கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>காலாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்து 03-10-2012 அன்று பள்ளிகள் திறப்பு


வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 5625/M5/2012, நாள்:20-09-2012 ன் படி காலாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளி நாட்காட்டியின்படி 03-10-2012 அன்று பள்ளிகள் திறக்கப்படவேண்டும் என அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மே-2012 தேர்வு முடிவுகள்...

>>>ஒருநாள் பயிற்சிக்காக காலாண்டு விடுமுறையை இழக்கும் ஆசிரியர்கள்

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் தென் மாவட்ட ஆசிரியர்கள், காலாண்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், மங்களூர் வட்டாரத்தில், தென் மாவட்டங்களான, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காலாண்டுத் தேர்வு முடிந்து, நாளை முதல், 30ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்ல, ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், வடலூரில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
வரும், 27ம் தேதி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும்; 28ம் தேதி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களும்; 29ம் தேதி, தலைமையாசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், விடுமுறைக்கு ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தென் மாவட்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம், தமிழகம் முழுவதும் நடக்கிறது. விடுமுறையில் நடைபெறுவதால், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், அங்கு நடக்கும் முகாமில் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

>>>டி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள்

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்குபேர் கொண்ட குழு, அடுத்த வாரம் சென்னையில் கூடுகிறது. குழுவின் இறுதி முடிவு, அடுத்த வாரமே, அரசாணையாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கும் என்பது தெரியாத நிலை இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதே, "கிலி" அடைந்துள்ளனர்.
ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும், அக்டோபர் 3ம் தேதி, மறுதேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. புதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்கக்கோரி, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல், "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே. பணி நியமனம் செய்வதற்கு, இதுவே இறுதித் தேர்வு கிடையாது. எனவே, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கு தனி வழிமுறைகளை வகுக்க வேண்டும்” என, வலியுறுத்தி, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.
டி.ஆர்.பி., முடிவு: "மறுதேர்வில், புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதற்காக 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனால், அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்ற முடிவை, மனுவாக, டி.ஆர்.பி., சமர்ப்பித்தது.
அதேபோல், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து, அரசு எடுத்துள்ள முடிவையும், மனுவாக டி.ஆர்.பி., சமர்ப்பித்தது.
இதை ஏற்று, நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு, அடுத்தவாரம் சென்னையில் கூடி, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, முடிவெடுக்கவுள்ளது.
குழு எடுக்கும் முடிவை, அரசுக்கு தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற்றதும், உடனடியாக அரசாணை வெளியிடப்படும். குழு, எந்த வகையான வழிமுறைகளை உருவாக்கப்போகிறது என, தெரியாமல், தேர்ச்சி பெற்றவர்களும், இனி தேர்வை எழுதப்போகும் தேர்வர்களும், "கிலி” அடைந்துள்ளனர்.
நேர்முகத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தி, அதற்கு தனி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுமா என, தெரியவில்லை. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் என்ற முறை வந்தால், அது முறைகேடுகளுக்கு வழி வகுத்துவிடும். எனவே, உயர்மட்டக்குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கப் போகிறது என்பதை அறிய, தேர்வர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

>>>மாணவர்களுக்கு பன்முகத்திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் வாரத்தின் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம்,மாணவர்களுக்கு, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்க, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து 1.50 நிமிடம், கொடி ஏற்றம், கொடி வணக்கம் 2 நிமிடம், கொடிப்பாடல் 2 நிமிடம், உறுதிமொழி 4 நிமிடம், சர்வசமயவழிபாடு ஒரு நிமிடம், திருக்குறள் மற்றும் விளக்கம் 2 நிமிடம்,தமிழ், ஆங்கில செய்தி வாசிப்பு 4 நிமிடம், இன்றைய சிந்தனை, பழமொழி, பொது அறிவு 2 நிமிடம், பிறந்தநாள் வாழ்த்து அரை நிமிடம் என இருக்க வேண்டும்.
வகுப்பறையில் நடக்கும் வழிபாட்டில், தினமும் ஒரு மாணவர், தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும். இதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். வாரத்தின் இறுதி நாளில் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம், மாணவர்கள் பன்முகத்திறனை வெளிப்படுத்தும், விதமாக இருக்க வேண்டும்.
இதில் ,பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை, மனக்கணக்கு, பொன் மொழிகள், பழமொழிகள், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதை, அனைத்து அரசு உயர்நிலை, மேல் நிலை, நடுநிலை, மாநகராட்சி, நகராட்சி, ஆங்கிலோ இண்டியன், மெட்ரிக்., பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

