கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2012-2013ம் கல்வியாண்டில் விடுவிக்கப்பட்ட பள்ளி மானியத்தில் ரூ.2500 இருப்பு வைக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

>>>மொழி மற்றும் அடிப்படைக் கணிதத் திறன்களில் தனிக்கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு - REVISED

>>>தமிழகத்தில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு...

தமிழகத்தில் இக்கல்வி ஆண்டில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்களின் பதவி உயர்வுக்கு பின்னர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதில் 31.5.2012 நிலவரப்படி அனைத்து இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களும் கடந்த 13ம் தேதி நடந்த பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கவுன்சிலிங்கிற்காக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளது.எனவே, வரும் 30ம் தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இதில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களில் வரும் 3ம் தேதி பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) ராஜ ராஜேஸ்வரி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகளிடம் உறுதி அளித்துள்ளார் என்று மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாநில பொது செயலாளர் குமரேசன், மாநில பொருளாளர் உதயசூரியன், தலைமையிட செயலாளர் சோமசேகர், சென்னை மாவட்ட தலைவர் கயத்தாறு தெரிவித்தனர்.வரும் 30ம் தேதி நடக்கும் வுன்சிலிங்கில் தமிழ் பாடத்தில் 1,227, வரலாறு 416, ஆங்கிலம் 400, கணிதம் 252, அறிவியல் 86, புவியியல் 6 உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

>>>ஜூலை 18 [July 18]....

  • உருகுவே அரசியலமைப்பு தினம்(1830)
  • தென்னாப்பிரிக்க கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்(1918)
  • வியட்நாம் ஐ.நா.,வில் இணைந்தது(1977)
  • நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது(1966)

>>>ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் நியமனம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக் கழக துணை வேந்தராக, அண்ணாமலை பல்கலைக் கழகப் பேராசிரியர் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பேராசிரியர் பத்மநாபன் இருந்தார். அவரது பதவிக்காலம் கடந்தாண்டு ஜூலை மாதம் 12ம் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து, புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவை கவர்னர் அமைத்தார். அக்குழுவின் பரிந்துரையின் பேரில், அண்ணாமலை பல்கலைக் கழக கல்வித் துறை தலைவராக இருக்கும் விஸ்வநாதன் துணை வேந்தராக தேர்வு செய்யப்பட்டார். இவர், வரும் மூன்று ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பார். இதற்கான அரசு உத்தரவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

>>>374மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப்பள்ளிகள் என 1999 பள்ளிகளில் கணினி வழிக்கல்வியை மேம்படுத்த மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவு

>>>G.O Ms.No.261, Dt : July 17, 2012, Pay Grievance Redressal Cell – Extension of the tenure of Pay Grievance Redressal Cell and Appointment of a Member – Orders – Issued.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...