கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்லூரிகளில் நுண்கலை மன்றங்கள் செயல்படுவது எப்போது?

கல்லூரி மாணவர்களின் பன்முகத் திறமைகளை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட, நுண்கலை மன்றம் தற்போது பெயரவில் மட்டுமே உள்ளது. இதனால், தனி திறன்களை மேம்படுத்த வாய்ப்பு கிடைக்காமல், மாணவர்கள் உள்ளனர்.
மாணவர்களின் பன்முகத் திறமைகளை வளர்ப்பதற்காக, நுண்கலை மன்றங்களை கல்லூரிகளில் அரசு துவங்கியது. இசை, ஓவியம், நாட்டியம், பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்டவை, இதில் கற்றுத் தரப்படுகின்றன.
பெயரளவில் மட்டுமே: இத்துறைக்கான கட்டணம், கல்லூரி கட்டணத்துடன் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. மன்றத்தின் செயல்பாட்டை கவனிக்கும் வகையில், துறை பேராசிரியர் ஒருவரை, கல்லூரி முதல்வர் நியமிப்பார். ஆனால், மாணவர்களின் பன்முகத் திறமைகளை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட நுண்கலை மன்றங்கள், தற்போது பெயரவில் மட்டுமே உள்ளன.
இதுகுறித்து, பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பாட்டு, பேச்சு, இசை என, பல திறமைகளை கொண்டு இருந்த, நடிகர் டி.ராஜேந்திரன், மிமிக்ரி தாமு, லஷ்மண் ஸ்ருதி உள்ளிட்டோரின் திறமையை வெளிகொண்டு வந்தது, கல்லூரிகள்தான். தற்போது, கல்லூரியில் செயல்படாத நுண்கலை மன்றங்களால், மாணவர்களின் திறமைகள் பஸ்களில் பாட்டாகவும், கவிதையாகவும் வெளிவருகின்றன.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அயல்நாடுகளில், இசை, ஓவியம், நாட்டியம் போன்ற ஏதாவது ஒரு நுண்கலையை கட்டாயம் கற்க வேண்டும். இந்தியாவிலும் நுண்கலைகளை, அடிப்படைக் கல்வியில் கற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், கலைகள் அழியாமல் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிதியுதவி தேவை: இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக செயலர் பிரதாபன் கூறியதாவது: நுண்கலை மன்றத்தை செயல்பட அதிகளவில் நிதியுதவி தேவைப்படுகிறது. நிதி பற்றாக்குறை காரணமாகவும், பல கல்லூரிகளில் செயல்படாமல் உள்ளன. ஆடவர் கல்லூரி மாணவர்கள், நுண்கலை மன்ற நிகழ்ச்சிகளில், தங்களின் திறமையை வெளிப்படுத்தும் இடமாக பயன்படுத்தாமல், சண்டை போடும் இடமாக மாற்றினர். இதனால், கல்லூரி முதல்வர் நுண்கலை மன்ற நிகழ்ச்சிகளை நடத்த தயங்குகின்றனர்.
பெண்கள் கல்லூரிகளில் ஓரளவு நுண்கலை மன்றங்கள் செயல்பாடுகள் உள்ளன. நுண்கலை மன்றத்திற்கு என, அரசு யாரையும் நியமிப்பதில்லை. கலை வல்லுனர் ஒருவரை பொறுப்பாளராக நியமித்தால், அவர்கள் மாணவர்கள் கலை ஆர்வத்தை கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சியளித்து ஒரு நல்ல கலைஞராக உருவாக முடியும். இவ்வாறு பிரதாபன் கூறினார்.
ஒழுக்கம் முக்கியம்: கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி கூறுகையில், "மாணவர்களுக்கு முதலில், தனி மனித ஒழுக்கமே முக்கியம். மாணவர்கள் சரியாக நடக்கும் பட்சத்தில், இதுபோன்ற மன்றங்கள் நடத்த, அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

>>>உடல் ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியமாக இருக்க ஒரே வழி உடற்பயிற்சி. இன்றைய நவீன உலகில், உடல் உழைப்பு இல்லாத வேலையைத் தான், பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அனைத்து வேலைகளையும் செய்வதற்கு, இயந்திரங்கள் வந்து விட்டதால், குடும்ப தலைவிகளுக்கும் உடல் உழைப்பு குறைந்து விட்டது.

எனவே, தற்போது தனியாக உடற்பயிற்சி என்பது அவசியம் ஒன்றாகி விட்டது. உடற்பயிற்சி, உடலை கட்டுக் கோப்பாக வைப்பதோடு, மன அழுத்தம், பதட்டத்தை போக்கும் மருந்தாக பயன்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், பதட்டம், மன அழுத்தம் போன்றவை, மீண்டும் தோன்றாத வண்ணம் சரி செய்ய முடிகிறது. உடல், மூளை செயல்பாடுகளை உடற்பயிற்சி சிறப்பாக்குகிறது. சோம்பல் நீக்கி, சுறுசுறுப்பு உண்டாக்குகிறது. தோற்றப் பொழிவு, நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் மேம்படுகிறது. இருதயம், நுரையீரல், ஜீரண உறுப்புகள், நரம்பு மண்டலம் போன்ற உள்ளுறுப்புகள் மேம்பட்டு, ஆயுள் கூடுகிறது. உடற்பயிற்சி செய்வதால், மனதை கட்டுக்குள் வைக்க முடிகிறது. ரத்த ஒட்டம் சீராகி, புத்துணர்வு கிடைக்கிறது.

