கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆகஸ்ட் முதல் வாரத்தில் டி.இ.டி. ரிசல்ட்

தமிழக அரசால் கடந்த 12ம் தேதி நடத்தப்பட்ட, முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 12ம் தேதி நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) 6.5 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும், 1,027 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்றவர்களின் விடைத்தாள்களை, "ஸ்கேன்&' செய்யும் பணி, சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தினசரி 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் விடைத்தாள்கள், "ஸ்கேன்&' செய்யப்படுகின்றன. இந்தப் பணி, வரும் 25ம் தேதி வரை நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்கள் மேலும் கூறியதாவது:விடைத்தாள், "ஸ்கேன்&' செய்யும் பணி முடிந்ததும், இணையதளத்தில், உத்தேச விடைகள் வெளியிடப்படும். அதில் ஆட்சேபணை இருந்தால், ஒரு வாரத்தில் தேர்வர் தெரிவிக்க, வாய்ப்பு அளிக்கப்படும். அந்த ஆட்சேபணைகள் குறித்த ஆய்வு, பாட நிபுணர்களைக் கொண்டு மூன்று நாள் நடக்கும்.
இதன்பின், அனைத்து விடைத்தாளுக்கும் உரிய மதிப்பீடு பணிகளைச் செய்து, அதற்குரிய மதிப்பெண்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதால், மிக விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண் அளிக்கப்படும்.
தேர்வு முடிவு மற்றும் இறுதி விடைகள், ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.ஆகஸ்ட் முதல் வாரத்தில், முடிவை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>ஜூலை 19 [July 19]....

  • நிக்கரகுவா தேசிய விடுதலை தினம்(1979)
  • நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா அமைக்கப்பட்டது(1976)
  • பிரான்ஸ்,புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)
  • இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)

>>>அரசாணை (நிலை) எண்:172, நாள்:11-07-2012ன் படி 2009-2010 மற்றும் 2010 - 2011ம் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் உருவாக்கப்பட்ட 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தரவு

>>>2012-13 - புதிய அணுகுமுறையிலான கல்வித் திட்டத்தின் கீழ் பெண்கல்வி மற்றும் ஆதி திராவிடர்,பழங்குடியிகர்,சிறுபான்மையினக் கல்வித் திட்டக்கூறுகளின் அடிப்படையில் எட்டாம் வகுப்பு பயிலும் 9000 மாணவ-மாணவியருக்கு கல்விச்சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது...

>>>2012-13 - புதிய அணுகுமுறையிலான கல்வித் திட்டத்தின் கீழ் பெண்கல்வி மற்றும் ஆதி திராவிடர்,பழங்குடியிகர்,சிறுபான்மையினக் கல்வித் திட்டக்கூறுகளின் அடிப்படையில் எட்டாம் வகுப்பு பயிலும் 9000 மாணவ-மாணவியருக்கு கல்விச்சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....

>>>அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2012-2013ம் கல்வியாண்டில் விடுவிக்கப்பட்ட பள்ளி மானியத்தில் ரூ.2500 இருப்பு வைக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

>>>மொழி மற்றும் அடிப்படைக் கணிதத் திறன்களில் தனிக்கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு - REVISED

>>>தமிழகத்தில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு...

தமிழகத்தில் இக்கல்வி ஆண்டில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்களின் பதவி உயர்வுக்கு பின்னர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதில் 31.5.2012 நிலவரப்படி அனைத்து இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களும் கடந்த 13ம் தேதி நடந்த பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கவுன்சிலிங்கிற்காக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளது.எனவே, வரும் 30ம் தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இதில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களில் வரும் 3ம் தேதி பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) ராஜ ராஜேஸ்வரி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகளிடம் உறுதி அளித்துள்ளார் என்று மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாநில பொது செயலாளர் குமரேசன், மாநில பொருளாளர் உதயசூரியன், தலைமையிட செயலாளர் சோமசேகர், சென்னை மாவட்ட தலைவர் கயத்தாறு தெரிவித்தனர்.வரும் 30ம் தேதி நடக்கும் வுன்சிலிங்கில் தமிழ் பாடத்தில் 1,227, வரலாறு 416, ஆங்கிலம் 400, கணிதம் 252, அறிவியல் 86, புவியியல் 6 உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...