கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார் முதல்வர்

இந்தக் கல்வியாண்டில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்ததுடன், மாணவியருக்குப் பரிசுகளையும் வழங்கினார்.
தமிழகத்தில், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமுதாயங்களைச் சேர்ந்த மாணவியர் அனைவருக்கும், சைக்கிள் வழங்கும் திட்டம் கடந்த, 2001-02ல் துவக்கப்பட்டது. தொடர்ந்து, 2005-06ல், மாணவர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த, 2011-12 கல்வியாண்டில், 179.21 கோடி ரூபாய் செலவில், 2.77 லட்சம் மாணவர்கள்; 3.44 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.21 லட்சம் மாணவர்களுக்கு, சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், 196.10 கோடி ரூபாய் செலவில், 2.81 லட்சம் மாணவர்கள்; 3.49 லட்சம் மாணவியர் என, 6.30 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தக் கல்வியாண்டில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார். மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மை வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, ரொக்கப் பரிசுகளை முதல்வர் வழங்கினார்.
இதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு தேர்வுகளில், மாநில அளவில் மூன்று இடங்களை பிடித்த, 93 மாணவ, மாணவியருக்கு, மொத்தம், 18.20 லட்சம் ரூபாய்க்கான ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

09-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்:மருந்து கு...