கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பு

TamilNadu Private Professional Colleges Association-Health Sciences நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில், பல் மருத்துவம், பாரா மெடிக்கல் மற்றும் ஐ.எஸ்.எம். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் இன்றுடன் நிறைவடைகிறது.
விண்ணப்பங்களை செப்டம்பர் 11ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக 200 ரூபாய் செலுத்த வேண்டும். மெரிட்டில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் செப்டம்பர் 17ம் தேதி வெளியிடப்படும்.
விண்ணப்பங்களை Association Office-Monitor the Admissions, F1 -DOTE Staff Quarters, Guindy, Chennai-25 என்ற முகவரிக்கு அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு www.tnppcahs.org எனும் இணையதளத்தினை அணுகலாம். அல்லது 044-24422211 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

>>>ஜே.ஏ.எம். தேர்வுக்கு செப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்

ஜே.ஏ.எம். எனப்படும் எம்எஸ்சி படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு, 2013ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டு M.Sc படிப்பு, ஒருங்கிணைந்த M.Sc - Ph.D படிப்பு, M.Sc - Ph.D இரட்டை பட்டங்கள் ஆகியவற்றில் சேர JAM நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பெங்களூரில் உள்ள Indian Institute Of Science அல்லது மும்பை, டெல்லி, கான்ப்பூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பயில வாய்ப்புக் கிடைக்கும்.
இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் கிடைக்கும். http://gate.iitd.ac.in/jam/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் உள்ளிட்ட விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

>>>மத்திய கல்வி நிறுவனங்கள் - புதிய நுழைவுத்தேர்வு எப்படி?

ஐஐடி, என்ஐடி மற்றும் ஐஐஐடி போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் வரும் 2013ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஆசைப்படும் மாணவர்கள் சந்தோஷப்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய நடைமுறை பற்றியும், அதற்கு தயாராவது குறித்தும் அறியலாம்.
ஐஐடி-ஜேஇஇ, ஏஐஇஇஇ மற்றும் சில மாநில சிஇடி போன்றவை ஒரே தேர்வாக, 2 கட்டங்களில் நடத்தப்படும்.
தேர்வுமுறை
இத்தேர்வானது, 2 கட்டங்களாக நடத்தப்படும். மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என்ற பெயர்களில் அவை இருக்கும். அனைத்து மாணவர்களும், சி.பி.எஸ்.இ நடத்தும் மெயின் தேர்வை எழுத வேண்டும். இது மல்டிபிள் சாய்ஸ் வினாத்தாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

>>>செப்டம்பர் 10 [September 10]....

  • உலக தற்கொலை தடுப்பு தினம்
  • சீனா ஆசிரியர் தினம்
  • சுவிட்சர்லாந்து ஐநா.,வில் இணைந்தது(2002)
  • 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1858)

>>>தமிழ்நாடு அரசு - பாடப்புத்தகங்கள் [Government of Tamilnadu - Text Books]

Government of Tamil Nadu, India - School Textbooks Online
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் இந்த இணையதளத்தில்
பார்த்துப் பயன்பெற
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Textbooks published by the Department of School Education, Govt. of Tamil Nadu
are hosted in this website for
viewing purpose.
  புது வரவு:  1 முதல் 10 வகுப்புகளுக்கான சிறுபான்மை மொழி பாடப்புத்தகங்கள்
What's New ?
Minority Languages Text Books for the Classes : 1 to 10

Class 1      Class 2      Class 3      Class 4      Class 5      Class 6 


Class 7      Class 8      Class 9      Class 10      Class 11      Class 12  


Diploma in Teacher Education - First Year      Diploma in Teacher Education - Second Year

