கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்....

ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என்ற நிலையில், கவுன்சிலிங்கில் உள்ள, 17 ஆயிரத்து, 98 இடங்களுக்கு, நேற்றுடன் வெறும், 2,509 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.
நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கவுன்சிலிங் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, 14 ஆயிரத்து 128 இடங்களும் போணியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 13ம் தேதி முதல், 110 மையங்களில் முதலாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பிளஸ் 2 தேர்வில், 540 மதிப்பெண் பெற்றவர்கள், இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
சீண்ட ஆளில்லை:
இந்த பயிற்சியைப் பெற, மாணவ, மாணவியர் ஒரு காலத்தில் முட்டி, மோதிய நிலையில், இன்று, சீண்ட ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, 2,970 இடங்களுக்கு, நேற்று வரை வெறும் 2,509 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அரசுப் பள்ளிகளில் உள்ள இடங்கள் அளவிற்குக் கூட விண்ணப்பம் வராதது, துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மேலும் சரிய வாய்ப்பு:விண்ணப்பித்தவரில், எத்தனை பேர் உறுதியாக வருவர் என்பதும் தெரியாது; பல பேர், கலந்தாய்விற்கே வர மாட்டார்கள் என்பதால், இந்த எண்ணிக்கை, மேலும் சரிய வாய்ப்புள்ளது.அரசுப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கே இந்த நிலை என்பதால், அரசு உதவி பெறும் ஆசிரியர்பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, 1,758 இடங்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 12 ஆயிரத்து, 370 என, மொத்தம் 14 ஆயிரத்து, 128 இடங்கள் போணியாகாத நிலை உருவாகியுள்ளது.
வேலைவாய்ப்பு இல்லை:ஆசிரியர் பயிற்சியைப் பெற்றால், அரசு ஆரம்பப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேரலாம். தற்போதைய நிலவரப்படி, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி மற்றும் மாநில அளவிலான பதிவு மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.பதிவு மூப்பு என வரும்போது, ஏற்கனவே ஒரு லட்சம் பேர் வரை காத்திருப்பது தான், ஆர்வமின்மைக்கு காரணமாக உள்ளது. முதலில், மாவட்ட அளவிலான பதிவு மூப்பு என்ற நிலை இருந்தபோது, உடனுக்குடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. தற்போது, அது போன்ற நிலை இல்லை. இதுவும், மாணவர்கள்புறக்கணிப்பிற்கு காரணம்.
புதிய திட்டம் வருமா?கடந்த ஆண்டு, 85 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், இந்த ஆண்டு, 50 பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலை தொடர்ந்தால், அடுத்த ஒரு சில ஆண்டுகளில், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளே இல்லாத நிலை ஏற்படும்.ஆசிரியர் பயிற்சியைப் பெறுபவர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை அரசு உருவாக்கினால் மட்டுமே, இந்த பயிற்சிக்கு மீண்டும் புத்துயிர் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...