>>>கொள்ளையடிக்கும் நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள்

தமிழக அரசின் முப்பருவ தேர்வு முறையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், ஒன்றுக்கு பதில், மூன்று பதிப்புகளாக நோட்ஸ்களை வெளியிட்டு, கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன. இதனால், பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளில் மாணவ, மாணவியர் பயன்படுத்தும் புத்தகங்கள், நோட்டுக்களை அரசே நேரடியாக வழங்கியது. தனியார் பள்ளிகள், மாணவ, மாணவியருக்கு இவற்றை வழங்கின. நோட்ஸ்களை மட்டும், வெளி மார்க்கெட்டில் வாங்கிக் கொள்கின்றனர். பல்வேறு நிறுவனங்கள் சார்பில், நோட்ஸ்கள் வெளியிடப்படுகின்றன.
இந்நிறுவனங்கள், கடந்த ஆண்டு வரை, கல்வி ஆண்டுக்கு, பாட ரீதியாக, ஒரே ஒரு நோட்ஸ்சை மட்டுமே வெளியிட்டன. நடப்பு கல்வி ஆண்டு முதல், பள்ளிகளில் முப்பருவ கல்வி முறை திட்டத்தை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனால், நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், மூன்று பருவ முறைக்கும் தனித்தனியாக, நோட்ஸ்களை வெளியிட்டுள்ளன.
தற்போது, பள்ளிகளில், முதல் பருவ தேர்வு முடிந்து விட்டது. அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்துக்கான பாடங்கள் நடத்த உள்ளனர். இதை குறிவைத்து, நோட்ஸ் நிறுவனங்கள், இரண்டாம் பருவ தேர்வுக்கான நோட்ஸ்களை, விற்பனைக்கு அனுப்பி வருகின்றன. கடந்த ஆண்டு, முழு வருடத்திற்குமான, 250 முதல், 300 பக்கங்களை கொண்ட நோட்ஸ் குறைந்தபட்சம், 45 முதல், அதிகபட்சமாக, 110 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், 100 முதல், 120 பக்கங்களை கொண்ட, இந்தாண்டு முதல் பருவ நோட்ஸ்கள், 50 முதல், 75 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டன. தற்போது விற்பனைக்கு வந்துள்ள, இரண்டாம் பருவ நோட்ஸ்கள், 60 முதல், 90 ரூபாய் வரை, விற்கப்படுகிறது. டிசம்பரில் இரண்டாம் பருவ தேர்வு முடிந்து, ஜனவரியில் மூன்றாம் பருவ பாடங்கள் துவங்க உள்ள நிலையில், அதற்குரிய நோட்ஸ்களும், விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளது. இவற்றின் விலை, 60 முதல், 100 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை, ஒரு பாட நோட்ஸ் விலை, 45 முதல், 75 ரூபாய் என, ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து, 200 முதல், 375 ரூபாய் வரை, பெற்றோர் செலவு செய்து வந்தனர். நடப்பு கல்வி ஆண்டில், மூன்று பருவ நோட்ஸ்களுக்கு, 500 முதல், 950 ரூபாய் வரை, செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முப்பருவ முறையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, நோட்ஸ் நிறுவனங்கள் காட்டில் பண மழை பொழிந்து வருவது, பெற்றோர், மாணவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

>>>செப்டம்பர் 24 முதல் டி.இ.டி மறுதேர்வு விண்ணப்பங்கள்

டி.இ.டி., மறுதேர்வுக்கான விண்ணப்பங்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படுகின்றன.
முதன்மை கல்வி அலுவலர் சிவா தமிழ்மணி தனது அறிவிப்பில், "அக்டோபர் 14ம் தேதி, டி.இ.டி., மறுதேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 28ம் தேதி மாலை 5:30க்குள், சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே சமர்ப்பிக்க வேண்டும்" என, தெரிவித்துள்ளார்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், 250 ரூபாய் கொடுத்தும், இதரபிரிவினர் 500 ரூபாய் கொடுத்தும், விண்ணப்பங்களைப் பெறலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...