கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வரும் 20ம் தேதி இந்திய அளவில் போராட்டம்: தமிழகத்தில் காலாண்டு தேர்வு நடக்குமா?

வரும், 20ம் தேதி பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக பள்ளிகளில், காலாண்டுத் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, வரும், 20ம் தேதி, 6ம், 7ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வும், ப்ளஸ் 2 முதல் குரூப் மாணவர்களுக்கு இயற்பியல் தேர்வு, மற்ற மாணவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடக்கிறது.

தமிழகத்தில் முதல்முறையாக காலாண்டுப் பொதுத் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில், 20ம் தேதி, பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை,  20ம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் இயக்குமா? என்பதும், அன்று நடக்கும் காலாண்டுத்தேர்வு நடக்குமா என்பதும், கேள்விக்குறியாக உள்ளது.

இன்று அறிவிப்பு: இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜனிடம் நேற்றிரவு கேட்டபோது,""20ம் தேதி நிலைமை குறித்தும், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். நாளை (இன்று) காலை முடிவெடுத்து அறிவிக்கப்படும்,'' என்றார்.

>>>20ம் தேதி நடைபெறும் காலாண்டு தேர்வுகள் ரத்து

வரும், 20ம் தேதி, "பந்த்' நடைபெறவுள்ளதால், மாநிலம் முழுவதும், பள்ளிகளில் நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும், 20ம் தேதி, தேசிய அளவில், "பந்த்' நடத்த, எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் தற்போது நடந்து வருவதால், "பந்த்' அன்று மாணவ,மாணவியர், பள்ளிகளுக்கு செல்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அன்று நடைபெறும் தேர்வினை, வேறு தேதியில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு, தமிழக அரசு அறிவித்துள்ளதால், 20ம் தேதி நடைபெறவிருந்த காலாண்டுத் தேர்வுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

>>>கல்வி துறையில் அதிகாரிகள் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் இருவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக இருந்த கண்ணப்பன், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். பணியாளர் தொகுதி இணை இயக்குனராக இருந்த ராஜ ராஜேஸ்வரி, இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். இருவரும், நேற்று புதிய பொறுப்புகளை ஏற்றனர்.

>>>டி.இ.ஓ.,க்கள் 29 பேருக்கு பதவி உயர்வு: 8 பேர் அதிரடி மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், 29 மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர். எட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் இல்லாமல், காஞ்சிபுரம், நாமக்கல், நாகை, தேனி உள்ளிட்ட எட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேனி சி.இ.ஓ., ரவிச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட துணை இயக்குனர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டார். மேலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 29 பேரை, மாவட்டக் கல்வி அலுவலர்களாக (பொறுப்பு) நியமித்தும், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டார்.

>>>அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் தயக்கம்: மாணவர் எண்ணிக்கை சரிகிறது

தமிழகத்தில் உள்ள துவக்கப் பள்ளிகளில், வசதி வாய்ப்புகளும், ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால், பாதிக்கும் மேற்பட்ட அரசு துவக்கப் பள்ளிகளுக்கு, மூடுவிழா நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.

தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. துவக்கக் கல்வியை தரமானதாக்க, உலக வங்கி உதவியுடன், பத்து ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கம் துவங்கப் பட்டது. இத்திட்டம் துவக்கப்படும் முன், அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வகுப்பறை, கழிவறை, குடிநீர் வசதிகள் குறைவாகவும் இருந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகளால், அனைத்து பள்ளிகளிலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்வி முறையும் மாற்றி அமைக்கப்பட்டு, மாணவர்கள் தாமாகவே கற்றுக் கொள்ளும், செயல்வழிக் கற்றல் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டது.

ஏராளமான துவக்கப் பள்ளிகள் துவங்கியதுடன், புதிய ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டன. நாற்பது மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாறி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை உருவானது. கடந்த பத்து ஆண்டுகளில், துவக்கப் பள்ளிகளின் நிலை, எதிர்பார்த்த அளவிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கையோ, தலைகீழாக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியில், ஆண்டுக்கு, 11.72 சதவீத வளர்ச்சி இருக்கும் நிலையில், துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த, 2004 - 05ல், 62 லட்சமாக இருந்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, தற்போது, 58 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அப்போது, 41:1 என்றிருந்த ஆசிரியர் மாணவர் விகிதம், தற்போது, 27:1 என்ற நிலைமைக்கு மாறியுள்ளது. துவக்கப் பள்ளிகளில், ஓய்வுபெறும் பணியிடங்களையும், பணி நிரவல் செய்வதன் மூலமே நிரப்பிவிடும் நிலை உள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள, அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்துள்ளது.

>>>காமன்வெல்த் உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

இங்கிலாந்து அரசின் சார்பில் வழங்கப்படும் காமன்வெல்த் உதவித் தொகையைப் பெற விரும்பும் இந்திய மாணவர்களிடம் இருந்து, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
புற்று நோய் ஆராய்ச்சி, இருதய சிகிச்சை போன்ற 8 பிரிவுகளில் மருத்துவப் பயிற்சியுடன், உதவித்தொகையும் வழங்கப்படும். ஒரு வருட முதுநிலை படிப்பு அல்லது உயிரி தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்ற 25 துறைகளில் 3 வருட மருத்துவ படிப்புடனும், உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IELTS தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் . விண்ணப்பங்களை www.mhrd.gov.in எனும் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி Section Officer, ES.4 Section, Department Of Higher Education, West Block-1, 2nd Floor, Wing-6, New Delhi-110 066.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 12. மேலும் விவரங்களுக்கு www.sakshat.ac.in அல்லது www.sakshat.ignou.ac.in எனும் இணையதளங்களை அணுகலாம்.

>>>விரிவுரையாளர் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க செப்.24 கடைசிநாள்

மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் விஞ்ஞான மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி குழு பல்கலைக்கழக மானியக்குழுவுடன் இணைந்து நடத்தும்  Jஉனிஒர் றெசெஅர்ச் Fஎல்லொந்ஷிப் மற்றும் விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதி தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை இந்தியன் மற்றும் ஓரியண்டல் வங்கியில் வரும் நாளை (18ம் தேதி) வரை பெற்று கொள்ளலாம். www.csirhrdg.res.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசிநாள் வரும் 24ம் தேதி ஆகும்.
கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அக்டோபர் 1ம் தேதி கடைசி நாள் ஆகும். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேசிய விரிவுரையாளர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...