கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கவுன்சிலிங்கை தொடங்கி வைத்தார்.
மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு மொத்தம் 28,275 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களுக்கான ரேண்டம் எண் மற்றும் ரேங்க் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 17 அரசு கல்லூரிகளிலும், 13 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் 1653 இடங்கள் ஏற்கனவே உள்ளன. இது தவிர செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 50 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கையை இந்த ஆண்டு முதல் 100 ஆக உயர்த்த மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
புதிதாக சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. மொத்தத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 2,145 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு ஆகும். இது தவிர மீதமுள்ள இடங்களுக்கு நேற்று காலை 10 மணிக்கு கவுன்சிலிங் தொடங்கியது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி காலை 11 மணிக்குத் தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கவுன்சிலிங்கை தொடங்கி வைத்தார். அடுத்த 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக கவுன்சிலிங் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>டி.இ.டி., தேர்வு: ஹால் டிக்கெட் கிடைக்காதவருக்கு மாற்று ஏற்பாடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டி.இ.டி.,), ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அதிகாரிகளை அணுகலாம் என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில், வரும் 12ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது; 6.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக, மொத்தம் எட்டு லட்சம், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. 55,339 பேர், தேர்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர் தேர்வெழுத, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கள் பெயரில் திருத்தம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், உரிய ஆதாரத்துடன், தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளரை, தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அணுகலாம்.
விண்ணப்பத்தில், பிறந்த தேதியை தவறாகக் குறிப்பிட்டுள்ள விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அதை திருத்திக் கொள்ளலாம். டி.இ.டி., தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்&' இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள், நாளை (இன்று) முதல் 7ம் தேதி வரை, தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும் டி.ஆர்.பி., அதிகாரிகளை அணுகலாம்.
அவர்களிடம், தங்களின் டி.இ.டி., விண்ணப்ப நகல், தேர்வுக் கட்டண ரசீது, விண்ணப்பத்திற்கான ஒப்புகை அட்டை ஆகியவற்றை கொடுத்து, "ஹால் டிக்கெட்&' பெறலாம். அதிகாரிகளை சந்திக்கும் நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெறலாம். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

>>>ஜூலை 06 [July 06]....

  • மலாவி விடுதலை தினம்(1964)
  • தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)
  • இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி இறந்த தினம்(2002)
  • டாலர், அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(1785)
  • தாதாபாய் ‌நெளரோஜி, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1892)

>>>HSC March 2012 - Results of Revaluation / Retotalling

Government of Tamil Nadu
Directorate of Government Examinations
Higher Secondary Examination March 2012
 Revaluation / Retotalling  Results
 Registration Numbers

அரசாணை எண்:243, நாள்:29-06-2012ன் படி New Health Insurance Scheme - புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - மருத்துவ சிகிச்சைகள், மருத்துவமனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் விபரம் மற்றும் மாதாந்திரப் பிடித்தம் ரூபாய்.150 ஆக உயர்வு [New Health Insurance Scheme, 2012 – Provision of Health Care Assistance to the Employees of Government Departments, Organisations covered under this Scheme and their eligible Family Members through the United India Insurance Company Limited, Chennai Implementation]

>>>அரசாணை எண்:243, நாள்:29-06-2012ஐ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.... New Health Insurance Scheme - புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - மருத்துவ சிகிச்சைகள், மருத்துவமனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் விபரம் மற்றும் மாதாந்திரப் பிடித்தம் ரூபாய் 150 ஆக உயர்வு [Click here to Download G.O.(Ms)No.243,Dated:29-06-2012 New Health Insurance Scheme, 2012 – Provision of Health Care Assistance to the Employees of Government Departments, Organisations covered under this Scheme and their eligible Family Members through the United India Insurance Company Limited, Chennai Implementation]

>>>அரசிதழ் எண்:26,நாள்:04-07-2012

>>>ஜூலை 05 [July 05]....

  • அல்ஜீரியா விடுதலை தினம்(1962)
  • ஆர்மீனியா அரசியலமைப்பு தினம்(1995)
  • சால்வேஷன் ராணுவம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது(1865)
  • சந்தி டிரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்(1951)
  • பிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது(1954)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...