>>>அமெரிக்க ராணுவம் பாராட்டிய ஆளில்லா விமானம்

 
மதுரையில் கிரானைட் கற்களை அளவெடுக்கும் பணியில், அண்ணா பல்கலை விண்வெளி ஆராய்ச்சி மாணவர்களின், "ஆளில்லா விமானம்' ஈடுபட்டு வருகிறது. இதை விவசாயம், தீயணைப்பு, அளவீடு, விண்வெளி ஆராய்ச்சி, புவியியல் உட்பட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடந்த, கிரானைட் முறைகேடு தொடர்பாக, கிரானைட் கற்களை அளவிடும் பணி நடந்து வருகிறது. குவாரிகளில் உள்ள, "ஸ்டாக் யார்டு' பகுதியில் ஆயிரக்கணக்கில் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இப்பணியை எளிமைப்படுத்தும் விதமாக, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா முயற்சியால், சென்னை அண்ணா பல்கலையின் விண்வெளி ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்த, "தக்ஷா' எனும் பெயர் கொண்ட "ஆளில்லா குட்டி விமானம்' வரவழைக்கப்பட்டது. "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் இந்த விமானம் மூலம், இடையபட்டி பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த விமானம், குவாரிகளில் உள்ள கிரானைட் கற்களால் ஆன ரகசிய அறைகள், பதுங்கு குழியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கற்களை துல்லியமாக படம் பிடித்து அனுப்பியது. இதன் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
100 கி.மீ., சுற்றளவை படம் பிடிக்கும்:
ஆளில்லா விமானத்தை, அளவீடுகள் மட்டுமல்லாமல் விவசாயம், தீயணைப்பு, விண்வெளி ஆராய்ச்சி, புவியியல் உட்பட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும் என்கிறார், அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார். அவர் கூறியதாவது: 1.8 கி., எடையுள்ள ஆளில்லா விமானத்தை எளிதாக தூக்கிச் செல்லலாம். இதில் கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., இணைக்கப்பட்டுள்ளது. "ரிமோட்' மூலம் இயக்கப்படும் இந்த விமானம் அனுப்பும் வீடியோ படத்தை, "லேப்-டாப்'பில் பார்க்கலாம். 5 கி.மீ., சுற்றளவிற்கு பறக்கும். 1 கி.மீ., உயரம் பறக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 25 கி.மீ., வேகத்தில் பறக்கும். 1 கி.மீ., உயரத்தில் பறக்கும் போது, பூமியின் 100 கி.மீ., தொலைவை துல்லியமாக படம் பிடித்து அனுப்பும். இப்படத்தை அடிப்படையாகக் கொண்டு கற்களின் நீளம், அகலம், உயரத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் துல்லியமாகக் கணிக்க முடியும். இதனால், கால விரயம் ஏற்படாது. அளவெடுக்கும் பணியை, அமர்ந்த இடத்தில் இருந்தே முழுமையாகக் கணக்கிட முடியும் என்றார்.

அமெரிக்க ராணுவம் பாராட்டு:
பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில், நான்கு மாணவர்கள் ஆளில்லா விமானத்தை ஆறு ஆண்டுகள் முயற்சிக்கு பின் கண்டுபிடித்தனர். இக்குழுவினரை அமெரிக்க ராணுவம் வரவழைத்தது. அங்கு, ஆளில்லா விமானத்தின் செயல் திறனை பார்த்து அமெரிக்க ராணுவம் வியந்துள்ளது. தங்களது ராணுவ தேவைக்கு இக்குழுவினரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள அண்ணா பல்கலையில் அனுமதி கோரியுள்ளது. ஆகஸ்ட் 15ல், அண்ணா பல்கலை வந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முன்னிலையில், இதன் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இக்குழுவை அப்துல்கலாம் பாராட்டினார். இதை நாட்டிற்காக விரைவில் அர்ப்பணிக்கும்படி கேட்டு கொண்டார்.

பறந்து வந்து தீயை அணைக்கும்!
ஆளில்லா விமானத்தில், குறிப்பிட்ட அளவு பூச்சிகொல்லி மருந்தை வைத்து, 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட பயிர்கள் மீது, 10 நிமிடத்தில் தெளிக்கலாம். சொட்டு நீர் பாசனம் முறையில் எந்த பகுதியில் தண்ணீர் செல்லவில்லை என்பதை கண்டுபிடித்து, அங்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். தீ விபத்து ஏற்படும் பகுதியில் ஆட்கள் செல்ல முடியாதபோது, ஆளில்லா விமானத்தை சற்று உயரமாக பறக்கச் செய்து தீயை அணைக்கும் ரசாயன பொடியை செலுத்தி துரிதமாகவும், முழுமையாகவும் அணைக்க முடியும். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு முழுமையாக உதவத் தயார் என்கிறார் பேராசிரியர் செந்தில்குமார். அவரது, இ-மெயில், kskmit@rediffmail.com மற்றும் kskmit@annauniv.edu என்ற முகவரியை தெரிவித்துள்ளார்.

