விதிமுறை மீறி கட்டப்பட்ட 137 கல்லூரி கட்டடங்களுக்கு, கோவை உள்ளூர்
திட்டக்குழுமம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் கட்டட அனுமதிக்காக, விண்ணப்பிக்கும் கல்லூரி நிர்வாகங்கள்,
அனுமதிக்கப்பட்டதை விட, அதிக தளங்கள் அமைத்து கட்டியிருப்பதும்,
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக கட்டியிருப்பதும், சமீபத்தில் உள்ளூர்
திட்டக் குழுமம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து,
இக்கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவை உள்ளூர் திட்டக்குழும
அதிகாரி ஒருவர் கூறியதாவது: விதிமுறைக்கு புறம்பாக கட்டடம் கட்டியுள்ள, 137
கல்லூரி நிர்வாகங்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான
இக்கல்லூரிகள், புறநகரில்தான் அமைந்துள்ளன. சில கல்லூரி நிர்வாகிகள்,
பஞ்சாயத்து தலைவரிடம் அனுமதி வாங்கியுள்ளனர். 2,000 சதுரடி பரப்பளவில் கடை
கட்டவும், 4,000 சதுரடி பரப்பளவில் வீடு கட்டவும் மட்டுமே, பஞ்சாயத்து
தலைவரின் அனுமதி பெற வேண்டும். சிலர் அனுமதியே வாங்காமல் பள்ளி, கல்லூரி,
தொழிற்சாலைகள் கட்டியுள்ளனர். ஒரு மாத காலத்துக்குள், கட்டடத்தின்
விதிமுறைகளை, சரி செய்து கொள்ள, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உரிய
நடவடிக்கை எடுக்கத் தவறும் கட்டடங்களை, இடிப்பதா, "சீல்' வைப்பதா, அபராதம்
விதிப்பதா என்பதை, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>அக். 14ல் ஆசிரியர் தகுதி தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்
ஆசிரியர் தகுதி தேர்வும், பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான
தேர்வும் அக்., 14ல் நடப்பதால், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. டி.இ.டி., தேர்வு அக்.,3ல் நடப்பதாக முதலில்
அறிவிக்கப்பட்டது. தற்போது பி.எட்., படிப்பு முடித்தவர்களுக்கும்
வாய்ப்பளித்து, இந்த தேர்வு அக்., 14க்கு தள்ளி வைக்கப்பட்டது. அதே நாளில்,
பாரத ஸ்டேட் வங்கி தேர்வும் நடக்கிறது. வங்கி தேர்வு முன்பே
அறிவிக்கப்பட்டு, அதற்காக பள்ளி, கல்லூரிகள் தேர்வு மையங்களுக்கு
ஒதுக்கப்பட்டன. இதற்கிடையில் தான், டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இத்தேர்வுக்கு பள்ளி, கல்லூரிகளில் மையங்கள் ஒதுக்கும் பணியில்
ஈடுபட்டபோது, வங்கி தேர்வுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டது தெரிந்து கல்வி
துறையினர் அதிர்ச்சியடைந்தனர். மதுரை கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் இப்பிரச்னை உள்ளது. வங்கி தேர்வு மையங்கள்,
பெரும்பாலும் நகர் பகுதிகளில் தான் ஒதுக்கப்பட்டுள்ளன. டி.இ.டி.,
தேர்வுக்கு, கிராம பகுதி பள்ளி, கல்லூரிகளிலும் மையங்கள்
ஒதுக்கப்படும்.மதுரையில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற
பகுதிகளிலும் மையங்கள் ஒதுக்கப்படும். நகர்களில் மட்டும் மையங்கள்
ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,
என்றார்.
