கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>40 நாட்களில் குரூப்-4 தேர்வு முடிவு: நடராஜ் தகவல்

"வரும் ஜூலை 7ல் நடக்கும் குரூப்-4 தேர்வு முடிவுகள், 40 நாட்களுக்குள் வெளியிடப்படும். தேர்வானவர்களுக்கு, கவுன்சிலிங் வாயிலாக பணி நியமன ஆணைகள், 15 நாட்களில் வழங்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,), குரூப்-4 தேர்வுகள், ஜூலை 7ம் தேதி நடக்கின்றன. மண்டல அளவிலான தேர்வு ஏற்பாடுகள் குறித்து, ஆணைய தலைவர் நடராஜ், கோவையில் நேற்று, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

40 நாளில் முடிவு: பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும், மொத்தம் 244 இடங்களில், 5,000 மையங்களில், குரூப்-4 தேர்வுகள் நடக்கின்றன. 10 ஆயிரத்து 793 பணியிடங்களுக்கு, 12.50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மாநிலத்தில், அதிகளவில் சேலம் மாவட்டத்தில், 1,013 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக, மையங்களின் கீழ் தளங்களில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்வு மையங்களில், வினாத்தாள் வினியோகம் முதற்கொண்டு, அனைத்து நடவடிக்கைகளும், வீடியோவில் பதிவு செய்யப்படும். தேர்வு எழுதிய 40 நாட்களுக்குள், முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கவுன்சிலிங் மூலம், 15 நாட்களுக்குள் பணி நியமனம் அளிக்கப்படும். கவுன்சிலிங் நடவடிக்கைகள் தொடர்பாக, அண்ணா பல்கலையின் உதவி கோரப்பட்டுள்ளது. அடுத்த தேர்வு நடந்து, முடிவு அறிவிக்கும் வரை, காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்படும்.

குரூப்-2 தேர்வு: குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 3,663 பணியிடங்களுக்கு, ஒரு நாளைக்கு, 5,000 விண்ணப்பங்கள், இணையம் வாயிலாக வருகின்றன. மொத்தம், ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு அடுத்தபடியாக, 1,300 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதில், 15 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள், முக்கிய தேர்வுகள் நடக்க உள்ளன. இவ்வாறு நடராஜ் கூறினார்.

"ஆண்டிற்கு ஒரு தேர்வு இல்லை': டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் மேலும் கூறியதாவது: குறிப்பிட்ட பணியிடங்களுக்கு, ஓராண்டிற்கு, ஒரு தேர்வு என்ற நடைமுறை கிடையாது. தேவைப்பட்டால், கூடுதல் தேர்வுகள் நடத்தப்படும். காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியல் தரப்பட்டால், அதற்கு ஏற்றவாறு, தேர்வுகள் குறித்து அறிவிக்கப்படும். குரூப்-4 தேர்வுக்கு, முதலில், 3,000 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. நாங்கள் முயற்சி எடுத்து, அனைத்து அரசு துறைகளிடமும் பட்டியல் பெற்று, தற்போது, 10 ஆயிரத்து 793 பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்துகிறோம். குரூப்-2 தேர்விலும், முதலில் 1,615 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, தற்போது, 3,663 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நான் பொறுப்பேற்ற பின், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, 6,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு நடராஜ் கூறினார்.

>>>தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்....

ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என்ற நிலையில், கவுன்சிலிங்கில் உள்ள, 17 ஆயிரத்து, 98 இடங்களுக்கு, நேற்றுடன் வெறும், 2,509 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.
நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கவுன்சிலிங் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, 14 ஆயிரத்து 128 இடங்களும் போணியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 13ம் தேதி முதல், 110 மையங்களில் முதலாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பிளஸ் 2 தேர்வில், 540 மதிப்பெண் பெற்றவர்கள், இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
சீண்ட ஆளில்லை:
இந்த பயிற்சியைப் பெற, மாணவ, மாணவியர் ஒரு காலத்தில் முட்டி, மோதிய நிலையில், இன்று, சீண்ட ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, 2,970 இடங்களுக்கு, நேற்று வரை வெறும் 2,509 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அரசுப் பள்ளிகளில் உள்ள இடங்கள் அளவிற்குக் கூட விண்ணப்பம் வராதது, துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மேலும் சரிய வாய்ப்பு:விண்ணப்பித்தவரில், எத்தனை பேர் உறுதியாக வருவர் என்பதும் தெரியாது; பல பேர், கலந்தாய்விற்கே வர மாட்டார்கள் என்பதால், இந்த எண்ணிக்கை, மேலும் சரிய வாய்ப்புள்ளது.அரசுப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கே இந்த நிலை என்பதால், அரசு உதவி பெறும் ஆசிரியர்பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, 1,758 இடங்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 12 ஆயிரத்து, 370 என, மொத்தம் 14 ஆயிரத்து, 128 இடங்கள் போணியாகாத நிலை உருவாகியுள்ளது.
வேலைவாய்ப்பு இல்லை:ஆசிரியர் பயிற்சியைப் பெற்றால், அரசு ஆரம்பப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேரலாம். தற்போதைய நிலவரப்படி, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி மற்றும் மாநில அளவிலான பதிவு மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.பதிவு மூப்பு என வரும்போது, ஏற்கனவே ஒரு லட்சம் பேர் வரை காத்திருப்பது தான், ஆர்வமின்மைக்கு காரணமாக உள்ளது. முதலில், மாவட்ட அளவிலான பதிவு மூப்பு என்ற நிலை இருந்தபோது, உடனுக்குடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. தற்போது, அது போன்ற நிலை இல்லை. இதுவும், மாணவர்கள்புறக்கணிப்பிற்கு காரணம்.
புதிய திட்டம் வருமா?கடந்த ஆண்டு, 85 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், இந்த ஆண்டு, 50 பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலை தொடர்ந்தால், அடுத்த ஒரு சில ஆண்டுகளில், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளே இல்லாத நிலை ஏற்படும்.ஆசிரியர் பயிற்சியைப் பெறுபவர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை அரசு உருவாக்கினால் மட்டுமே, இந்த பயிற்சிக்கு மீண்டும் புத்துயிர் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி-தினமலர்

>>>ஜூன் 23 [June 23]....

  • உகாண்டா, போலந்து தந்தையர் தினம்
  • ஐக்கிய ராஜ்யத்தின் (United Kingdom) சமூக சேவை தினம்
  • பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1894)
  • கிரிஸ்டோபர் ஷோல்ஸ், தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1868)

>>>As per Elementary Director's Proceedings R.C.No:014115/D1/2012,Dated:15-06-2012, G.O.Ms.No:133,Dated:04-06-2012 Communicated to All District Elementary Educational Officer's for Information and Necessary Action....

>>>அரசாணை (நிலை) எண்:146,நாள்:19-06-2012, 01-06-1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும்,தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் பணியாற்றியவர்களின் மொத்தப்பணிக்காலத்தையும் கணக்கிட்டு 01-06-1988 அன்று நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதித்தல் - இவ்வரசாணை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:13907/எல்1/2011,நாள்:20-06-2012ன் படி அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் தக்க நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது...

>>>அரசாணை (நிலை) எண்:146,நாள்:19-06-2012, 01-06-1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும்,தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் பணியாற்றியவர்களின் மொத்தப்பணிக்காலத்தையும் கணக்கிட்டு 01-06-1988 அன்று நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதித்தல் - அரசாணை மற்றும் இயக்குநரின் செயல்முறைகளைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நன்றி- திரு.ஆ.பாடலீஸ்வரன் அவர்கள்,
              மாவட்டச் செயலாளர்,
              தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
              கரூர் மாவட்டம்.

>>>ஜூன் 22 [June 22]....

  • பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
  • கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
  • புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
  • சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...