அமெரிக்கா பல்கலைக்கழக உடல்நல ஆலோசகர் "ஸ்மித்' கூறும்போது, ஒருவர் பதட்டப்படும்போது, அவர்களது உண்ர்ச்சித் தன்மை அதிகரிக்கிறது. இவர்கள் உடற்பயிற்சி செய்வால், மனம் அமைதிப்பட்டு, பதட்டத்தின் அளவை குறைக்க முடிகிறது என்றார். உடற்பயிற்சி செய்வதால், கவலைகள், மன அழுத்தத்தை குறைத்து செழுமையான வாழ்வு வாழலாம் என்பதே நிதர்சனமான <உண்மை.
என்ன தேவை?
* தண்ணீர் அதிகளவில் குடிக்க வேண்டும்.
* எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து விட்டு, காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது நேர்மறையான எண்ணத்துடன் எழுந்திருங்கள்.
* உணவுப் பழக்க வழக்கத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். காலை உணவு அவசியம். சத்தான காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள் ஆகியவை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* "பாஸ்ட் புட்' எனப்படும் உணவுப் பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில்லை.
* உடல் எடையை சீராக வைத்திருங்கள், அதிக எடையும் இல்லாமல், குறைந்த எடையும் இல்லாமல் உயரத்துக்கு ஏற்ற எடை அவசியம்.
* வேலையின் போது, சீரான இடைவெளியில் ஓய்வு அவசியம்.
* உடற்பயிற்சி செய்வது பாதி நோய்களிலிருந்து மனிதனுக்கு விடுதலை அளிக்கும். எனவே தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
* மனிதனின் ஆயுளை குறைக்கும், மது, சிகரெட் பழக்கத்தை அறவே விட்டு விடுங்கள்.
* கோபத்தை குறைத்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

>>>அக்டோபர் 14ல் டி.இ.டி. மறுதேர்வு: புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்

அக்டோபர், 3ம் தேதி நடைபெறுவதாக இருந்த டி.இ.டி., மறுதேர்வு, அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக டி.ஆர்.பி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வரின் கோரிக்கையை பரிசீலனை செய்து, டி.இ.டி., தேர்வுக்கு, புதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
புதிய தேர்வர்களுக்காக, 24ம் தேதி காலை, 10 மணி முதல், 28ம் தேதி மாலை, 5:30 மணி வரை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. இவர்களுக்குள்ள, தேர்வு மையத்தில், எவ்வித மாற்றமும் கிடையாது.
புதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலேயே வழங்க வேண்டும். நேரிடையாக, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது.
புதிதாக விண்ணப்பிப்பவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை நகல் எடுத்து, நகலில் முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை, தேதியுடன் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த பின், விண்ணப்பத்தில், எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.
ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர், மொழிப் பாடத்தை மாற்ற விரும்பினால், 28ம் தேதிக்குள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். புதிய தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்" அனுப்பப்பட மாட்டாது. டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்"டை, பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
பழைய தேர்வர்களுக்கு, ஏற்கனவே டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்" வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்வர்களுக்கு, அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

