கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.என்.எஸ்., பட்டயப் படிப்பை ரத்து செய்ய முடிவு

கடல்சார் படிப்பான டி.என்.எஸ். (டிப்ளமா இன் நாட்டிக்கல் சயின்ஸ்) பட்டயப் படிப்பை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, கடல்சார் பல்கலை துணைவேந்தர் ரகுராம் தெரிவித்தார். துணைவேந்தரின் இந்த கருத்தை, கடல்சார் கல்வி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
நாட்டில் ஒரே ஒரு கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளது. இது, சென்னை அருகே இயங்கி வருகிறது. கடல் சார்ந்த பல்வேறு படிப்புகளை, இந்த பல்கலை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 85க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், கடல் சார்ந்த படிப்புகளை வழங்கி வருகின்றன. இதில், நாட்டிக்கல் சயின்ஸ் பிரிவில், டி.என்.எஸ்., பட்டயப் படிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதை படிப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், இந்த படிப்பில் சேரும் மாணவர்கள், 18 மாதங்கள் கப்பலில் பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சியைப் பெற்றால் தான், படிப்பை நிறைவு செய்து, பட்டம் பெற முடியும்.
ஆனால், ஆண்டுக்கு 2,500 மாணவர்கள், இந்தப் படிப்பை படிக்கும் நிலையில், வெறும் 300 பேர் அளவிற்குத் தான், கப்பலில் பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளது. இதனால், 2007ல் இருந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கப்பல் பயிற்சியை முடிக்காமல் தவித்து வருகின்றனர்.
கப்பலில் பயிற்சி பெறுவதற்கான அனுமதியை, மும்பையில் உள்ள கப்பல் துறை இயக்குனர் ஜெனரல் வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களும், கப்பலில் பயிற்சி பெற போதிய கப்பல்கள் இல்லாததும், நேரம் ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை இருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்தப் படிப்பை ரத்து செய்து விடலாம் என, ஏற்கனவே கப்பல் துறை இயக்குனர் ஜெனரல் அலுவலகம், பல்கலைக்கு தெரிவித்தது.
ஆனால், கடல்சார் பல்கலைக்கும், கப்பல் துறை இயக்குனர் ஜெனரல் அலுவலகத்திற்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் காரணமாக, டி.என்.எஸ்., பட்டயப் படிப்பை ரத்து செய்வதில், பல்கலை காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், கடல்சார் பல்கலையின் புதிய துணைவேந்தராக சமீபத்தில் பொறுப்பேற்ற ரகுராம் கூறியதாவது: டி.என்.எஸ்., பட்டயப் படிப்பிற்கு, தற்போதுள்ள வேலை வாய்ப்பு மற்றும் வரவேற்பு குறித்து, ஆய்வு செய்யப்படும். அதில், பிரச்னை இருப்பது தெரிய வந்தால், டி.என்.எஸ்., படிப்பை ரத்து செய்வோம்.
இதுகுறித்து, தற்போது பரிசீலனை நடந்து வருகிறது. மேலும், இந்த பட்டயப் படிப்பிற்கு பதிலாக, நேரடியாக பி.எஸ்சி., நாட்டிக்கல் சயின்ஸ் பட்டம் வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். கப்பல் பயிற்சி பெறாமல் காத்திருக்கும் மாணவர்கள், இந்த பட்டத்தைப் பெறலாம்.
கடல்சார் முதுகலை சட்டப் படிப்பு மற்றும் எம்.பி.ஏ., (துறைமுகம் மற்றும் கப்பல்) ஆகிய படிப்புகளுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பிரபலப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். இவ்வாறு ரகுராம் தெரிவித்தார்.
பிரச்னையில் சிக்கியுள்ள டி.என்.எஸ்., பட்டயப் படிப்பை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்பதாக துணைவேந்தர் கருத்து தெரிவித்திருப்பதை, கடல்சார் கல்வி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.

>>>பிளஸ் 2 உடனடித் தேர்வு: 25% பேர் மட்டுமே தேர்ச்சி

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், வெறும் 25.91 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒரு லட்சம் மாணவ, மாணவியர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கு, சமீபத்தில் உடனடித்தேர்வு நடத்தப்பட்டு, இதன் முடிவுகளை நேற்று தேர்வுத்துறை வெளியிட்டது. மொத்தம் 86,864 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில், 22,511 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 25.91.
ஒரு பாடத்தை மட்டும் 40,518 பேர் எழுதியதில், 15,820 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இரு பாடங்களை 28,136 பேர் எழுதியதில், 5,432 பேர் தேர்ச்சி பெற்றனர். மற்ற பாடங்களில் தேர்வெழுதியவர்களும், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையும் (அடைப்பு குறிக்குள்) வருமாறு:
மூன்று பாட தேர்வுகள் - 13,120 (1,060)
நான்கு பாட தேர்வுகள் - 3,949 (146)
ஐந்து பாட தேர்வுகள் - 926 (31)
ஆறு பாட தேர்வுகள் - 215 (22)
மொத்தம் தேர்வெழுதியோர்- 86,864
தேர்ச்சி பெற்றோர் - 22,511
தோல்வி அடைந்தோர் - 64,353

