கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பொறியியல் படிப்பிற்கு புதிய கட்டணம்: நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.70,000

பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தை, கட்டண நிர்ணயக்குழு உயர்த்தியுள்ளது. அதன்படி அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயாகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பொறியியல் கவுன்சிலிங் இன்று துவங்கும் நிலையில், பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தை உயர்த்தக் கோரி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கட்டண நிர்ணயக் குழுவிடம் மனுக்களை அளித்திருந்தன.
கல்லூரிகளிடம் இருந்து வரவு - செலவு விவரங்களைப் பெற்று, அவர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்துக்களை குழு கேட்டறிந்தது. இதனடிப்படையில், புதிய கட்டண விவரங்கள் குறித்த அறிவிப்பை, கட்டண நிர்ணயக்குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் நேற்று அறிவித்தார். அவர் கூறியதாவது:
பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., ஆகிய பட்டப் படிப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கல்விக் கட்டண நிர்ணயக் குழு, பல்வேறு காலகட்டங்களில் கூடி, கல்லூரிகள் சமர்ப்பித்த விவரங்கள், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் சங்கங்களின் கருத்துக்கள் உட்பட, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை குழு ஆராய்ந்தது.
அதனடிப்படையில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயாகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. இந்த புதிய கட்டணம், நடப்பு கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும்.
எட்டு ஆண்டுகளுக்குப் பின், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கல்லூரி தரப்பில், அதிக கட்டணங்களை நிர்ணயிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், கல்லூரியை நடத்த, தற்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே போதும் என முடிவு செய்து, அறிவித்துள்ளோம், என்றார்.
தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரும், அண்ணா பல்கலை நிர்வாகக்குழு உறுப்பினருமான ரமேஷ்சந்த் மீனா கூறியதாவது: அதிக கட்டணம் வசூலித்ததாக, 60 பொறியியல் கல்லூரிகள் மீது புகார் வந்தன. இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அதில், 25 கல்லூரிகள் மட்டுமே பதிலளித்துள்ளன. மீதமுள்ள கல்லூரிகளிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஏ.ஐ.சி.டி.இ., 72 கல்லூரிகளில் போதிய வசதியில்லை எனக் கூறி, நோட்டீஸ் அனுப்பியது. விசாரணைக்குப் பின், ஒவ்வொரு கல்லூரியும், ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை 15 கல்லூரிகள் மீண்டும் அனுமதியைப் பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த எவ்வித பிரச்னையும் இல்லை என்று மீனா கூறினார்.

>>>ஜூலை 07 [July 07]....

  • சா‌லமன் தீவுகள் விடுதலை தினம்(1978)
  • இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது(1896)
  • கனடாவில் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழியும் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது(1969)
  • இந்தியாவின் தாஜ்மஹால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(2007)

>>>DME : MBBS / BDS

>>>>>>அரசாணை எண்:243, நாள்:29-06-2012ன் படி New Health Insurance Scheme - புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - மருத்துவ சிகிச்சைகள், மருத்துவமனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் விபரம் மற்றும் மாதாந்திரப் பிடித்தம் ரூபாய்.150 ஆக உயர்வு [New Health Insurance Scheme, 2012 – Provision of Health Care Assistance to the Employees of Government Departments, Organisations covered under this Scheme and their eligible Family Members through the United India Insurance Company Limited, Chennai Implementation]

>>>மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கவுன்சிலிங்கை தொடங்கி வைத்தார்.
மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு மொத்தம் 28,275 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களுக்கான ரேண்டம் எண் மற்றும் ரேங்க் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 17 அரசு கல்லூரிகளிலும், 13 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் 1653 இடங்கள் ஏற்கனவே உள்ளன. இது தவிர செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 50 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கையை இந்த ஆண்டு முதல் 100 ஆக உயர்த்த மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
புதிதாக சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. மொத்தத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 2,145 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு ஆகும். இது தவிர மீதமுள்ள இடங்களுக்கு நேற்று காலை 10 மணிக்கு கவுன்சிலிங் தொடங்கியது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி காலை 11 மணிக்குத் தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கவுன்சிலிங்கை தொடங்கி வைத்தார். அடுத்த 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக கவுன்சிலிங் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>டி.இ.டி., தேர்வு: ஹால் டிக்கெட் கிடைக்காதவருக்கு மாற்று ஏற்பாடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டி.இ.டி.,), ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அதிகாரிகளை அணுகலாம் என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில், வரும் 12ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது; 6.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக, மொத்தம் எட்டு லட்சம், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. 55,339 பேர், தேர்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர் தேர்வெழுத, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கள் பெயரில் திருத்தம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், உரிய ஆதாரத்துடன், தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளரை, தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அணுகலாம்.
விண்ணப்பத்தில், பிறந்த தேதியை தவறாகக் குறிப்பிட்டுள்ள விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அதை திருத்திக் கொள்ளலாம். டி.இ.டி., தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்&' இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள், நாளை (இன்று) முதல் 7ம் தேதி வரை, தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும் டி.ஆர்.பி., அதிகாரிகளை அணுகலாம்.
அவர்களிடம், தங்களின் டி.இ.டி., விண்ணப்ப நகல், தேர்வுக் கட்டண ரசீது, விண்ணப்பத்திற்கான ஒப்புகை அட்டை ஆகியவற்றை கொடுத்து, "ஹால் டிக்கெட்&' பெறலாம். அதிகாரிகளை சந்திக்கும் நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெறலாம். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

>>>ஜூலை 06 [July 06]....

  • மலாவி விடுதலை தினம்(1964)
  • தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)
  • இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி இறந்த தினம்(2002)
  • டாலர், அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(1785)
  • தாதாபாய் ‌நெளரோஜி, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1892)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...