தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு...
Tamil Nadu - Class 1 to Class 10 Text Books New Price List Released...
தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு...
Tamil Nadu - Class 1 to Class 10 Text Books New Price List Released...
கேரளாவில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டன. ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதை அடுத்து, புதிய பாடங்கள் அடங்கிய புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டன.
இதில், மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், பாலின சமத்துவத்தை விளக்கும் கருத்துகள் இடம்பெற்று உள்ளன. அவற்றை தன் சமூக வலைதள பக்கத்தில் மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி பகிர்ந்தார்.
வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், குழந்தைகளுக்கு வீட்டின் குடும்ப தலைவர் சமையல் செய்து தருவது போன்ற சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இது கேரள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விபரத்தினை TNSED Schools App-ல் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to register the details of textbooks issued for the third semester in TNSED Schools App)...
>>> TNSED Schools App - Version 0.0.52 - Download Link - Updated on 09-01-2023...
தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டியல் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
மேற்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை , பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக தங்களின் 8 digit Teacher id பயன்படுத்தி TNSED Schools App- ல் Login செய்து Schemes Menu -வை பயன்படுத்தி பாடப்புத்தகங்கள் விநியோகித்த பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...
>>> TNSED Schools App - Version 0.0.52 - Download Link - Updated on 09-01-2023...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மாணவிகள் புத்தகம் சுமந்த விவகாரம் - கல்வித்துறை ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் (Students' books Carried issue - 4 Staffs Suspended)...
ராமநாதபுரத்தில் இருந்து நடப்பு கல்வியாண்டுக்குரிய பாடப் புத்தகங்கள் ஜூன் 21ஆம் தேதி ராமேசுவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.
பள்ளியில் புத்தகங்களை இறக்க சுமைத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனால் லாரியில் இருந்து புத்தகங்களை இறக்கி மாணவிகளை சுமக்கச் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மண்டபம் மாவட்டக் கல்வி அலுவலர் முருகம்மாள் விசாரணை நடத்தினார்.
விசாரணை அடிப்படையில் புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிக்கு நியமிக்கப்பட்ட பெருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் சண்முகசுந்தரம், வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் சே.கார்த்திகேயன், இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் ப.கார்த்திகேயன், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி இரவு காவலர் பாலசுப்பிரமணியன் ஆகிய 4 பேரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பாலுமுத்து பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் முக்கியத் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் புத்தகங்களில் இருக்கும் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தமிழ்நாடு அரசினால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன. அப்பாடப் புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடும் பகுதிகளில் முக்கிய தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இடம்பெற்றிருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் ‘பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்’ என்ற தலைப்பில் உள்ள பகுதிகளில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது.
அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மற்ற நூல்களிலும் சாதி அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளன. உ.வே. சாமிநாதரின் ஆசிரியர் பெயரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என்று மாற்றப்பட்டுள்ளது. இதேபோல தமிழில் வெளியான முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயர் மாயூரம் வேதநாயகம் என மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் என மாற்றப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே பாட நூல்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுவருவதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் விளக்கமளித்துள்ளது.
கடந்த 1978ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, திராவிடர் கழக நூற்றாண்டு விழாவையொட்டி தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன.
மேலும், 1997ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இனக் கலவரத்தை அடுத்து, மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கியும், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கியும் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், எதிர்ப்புகளையும் மீறி திமுக அரசு அவரை பாடநூல் தலைவராக பொறுப்பேற்க வைத்தது. இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயரில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு இருப்பது அனைவரையும் வியந்து திரும்பி பார்க்க வைத்து பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்விக்கான பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் அச்சிடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவா் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
தமிழில் உயர்கல்வி பாடநூல்கள் :
தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பாடநூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. இதனால் தமிழ் வழியில் கல்வி பயின்று கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 12ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்து விட்டு கல்லூரியில் முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதால் அவர்களால் கருத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை, இதனால் கற்றலில் பாதிப்பு ஏற்படுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனால் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பாட திட்டங்களை தமிழில் மொழி பெயர்க்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்கும் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் நோக்கில், தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் பாடங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவா் ஐ.லியோனி தெரிவித்து உள்ளார். இதன் மூலம் தமிழ் வழியில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி எளிதாக இருக்கும் என கழகத் தலைவர் தெரிவித்துள்ளார். வரும் கல்வியாண்டில் உயர் கல்விக்கான பாடபுத்தகங்கள் தமிழில் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை தரவுகள் (EMIS) புதுப்பித்தல், 2021-2022 -ஆம் கல்வியாண்டிற்கு 1-7 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகம் தேவைப்பட்டியல் கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம் ந.க.எண்: 30821/ இ/ இ3/ 2021, நாள்: 25-06-2021...