>>>27 பதக்கங்களை அள்ளிய கால்நடை மருத்துவ பல்கலை மாணவி

கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்பில், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி மாணவி ஜெபரோஸ் ஜெனிபர், 27 தங்க பதக்கங்களை பெற்று அசத்தினார்.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 15வது பட்டமளிப்பு விழா, தமிழக கவர்னர் ரோசய்யா தலைமையில் நேற்று நடந்தது. விழாவில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு 135 பேரும், மீன்வள அறிவியல் படிப்பிற்கு 20, உணவு தொழில்நுட்ப படிப்புக்கு 19 என, மொத்தம் 174 பேர் இளநிலை பட்டங்களையும், கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 32 பேரும், மீன்வள அறிவியல் படிப்பிற்கு ஏழு பேர் என, மொத்தம் 39 பேர் முதுகலை பட்டங்களையும், ஆய்வியல் நிறைஞர் பட்டங்கள் ஐந்து பேரும், முதுநிலை பட்டயத்தை ஒருவர் என, மொத்தம் 225 பட்டதாரிகளுக்கு, தமிழக கவர்னர் ரோசய்யா பட்டங்களை வழங்கினார்.
இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்பில், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி மாணவிகள் ஜெபரோஸ் ஜெனிபர் 27 பதக்கங்களையும், சுவாதி 5 பதக்கங்களையும், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் கருப்பன்னசாமி 4 பதக்கங்களையும், தூத்துக்குடி மீன்வள கல்லூரி மாணவர் சலோனி சிவம் 5 என, மொத்தம் 99 தங்க பதக்கங்களை, மாணவர்களுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா வழங்கினார்.
அரியானா தேசிய பால்வள ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அனில்குமார் ஸ்ரீவஸ்தவா பேசியதாவது: உலக பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. 1950ல் 17 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, 2010ல், 121.84 டன்னாக உயர்ந்துள்ளது. 1968ல், 112 கிராமாக இருந்த பாலின் அளவு, தற்போது, 2010ல், 281 கிராமாக உயர்ந்துள்ளது.
உலகளவில், உணவு உற்பத்தியில், இந்தியா இரண்டாம் இடமும், முட்டை உற்பத்தியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. ஆசியாவின், முதல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திகழ்கிறது. இப்பல்கலையில், பட்டம் பெறுபவர்களுக்கு தனி சிறப்பு உண்டு. "கால்நடை மருத்துவர் தான், உலகில் சிறந்த டாக்டர். ஏனெனில், அவர் நோயாளியிடம் நோயை கேட்டு தெரிந்து கொள்பவர் அல்ல. தானாகவே, அறிந்து கொள்ள கூடியவர்&' என்பர். அத்தகைய பணியை கால்நடை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அனில்குமார் பேசினார்.

>>>பிளஸ் 2 உடனடி தேர்வருக்கு 10ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 உடனடித் தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியருக்கு, 10ம் தேதி முதல், அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் 3ம் தேதி பிற்பகல் (இன்று), தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள், 10ம் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமை தவிர, இதர நாட்களில், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.
தத்கால் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தேர்வெழுதியவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு சான்றிதழ் அனுப்பப்படும். விடைத்தாள் நகல், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு, செப்டம்பர், அக்டோபர் தனித்தேர்வு ஆகியவை குறித்த அறிவிப்புகள், விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

>>>ஆங்கிலவழிக்கல்வி - (1-8 வகுப்புகள்) - இரண்டாவது பருவ பாடத்திட்டம் [II Term Syllabus - (I - VIII) - English Version]

>>>தமிழ்வழிக்கல்வி - (1-8 வகுப்புகள்) - இரண்டாவது பருவ பாடத்திட்டம் [II Term Syllabus - (I - VIII) - Tamil Version]

>>>ஆகஸ்ட் 04 [August 04]....

  • அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்(1961)
  • சிட்னியில் மத்திய ரயில்நிலையம் திறக்கப்பட்டது(1906)
  • அப்பர் வோல்ட்டா ஆப்ரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது(1984)
  • நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...