>>>கட்டாய கல்வி உரிமை சட்டம் இன்று முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி
கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு
இன்று முதல் செப்.29 வரை பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர்
கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து
ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. சட்டம், அரசாணைகள், மற்றும்
வழிகாட்டி விதிமுறைகள் சார்ந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இன்று
துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், நாளை நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், செப். 29 ல் உயர்
துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகளை மாநில அளவில் பயிற்சி பெற்ற
ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி
வழங்குகின்றனர். தலைமையாசிரியர்களுக்கு கருத்தாளர்களாக, பயிற்சி பெற்ற
தலைமையாசிரியர்கள், பயிற்சி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில், "காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறையில்,
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு
பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முழு ஆண்டுத்தேர்வு விடுமுறையில்
விடைத்தாள் திருத்தும் பணிகள் வந்துவிடுகிறது. ஆசிரியர்கள் விடுமுறை
தினங்களில் பயிற்சி வழங்க கூடாது,'' என்றனர். தமிழாசிரியர் கழக மாநில துணை
செயலர் இளங்கோவன் கூறுகையில், "ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம், விடுமுறை
தினங்களில் பயிற்சி வழங்க கூடாது. தலைமையாசிரியர்களுக்கு தேர்வு விடுமுறை
கிடையாது. 30 நாள் ஈட்டிய விடுப்பு உள்ளது. விடுமுறை தினங்களில்
பயிற்சிகள் நடத்தும் போது, மாற்று விடுப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.
>>>பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச "சிம்கார்டு'
கோவை கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் 240 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,
மொபைல்போன் "சிம்கார்டு' இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின்
தகவல்கள், தலைமை ஆசிரியர்களை சென்றடைவதில், பல்வேறு சிக்கல்கள் தற்போது
உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், பள்ளி கல்வித்துறை
சார்பில், தலைமையாசிரியர்களுக்கு "சி.யு.ஜி' திட்ட வசதி கொண்ட, மொபைல்போன்
"சிம்கார்டு' இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சியில்,
மொத்தம் 240 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளது. கல்வி அலுவலர்கள் கூறுகையில், "பள்ளி
கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடைய
உதவும். பள்ளி கல்வித்துறை அல்லாத, மற்ற அழைப்புகளுக்கான விதிக்கப்படும்
கட்டணத்தை, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் செலுத்த நேரிடும்.
மொபைல்போன்களை, "சுவிட்ச்- ஆப்' செய்யக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது''
என்றனர்.
>>>தொழிற்கல்வி பணிக்காக 20 ஆண்டுகளாக காத்திருப்பு
தமிழகத்தில் அரசு பள்ளி களில், தொழிற்கல்விஆசிரியர்
பணியிடங்கள் நிரப்பப்படாததால், தொழிற்கல்வி படித்து, வேலைவாய்ப்பு
அலுவலகங்களில் பதிவு செய்தோர், 20 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தமிழகத்தில்
நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 1967ம்
ஆண்டு, தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தையல் கலை, கைத்தறி நெசவு, ஓவியம், விவசாயம், மரவேலை ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க, தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்திற்கு, கடந்த, 1991ம் ஆண்டில் அரசு தடை விதித்தது. தையல், ஓவியம் ஆகியப் பாடங்களுக்கான தடையுத்தரவு மட்டும், 1998ம் ஆண்டில், திரும்பப் பெறப்பட்டது. அத்துடன் 2001ம் ஆண்டு, ஏராளமான தொழிற்கல்வி ஆசிரியர்கள், ஓய்வு பெற்றனர். காலிப் பணியிடங்கள் அதிகரித்தன.
காத்திருப்பு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தொழிற்கல்வி ஆசிரியர் பணி நியமனத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. முதல்வர் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவித்தார். ஓராண்டிற்கு பிறகு ஓவியம், தொழிற்கல்வியில் பயிற்சி பெற்றோர், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் சங்கப் பொதுச் செயலர் தங்கராஜ் கூறியதாவது :
20 ஆண்டுகளுக்கு மேல் தொழில்கல்வி படித்துவிட்டு, வேறு வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். அதிகாரிகளிடம் கேட்டால் விவசாயம், தச்சு, நெசவு ஆகியப் பாடங்களுக்கு, இன்னும் தடை நீக்கம் செய்யப்படல்லை என, மழுப்புகின்றனர்.