குட்டி விமானத்தின் கோடி பயன்கள்:
ஆளில்லா விமானத்தில் "ரேடார்' கருவியை பொருத்தி பூமிக்குள்ளும் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். "ரேடார்' மூலம் ராணுவத்தின் உளவு பிரிவினர், விமானத்தில் சென்று வானத்தின் மேகக்கூட்டங்களில் மறைந்து கொண்டு, பூமியில் நடக்கும் சம்பவங்களை ரகசியமாக கண்காணித்து வீடியோ படம் பிடிப்பர். இதை தேசத்தின் நலன் கருதி ராணுவத்தினர் மட்டுமே மேற்கொள்ள முடியும். அண்ணா பல்கலை மாணவர்கள் தங்களது ஆளில்லா விமானத்திலும், 15 லட்சம் ரூபாய் செலவில், "ரேடார்' கருவியை பொருத்தி பூமியில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும். ஆராய்ச்சிக்காக என்பதால் மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்கின்றனர். இதற்கான முயற்சிகளும் நடக்கிறது. பல்துறையில் இதன் மூலம் சாதனை படைக்க முடியும். ஆளில்லா விமானத்தில் அதற்கான, "சாப்ட்வேர்' மட்டும் மாறுபடும்.

"தக்ஷா' பெயர்க்காரணம் என்ன?
ஆளில்லா விமானத்திற்கு, "தக்ஷா - இந்தியா' என்ற பெயர் வைத்தது குறித்து பேராசிரியர் செந்தில்குமார் கூறுகையில், ""சமஸ்கிருதத்தில் "தக்ஷா' என்றால் (ஏர்-சுப்ரிரியர்) "காற்றின் ராஜா' எனப்பொருள். "தக்ஷா' மூலம், முதல்முறையாக மதுரையில் கிரானைட் குவாரிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலை உதவியுடன், விண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக பல்கலை மாணவர்களுக்கு உதவும் வகையில் எங்களது ஆராய்ச்சி அமையும்,'' என்றார்.

>>>மனிதன் நுழைய முடியாத இடத்திலும் செயல்படும் ஆளில்லாத விமானம்

மேலூர் பகுதியில் குவாரிகள் முறைகேடு குறித்த ஆய்விற்கு, அண்ணா பல்கலை மாணவர்கள் உதவியுடன், கேமராவில் படம் பிடிக்கும் ஆளில்லாத விமானம் வரவழைக்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில், 4 ஆராய்ச்சி மாணவர்கள் இதை உருவாகக்கியுளளனர்.
இந்த விமானம் குறித்து பேராசிரியர் செந்தில்குமார் கூறியதாவது: மனிதன் நுழைய முடியாத இடத்திற்குள், செயல்படும் ஆளில்லாத விமானத்தின் பெயர் "தக்ஷா'. முதல் முறையாக தற்போது தான், முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. 1.8 கி.கி., எடையுள்ள இதை, எளிதில் தூக்கி சென்று, பயன்படுத்த முடியும். இதில் கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., இணைக்கப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த விமானம், அனுப்பும் வீடியோ படத்தை லேப்-டாப்பில் பார்க்கலாம். 5 கி.மீ., சுற்றளவிற்கு பறக்கும் தக்ஷா, 1 கி.மீ., உயரம் பறக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 25 கி.மீ., வேகத்தில் பறக்கும்.

இந்த ஆள் இல்லா விமானம் 11/2 அடி உயரம், 2 அடி அகலத்தில் உள்ளது. மொத்த எடை 1.8 கிலோ. இதில் 4 இறக்கைகள் உள்ளன. இவற்றில் தலா 2 விசிறிகள் மூலம் மொத்தம் 8 விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. "ரேடரை' பொருத்தினால், பூமிக்கு கீழே பதுக்கப்பட்டுள்ளவை, கனிம வளங்கள் குறித்தும் அறியலாம். என்றார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...