>>> பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம் ந.க.எண்: 30821/ இ/ இ3/ 2021, நாள்: 25-06-2021...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடிந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று தயாரித்து வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனிடையே புதிய கல்வியாண்டில் பிளஸ்2 மாணவர்களுக்கும் பிற மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை அரைமணி நேரத்திற்கு ஒரு முறை என வகுப்பு வாரியாக பாடங்களுக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த அட்டவணைப்படி சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தொலைக்காட்சி மூலமும் தங்கள் பாடங்களை கற்கலாம். ஆசிரியர்களும் அவர்களது வகுப்பு நேரத்தில் இந்த தொலைக்காட்சி கல்வியை பார்வையிட்டு தங்களது மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தொலைபேசி மூலம் விளக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இந்த வாரம் முதல் மாணவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெற்றோரை மட்டும் பள்ளிக்கு அழைத்து பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படும். தொடர்ந்து பிற வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.
1 முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
2021-22-ம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள் வழங்கும் நிகழ்வையும், கல்வித் தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோக்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...
📚 அரசுப் பள்ளிகளில் நாளை(14-06-2021) முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...
📚 நாளை முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை...
புதிய கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்பும் பணி துவங்கியுள்ளது.
தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1 முதல் புதிய கல்வி ஆண்டு துவங்கி உள்ளது. பள்ளிகளை திறந்து, வகுப்புகளை துவங்குவதற்கான ஆயத்த பணிகளில், பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் அலுவலக பணியாளர்கள் வரும், 14ம் தேதி முதல் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் சார்பில், புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டு, ஒவ்வொரு மண்டல அலுவலகங்களிலும், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.இந்த புத்தகங்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளிகளுக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இதற்காக, மாவட்ட வாரியாக போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அதற்கான செலவினங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே வழங்க அனுமதித்தும், தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 006587/ கே1/ 2021 , நாள்: 09-06-2021...
தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல போக்குவரத்து செலவினத் தொகை அனுமதித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 006587/ கே1/ 2021 , நாள்: 09-06-2021...
>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 006587/ கே1/ 2021 , நாள்: 09-06-2021...
தமிழ்நாடு அரசு - இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் PDF - பருவம் 3 - ஆங்கில வழி
2nd Standard English Medium Tamilnadu New Text Books PDF - Term III
2nd Std English Medium Books – Term III | Download Link |
---|---|
Tamil | |
English | |
Mathematics | |
Environmental Studies |
தமிழ்நாடு அரசு - இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் PDF - பருவம் 3 - தமிழ் வழி
2nd Standard Tamil Medium Tamilnadu New Text Books PDF - Term III
2nd Std Tamil Medium Books – Term III | Download Link |
---|---|
தமிழ் | |
ஆங்கிலம் | |
கணிதம் | |
சூழ்நிலையியல் |
தமிழ்நாடு அரசு - இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் PDF - பருவம் 2 - ஆங்கில வழி
2nd Standard English Medium Tamilnadu New Text Books PDF - Term II
2nd Std English Medium Books – Term II | Download Link |
---|---|
Tamil | |
English | |
Mathematics | |
Environmental Studies |
தமிழ்நாடு அரசு - இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் PDF - பருவம் 2 - தமிழ் வழி
2nd Standard Tamil Medium Tamilnadu New Text Books PDF - Term II
2nd Std Tamil Medium Books – Term III | Download Link |
---|---|
தமிழ் | |
ஆங்கிலம் | |
கணிதம் | |
சூழ்நிலையியல் |
தமிழ்நாடு அரசு - இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் PDF - பருவம் 1 - ஆங்கில வழி
2nd Standard English Medium Tamilnadu New Text Books PDF - Term I
2nd Std English Medium Books – Term I | Download Link |
---|---|
Tamil | |
English | |
Mathematics | |
Environmental Studies |
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...