும்போது, "சிறு, சிறு வணிகர்கள், உரிமம் அல்லது பதிவு பெறவில்லை என்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.
உணவுப் பொருளை மாற்றி விற்பனை செய்தால், பேக்கிங் மற்றும் லேபிள் இல்லாமல் விற்பனை செய்தால் அபராதம் என கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த விளைப் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம். ஆனால், அதை வாங்குபவர்கள் தான் அதற்கு பொறுப்பு என விதிமுறைகள் கூறுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் நல்லது தான். அதை அமல்படுத்துவதற்காககொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகள் சரியல்ல' என்றார். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை அமல்படுத்துவதற்காக, ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் குறித்து, சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் கே.டி.சீனிவாச ராஜா கூறியதாவது:இந்தச் சட்டத்தினால் சிறு வியாபாரிகள் முதல் பெரிய ஓட்டல்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். கடற்கரையில் சுண்டல் விற்கும் சுடலையும், சுடச்சுட ஆவிபறக்க இட்லி அவித்து விற்கும் கையேந்தி பவன் முனியாண்டியும் மட்டுமல்ல, அனைத்து ஓட்டல்களின் உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கட்டணம் அதிகம்:ஓட்டலுக்கான உரிமம் புதுப்பிக்க முன்பு 500 ரூபாய் செலவு செய்தோம். புதிய விதிமுறைகளின்படி பார்த்தால் ஆண்டுக்கு 2ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காபியில் கலப்படம் : காபி தயாரித்தால் அதில் எத்தனை சதவீதம் சிக்கரி கலந்துள்ளது, எந்த வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, எந்த விகிதாசாரத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. காபி தூள் நிறுவனத்திலிருந்து தயாரித்து வரும் தூளில் எதாவது கலப்படம் சேர்ந்து விட்டால் நாங்கள் தான் பொறுப்பு என்கிறது சட்டம்.எண்ணெயில் கலப்படம் இருந்தாலோ அல்லது பூச்சி மருந்துகள் அதிகமாக அடித்த காய்கறிகளை நாங்கள் சமைத்தால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு தான் தண்டனை என்கிறது சட்டம். இதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும்? குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.வாடிக்கையாளர் ஒருவர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அவர் வீட்டுக்கு செல்லும்போது ஏதாவது ஒரு பிரச்னையின் காரணமாக விபத்து நேரிட்டால் உடனே அவரது மரணத்திற்கு நஷ்ட ஈடாக அபராதமும், தண்டனையும் விதிக்கலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமா? உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களில் "கேட்டரிங்' படித்தவர் ஒருவர் இடம் பெற வேண்டும். ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை நடத்த வேண்டும். அந்த பரிசோதனையை மேற்கொண்டால் குறைந்தப்பட்சம் 500 ரூபாய் முதல் ஆயிரம் வரை ஊழியர்களுக்கு நிர்வாகம் செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க சட்டத்தின் வடிவம்:தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் செயலர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் சட்டத்தை அப்படியே காப்பி அடித்து, அதன் வடிவமாக இங்கு உருவாக்கியுள்ளனர்.இந்தச் சட்டத்தை வரவேற்கிறோம். சட்டத்தை அமல்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் தான் சரியல்ல. தரமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொடுத்தால் வியாபாரம் நடக்கும். நமது நாட்டின் யதார்த்தமான நிலைமைக்கும், விளை பொருட்களின் தரம், தண்ணீரின் தன்மை, இதையெல்லாம் கருத்தில் கொண்டு விதிமுறைகளை உருவாக்கியிருக்க வேண்டும். உணவு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து, வழிமுறைகளை உருவாக்கியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
>>>மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தாமதமாகும்
தமிழகத்தில், 36 லட்சம் பேரிடம் உடல் அடையாளக் கூறுகளை, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்து, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்திற்கு அனுப்பியும், இன்னமும், "ஆதார் எண்'களைப் பெற முடியவில்லை. இதன் பாதிப்பால், உடற்கூறு முறையிலான பதிவுகளின் அடிப்படையில், மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என, தமிழக அரசின் அறிவிப்பும் தாமதமாகும் எனத் தெரிகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில், "ஆதார்' அடையாள அட்டைக்கு விவரம் சேகரிக்கும் பணி, கடந்தாண்டு அக்., 25ல், தபால் துறை மூலம் தமிழகத்தில் துவக்கப்பட்டது. பல்வேறு பணிகள் மற்றும் தேசிய அளவில் பயன்படுத்தப்படும் அட்டையாகவும் அமையும் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது. இதற்காக, நந்தன் நீல்கனி தலைமையிலான குழு சிறப்பாக ஆவணங்களைத் திரட்டியது. ஆனால், அடையாள அட்டை ஆணையத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், விவரங்களை யார் சேகரிப்பது என்பதில் மோதல் ஏற்பட்டது.பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி, உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. இரு அமைப்புகளுக்கும் இடையே எழுந்த பிரச்னையால், நாடு முழுவதும் அடையாள அட்டைக்கு விவரங்கள் சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த பிரச்னைகளுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், சுமூக முடிவு காணப்பட்டது. அதன்படி, பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், 60 கோடி பேருக்கும், மக்கள் தொகை பதிவகம், 60 கோடி பேருக்கும் அங்க அடையாளங்களை சேகரிக்கலாம் என முடிவானது.ஏற்கனவே, தமிழகத்தில், 23 மாவட்ட தலைமை தபால் நிலையம் உட்பட, 28 இடங்களில், அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில் பணிகள் நடந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் தொகை பதிவகத்தின் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் துவக்கி வைத்ததால், யார் தமிழகத்தில் விவரங்களை சேகரிப்பர் என்ற குழப்பம் இருந்தது."தமிழகத்தை பொறுத்தமட்டில், இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், அடையாளக் கூறுகளின் விவரங்கள் சேகரிக்கும் பணியை மேற்கொள்ளாது. இதை, தேசிய மக்கள் தொகை பதிவகமே மேற்கொள்ளும்,' என அறிவிக்கப் பட்டது. அதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, மதுரை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில், அடையாள கூறுகளின் விவரங்களை சேகரிக்கும் பணியில், தேசிய மக்கள் தொகை பதிவகம் ஈடுபட்டு வந்தது. மேற்குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களில், தேசிய மக்கள் தொகை பதிவகம் இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்களை சேகரித்துள்ளது. தற்போது, இந்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆணையம், 36 லட்சம் பேரின் விவரங்களை ஏற்காததால், அவர்களுக்கு, "ஆதார் எண்' கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.துவங்கவில்லை. இதுகுறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், பதிவிற்கான உபகரணங்கள் அளிப்பது, உபகரணங்களை கையாளும் வல்லுனர்களை நியமிப்பது உள்ளிட்ட செயல்களை, தாமதப்படுத்தி வந்தது.இதுகுறித்து, தமிழக அரசிடம் ஆலோசிக்கப் பட்டது. அதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, ஆணையத்திற்கு தமிழக அரசும் கடிதம் எழுதியுள்ளது. இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.இந்த விவரங்களை, ஆணையம் ஏற்று, "ஆதார் எண்' வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.இதனால், தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலான, "ஸ்மார்ட் கார்டு' திட்டமும் தாமதமாகும் எனத் தெரிகிறது. கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி அடையாள முறையிலான பதிவுகளின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில், குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை முன்னோடி திட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், 21.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருந்தது.இதற்காக, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த உடற்கூறு அடையாளங்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப் பட்டது. ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்காததால், அவற்றை "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பயன்படுத்துவதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்>>>அறிவு திறன்மிக்க ஆசிரியர்களை தேடுகிறோம்: கபில் சிபல் பேச்சு
அறிவு திறன்மிக்க ஆசிரியர்களை தேடுகிறோம்: கபில் சிபல் பேச்சு
"ஆசிரியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் பணியில் சிறப்பாக செயல்படுவதற்கு, அறிவுத்திறன் மிகவும் அவசியம்'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார். டில்லியில் நடந்த கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் பேசியதாவது:ஆசிரியப் பணி என்பது மிகவும் மேன்மையான பணி. இந்த பணியில் ஈடுபடுவோர், சிறப்பாகச் செயலாற்ற வேண்டுமெனில், அறிவார்ந்த திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளின் கல்வியைப் பற்றிப் பேச வேண்டிய சூழலில், ஆசிரியர்களின் கல்வித் திறன் பற்றிப் பேசுகிறோம். ஆசிரியர்களாக இருப்பவர்கள், தங்களுக்குரிய சிறப்பான கல்வித் திறனைப் பெறாத சூழல் காணப்படுகிறது. அதை மாற்றியாக வேண்டும். ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதற்கு ஆசிரியப் பணி விவகாரத்தில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. தரமான கல்வியைக் கற்பிக்க, ஆசிரியப் பணியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கபில் சிபல் பேசினார்
நன்றி-தினமலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
23-12-2024 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...