கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அலைபேசி எண்ணை மாற்றாமல்... நிறுவனங்களை மாற்றியோர் எண்ணிக்கை 32 கோடி

நடப்பு ஆண்டு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான, ஏழு மாத காலத்தில், அலைபேசி எண்ணை மாற்றாமல், ஒரு நிறுவனத்திலிருந்து, வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாறியோர் எண்ணிக்கை, 32.10 கோடியாக உள்ளது என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
இந்தியாவில், அலைபேசி சாதனங் களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 91.40 கோடி என்ற அளவில் உள்ளது. "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம், பல்வேறு நிறுவனங்களின், 122 தொலைத்தொடர்பு உரிமங்களை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து, எண்களை மாற்றாமல், நிறுவனங்களை மாற்றுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்ற ஜூலை மாதத்தில், கர்நாடகாவில் தான், அதிக அளவில், அதாவது 72 லட்சம் வாடிக்கையாளர்கள், அலைபேசி எண்ணை மாற்றாமல், நிறுவனங்களை மாற்றியுள்ளனர். இதையடுத்து, ஆந்திரா (57 லட்சம் வாடிக்கையா ளர்), கர்நாடகா ,(56 லட்சம் வாடிக்கையாளர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
சென்ற ஜூலை மாதம் 31ம் தேதி நிலவரப்படி, 5.93 கோடி வாடிக்கையாளர்கள், அலைபேசி எண்ணை மாற்றாமல், மற்ற நிறுவனங்களின் இணைப்பை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர் என, "டிராய்' தெரிவித்துள்ளது.

>>>செப்டம்பர் 13 [September 13]....

  • உலக சாக்லேட் தினம்
  • நியூயார்க் நகரம், அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது(1788)
  • ஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்(1898)
  • ஐதராபாத், இந்திய ஆளுமைக்குள் வந்தது(1948)

>>>Conduct of Teacher Elegibility Test - School Education Department G.O.(Ms)No.222, Dated:24-08-2012

>>>பள்ளி வாகனங்கள் தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் போக்குவரத்து ஆணையரின் கடிதங்கள்

>>>தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி - 2012-2013ஆம் ஆண்டு - நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களாகப் பணிமாறுதல் - தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியீடு

>>>தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி - 2012-2013ஆம் ஆண்டு - நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களாகப் பணிமாறுதல் - தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியீடு -தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>>தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி - 2012-2013ஆம் ஆண்டு - நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களாகப் பணிமாறுதல் - தகுதிவாய்ந்தோர் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>>ஒரே நடைமுறை - துவங்கியது காலாண்டு தேர்வு

கடந்த ஆண்டு வரை, மாவட்ட அளவில் நடந்து வந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், இந்த ஆண்டு முதல், மாநில அளவில், ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றன. தேர்வுத்துறை தயாரித்து வழங்கியுள்ள கேள்வித்தாள் அடிப்படையில், இன்று முதல், காலாண்டுத் தேர்வுகள் துவங்குகின்றன.
வருவாய் மாவட்ட அளவில் நடக்கும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வழங்கப்படும் கேள்வித்தாளுக்கும், பொதுத்தேர்வில், தேர்வுத்துறை வழங்கும் கேள்வித்தாளுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும், இதனால் பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் திணறுவதும், அரசின் கவனத்திற்கு வந்தது. அத்துடன், தேர்வை நடத்தும் முறைகளிலும், தேர்வு அறைகளில் மாணவ, மாணவியர் கடைப்பிடிக்கும் முறைகளிலும், ஒரே சீரான நடைமுறை இல்லாததால், பொதுத்தேர்வில், மாணவர்கள் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காலாண்டு, அரையாண்டுத் தேர்வையும், பொதுத்தேர்வைப் போல், தேர்வுத்துறை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும், பாட வாரியாக கேள்வித்தாளை தயாரித்து, அதை, "சிடி"யில் பதிவு செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம், தேர்வுத்துறை ஒப்படைத்தது. அவர்கள், "பிரின்ட்" எடுத்து, பள்ளிகளுக்கு வினியோகம் செய்தனர்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது: பொதுத் தேர்வைப் போலவே, கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும், 15 நிமிடங்கள் வழங்கப்படும். அதன்பின், காலை, 10:15க்கு, தேர்வு துவங்கும். 10ம் வகுப்பு தேர்வு, 12:45க்கும், பிளஸ் 2 தேர்வு, 1:15க்கும் முடிவடையும். தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர்கள், தேர்வுப் பணியை பார்வையிடுவர்.

>>>பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார் முதல்வர்

இந்தக் கல்வியாண்டில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்ததுடன், மாணவியருக்குப் பரிசுகளையும் வழங்கினார்.
தமிழகத்தில், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமுதாயங்களைச் சேர்ந்த மாணவியர் அனைவருக்கும், சைக்கிள் வழங்கும் திட்டம் கடந்த, 2001-02ல் துவக்கப்பட்டது. தொடர்ந்து, 2005-06ல், மாணவர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த, 2011-12 கல்வியாண்டில், 179.21 கோடி ரூபாய் செலவில், 2.77 லட்சம் மாணவர்கள்; 3.44 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.21 லட்சம் மாணவர்களுக்கு, சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், 196.10 கோடி ரூபாய் செலவில், 2.81 லட்சம் மாணவர்கள்; 3.49 லட்சம் மாணவியர் என, 6.30 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தக் கல்வியாண்டில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார். மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மை வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, ரொக்கப் பரிசுகளை முதல்வர் வழங்கினார்.
இதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு தேர்வுகளில், மாநில அளவில் மூன்று இடங்களை பிடித்த, 93 மாணவ, மாணவியருக்கு, மொத்தம், 18.20 லட்சம் ரூபாய்க்கான ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...