>>>பேஷன் கம்யூனிகேஷன் - திறமையும் உழைப்பும் தேவை

பேஷன் கம்யூனிகேஷன் என்பது, இன்றைய நிலையில் வளர்ந்து வரும் ஒரு தொழிலாக உள்ளது. குறிப்பிட்ட பார்வையாளர்கள் மத்தியில் பேஷன் டிரெண்டுகளை மேம்படுத்துவதற்கான கம்யூனிகேஷன் தீர்வுகளை, இத்துறை சார்ந்த தொழில் நிபுணர் வழங்குகிறார். ஒருவரின் தனித்திறன்களைப் பொறுத்து, இத்துறையில் அவரவர் சாதனையும், வெற்றியும் அமைகிறது.
பேஷன் கம்யூனிகேஷன் படிப்பில் சேருதல்
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க, பள்ளி மேல்நிலைப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். மாணவர்களை சேர்ப்பதில், பல கல்வி நிறுவனங்கள், வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன.
எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவை சில பொதுவான வழிமுறைகள். மக்களை கவரும் விதத்தில், ரம்மியமான பேஷன் ரசனை உங்களுக்கு இருத்தல் வேண்டும்.
இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
National institute of fashion design
Institute of apparel management(Gurgaon)
IGNOU
National institute of fashion technology(NIFT)
National institute of design(NID)
Symbiosis institute of design
Pearl academy of fashion
WLC India
Amity school of fashion technology
Indian institute of fashion technology(IIFT)
போன்ற கல்வி நிறுவனங்கள் முக்கியமானவை.
செலவினம்
சிம்பயோசிஸ் - ரூ.2,20,000
தேசிய டிசைன் கல்வி நிறுவனம் - ரூ.2,10,800
பியர்ல் அகடமி ஆப் பேஷன் - ரூ.2,50,000
பணி வாய்ப்புகள்
பேஷன் கம்யூனிகேஷன் நிபுணர்களுக்கான பணி வாய்ப்புகள் இன்றைய நிலையில் அதிகம். Visual merchandising, exhibition & display design, graphic design, fashion journalism, styling, photography, advertising and public relations போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய, ஸ்டைல் மற்றும் பேஷன் துறைகளில் ஒருவர் பலவிதமான பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
மேலும், visual imagery, text, information and experiential design போன்ற படைப்பாக்கத் துறைகளிலும் சேர்ந்து பணியாற்றலாம்.
சம்பளம்
புதிதாக இத்துறையில் நுழையும் ஒருவர், வருடம் ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கலாம். அனுபவமும், திறமையும் உள்ள ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.
ஓர் அலசல்
பேஷன் கம்யூனிகேஷன் என்பது Journalism, visual merchandising, advertising and public public relations ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். இத்துறை ஒரு கவர்ச்சிகரமான துறையாகும். இத்துறையில் நுழைந்த புதிதில், ஒருவர் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கும். உழைப்பும், சுய திறமையும் ஒன்று சேர்கையில், இத்துறையில் ஒருவர் பெறும் வெற்றி அலாதியானது!

>>>வனத்துறை தொடர்பான படிப்புகளில் சேர...

வன மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம்,
* வன மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ(முழுநேர 2 வருட படிப்பு)
* மேலாண்மையில் பெல்லோஷிப் படிப்பு(முழுநேர 4 வருட படிப்பு)
ஆகியவற்றை வழங்குகிறது.
தகுதி - முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு, தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முதுநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பெல்லோஷிப் படிப்பிற்கு, தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முதுநிலைப் படிப்பை முடித்திருப்பதோடு, 5 வருட பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
வயது - 45 வயது வரை இருக்கலாம்(2012 ஜுன் 30 நிலவரப்படி)
சேர்க்கை - இப்படிப்புகளில் சேர, 2012 கேட், குழு கலந்தாய்வு, நேர்முகத்தேர்வு, ஜிமேட், யுஜிசி ஜேஆர்எப், கேட் உள்ளிட்ட பல தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் கடைசித்தேதி டிசம்பர் 10.
அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.iifm.ac.in என்ற வலைத்தளம் செல்க.

>>>இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் வழங்கும் படிப்பு

சீனியர் எக்ஸிகியூடிவ் நிலையில் இருப்பவர்களுக்கு, 15 மாதங்களைக் கொண்ட பகுதிநேர, முதுநிலை மேலாண்மைப் படிப்பை இந்நிறுவனம் வழங்குகிறது.
தகுதி - ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருப்பதோடு, 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சேர்க்கை - மெரிட் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் கடைசித் தேதி டிசம்பர் 15.
பிற விரிவான தகவல்களை அறிய www.isb.edu/pgpmax என்ற இணையதளம் செல்க.

>>>முதுநிலைப் படிப்பில் 55% பெற்றவர்கள் விடைத்தாள் திருத்தலாம்

கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகமானது, தன்னிடம் பட்டப்படிப்பு படிக்கும் தனியார் மாணவர்களின் தேர்வுத் தாள்களைத் திருத்தும் பணிக்கு, வெறும் பட்டப்படிப்பு படித்தவர்களை அமர்த்த முடிவுசெய்துள்ளது.
தகுதிவாய்ந்த பேராசிரியர்கள், 1 தேர்வுத் தாளுக்கு ரூ.10 மட்டுமே தரப்படும் இந்த திருத்துதல் பணியை செய்ய பெரும்பாலும் முன்வருவதில்லை. எனவே, தனியார் மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாள்கள் மாதக் கணக்கில் தேங்கி, அம்மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
எனவே, இந்த சிக்கலைப் போக்க, முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55% மற்றும் அதற்கு மேலே எடுத்த பட்டதாரிகளைக் கொண்டு, அந்த மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் முடிவை கோழிக்கோடு பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் பட்டதாரிகள், கடந்த 5 ஆண்டுகளுக்குள் தங்களின் முதுநிலைப் படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு. இந்த பட்டதாரிகள்தான், தனியார் மாணவர்களின் இளநிலை மற்றும் முதுநிலை விடைத்தாள்களை திருத்துவார்கள்.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை பல மாணவர் அமைப்புகள் எதிர்த்துள்ளன. மேலும், பல கல்வியாளர்களும் இந்த முடிவு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...