- மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)
- பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)
- தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
- தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)
- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிறந்த தினம்(1950)
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>செப்டம்பர் 17 [September 17]....
>>>தரமான கல்வி வேண்டும்: சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
என்ன விலை கொடுத்தாவது குழந்தைகளுக்கு தரமான கல்வியை , தனியார் மற்றும்
அரசுப்பள்ளிகள் கட்டாயம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான
உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில்
தான் உள்ளது. புதிய அறிவு தேடலும், ஒழுக்கமும் உள்ளது தரமான சிறந்த
கல்வியில் தான் எனவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எப். எம். இப்ராஹிம் ஆகியோர் வெளியிட்டிருப்பதாவது: தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தகுந்தாற் போன்று தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை நியமிப்பதில் அரசு முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த வகையில் அரசு என்ன விலை கொடுத்தாவது தரமான கல்வியை அளிக்க வேண்டும். ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில் தான் உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எப். எம். இப்ராஹிம் ஆகியோர் வெளியிட்டிருப்பதாவது: தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தகுந்தாற் போன்று தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை நியமிப்பதில் அரசு முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த வகையில் அரசு என்ன விலை கொடுத்தாவது தரமான கல்வியை அளிக்க வேண்டும். ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில் தான் உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
>>>ஓ.... ஓசோன்: இன்று சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்
சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து
நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம். கடல்
மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு
மண்டலத்தில்' தான் ஓசோன் உள்ளது. 1840ல் ஜெர்மன் அறிஞர் பிரடரிக் ஸ்கான்
பெயின், ஓசோனைக் கண்டறிந்தார். ஓசோனின் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள்
மூலமாகத் துல்லியமாக அறியலாம். பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு
படிப்படியாகக் குறைந்து வருவதை அறிஞர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனைக்
காக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் "மான்ட்ரீல்
ஒப்பந்தம்' எனும் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் பின் ஓசோன் துளை அளவு
குறைந்திருந்தது. எனினும் இதே நிலை நீடித்தால் 2050வது ஆண்டுக்குள் ஓசோன்
துளை மறைந்துவிடும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். மான்ட்ரீல்
ஒப்பந்தத்தை குறிக்கும் வகையில், செப்.16ல் "சர்வதேச ஓசோன் பாதுகாப்பு
தினம்" கடைபிடிக்கப்படுகிறது. ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்துவதே, இத்தினத்தின் நோக்கம்.
என்ன காரணம்: ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு, நாம்
பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் தான் முக்கியக் காரணம். குறிப்பாக, குளோரோ
புளோரோ கார்பன் (சி.எப்.சி.,) எனும் குளிரூட்டிப் பொருளே ஓசோனைச் சிதைத்து,
அதன் அளவைக் குறைப்பதில் முதல் இடத்தில் உள்ளது. ஏ.சி., நெயில் பாலிஸ்,
லிப்ஸ்டிக், தீயணைப்புக் கருவி, "ஸ்பிரேஸ்' போன்றவற்றில் இக்கார்பன்,
குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சி.எப்.சி., ஓசோன் பகுதியை
அடைந்ததும், புறஊதாக் கதிர்களால் தாக்கப்பட்டு, குளோரினைத்
தோற்றுவிக்கிறது. இந்தக் குளோரினே, ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கிறது. ஒரு
சி.எப்.சி., மூலக்கூறு, ஆயிரம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியது.
அதனால் இதை "ஓசோன் கொல்லி' என்கின்றனர்.
என்ன பாதிப்பு: ஓசோன் அளவு குறைந்தால், பூமியின் வெப்பம் உயரும்.
துருவப்பகுதிகளில் பனி உருகி, கடலின் நீர் மட்டம் உயரும். தாழ்வான
பகுதிகள் நீரில் மூழ்கும். ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை
அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக்
குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். இக்கதிர்கள், கடல்
உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் உள்ள பிளாங்டான் எனும் மிதவை உயிரினங்களை,
எளிதில் கொல்லும். இவை அழிவதால், மற்ற கடல் உயிரிகள் இல்லாமல் போகும்
அபாயம் உருவாகும்.
>>>மாணவர்களுக்கு செப்டம்பர் 21ல் திறனறிதல் தேர்வு
தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வரும் 21ம்
தேதி திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட
தனியார் ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் பள்ளிகளில், தற்போது அரசுப்
பள்ளிகளைப் போல், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் திறனறிதல் தேர்வு நடத்த
பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வு கொள்குறி வகையில்
(அப்ஜெக்டிவ் டைப்) இருக்கும்.
தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில், ஆசிரியர்கள் நடத்திய பாடத்தில்
இருந்து, மிகவும் அடிப்படையான கேள்விகள் இருக்கும். இம்மாதம் 21ம் தேதி
தேர்வு நடக்கிறது. இதனடிப்படையில், கற்பித்தில் திறனை மேம்பாடு செய்ய
நடவடிக்கை எடுக்கப்படும்.
>>>6,000 கூடுதல் ஆசிரியர் இடங்களுக்கு அனுமதி
காலிப் பணியிடங்கள் மற்றும் மாணவ, மாணவியரின் அதிக எண்ணிக்கை
ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதலாக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியாகி உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில், இந்தக் கூடுதல் ஆசிரியர்
நியமிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில், 18 ஆயிரம் பட்டதாரி
ஆசிரியரைத் தேர்வு செய்ய உள்ளது. அப்போது, இந்தக் கூடுதல் பணியிடங்கள்
நிரப்பப்படும் எனத் தெரிகிறது.
>>>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளில் காலியாக உள்ள, 243 இடங்களுக்கு, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு, நாளை துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள, 18 அரசு
மருத்துவக் கல்லூரிகளில், 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்களும், அரசு பல்
மருத்துவக் கல்லூரியில், 100 பி.டி.எஸ்., இடங்களும் காலியாக உள்ளன.
இவற்றில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள
இடங்களை நிரப்புவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு, கடந்த ஜூலையில் நடந்தது.
தற்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 39
இடங்கள், பி.டி.எஸ்., படிப்பில், 19 இடங்களும், நிரப்பப்படாமல் திரும்பத்
தரப்பட்டுள்ளன.
முதல்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில், மாணவர்கள்
சேராதது உள்ளிட்ட காரணங்களால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு
ஒதுக்கீட்டில், 79 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 106 பி.டி.எஸ்., இடங்கள்
காலியாக உள்ளன.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளில், மொத்தம் காலியாக
உள்ள, 243 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, கீழ்ப்பாக்கம்
மருத்துவக் கல்லூரி கலையரங்கில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைத் தேர்வுக் குழு செயலர்
சுகுமார் கூறும்போது, "இதில் பங்கேற்க, விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக்
கடிதம் அனுப்பப்படாது. www.tnhealth.org
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள காத்திருப்போர் பட்டியலின்படி,
தகுதியானோர், கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வுக் கட்டணம், சமர்பிக்க
வேண்டிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களையும் இணையதளத்தில் பெறலாம்
என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...