வேலைவாய்ப்பு
மீண்டும் பள்ளிகளில் கைத்தொழில் ஆசிரியர்களை வகைப் பிரித்து பார்க்காமல், அனைத்து கைத்தொழில் ஆசிரியர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். கைத்தொழில் பாடம் படித்து, எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருப்போர் எண்ணிக்கை 350க்கும் அதிகம். இவ்வாறு அவர்கூறினார்.

>>>ஒரே பல்கலையின் கீழ் தொலைதூர கல்வி படிப்புகள்
பல்வேறு
பல்கலைக் கழகங்கள் நடத்தி வரும், தொலைதூர கல்வி படிப்புகளை, தமிழ்நாடு
திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து,
உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட்
கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடிக்கணக்கில்... சென்னை;
மதுரை காமராஜர் ; பாரதியார்; பாரதிதாசன் பல்கலை என, பல பல்கலைக் கழகங்கள்,
தொலைதூர கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம், ஒவ்வொரு
பல்கலையிலும், கோடிக்கணக்கில் பணம் புழங்கி வருகிறது. தரமான கல்வி
திட்டங்கள் இல்லாதது, நிதியை பயன்படுத்துவதில் முறைகேடு என,பல்வேறு
குற்றச்சாட்டுகள் மலிந்து கிடக்கின்றன. தொலைதூர கல்வி படிப்புகளை
நடத்துவதற்கென, தமிழ்நாடு
திறந்தநிலை பல்கலை துவங்கப்பட்டது. "தொலைதூர
கல்வி திட்டத்தில் கிடைக்கும் வருவாயில் தான், பல்கலைகளே இயங்குகின்றன.
திடீரென, அத்திட்டத்தை நிறுத்தினால், பல்கலைகளுக்கு பெரும் பாதிப்பு
ஏற்படும்' என, அப்போதிருந்த துணைவேந்தர்கள், அரசிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தொலைதூர கல்வி திட்டங்களை, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும்
திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, இந்தப் பிரச்னையை முறைப்படுத்தும்
முயற்சியில், உயர்கல்வித்துறை இறங்கியுள்ளது.
இக்கருத்து குறித்து, ஏற்கனவே உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. அனைத்து பல்கலைகளில் நடக்கும், தொலைதூர கல்வி திட்டங்களை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் கீழ் கொண்டு வர, உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், தொலைதூர கல்வித் திட்டங்களை தரமானதாக வழங்கவும், முடிவு செய்து உள்ளது.
இத்திட்டம் குறித்து, பட்ஜெட்டுக்கு முன், விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அறிவிப்பாக வெளியாகலாம் என்றும், உயர்கல்வி வட்டாரம் தெரிவித்தது. அரசின் முயற்சி குறித்து, பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் பிச்சாண்டி கூறியதாவது: இந்த திட்டத்தை முழு மனதுடன் வரவேற்கிறோம். பல்கலைகளுக்கு, தொலைதூர கல்வித் திட்டங்கள், பணம் காய்ச்சி மரங்களாக இருந்து வருகின்றன. எந்த வரைமுறையும் இல்லாமல், காலத்திற்கு ஏற்ற தரத்திற்கு உகந்ததாக இல்லாமல், பெயருக்கு தொலைதூர கல்வி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சேர்க்கை மையம் பல்கலைகள், போட்டி போட்டுக்கொண்டு, தெருவிற்கு ஐந்தாறு மாணவர் சேர்க்கை மையங்களை துவங்கி, ஏமாற்றி வருகின்றன. தொலைதூர கல்வி திட்டங்களை முறைப்படுத்தி, அனைத்து பல்கலைகளில் நடக்கும் தொலைதூர கல்வி திட்டங்களையும், ஒரு பல்கலையின் கீழ் கொண்டு வர வேண்டும்.தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், தற்போது போதிய பணியாளர் கிடையாது. அனைத்து பல்கலைகளில் உள்ள தொலைதூர கல்வி திட்டங்களை எடுத்து, சிறப்பாக செயல்படுத்தும் அளவிற்கு தொழில்நுட்பவசதிகளும் இல்லை.
எனவே, முதலில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையை, அனைத்து வகைகளிலும் வலுப்படுத்தி, அதன்பின் அதன் கீழ் தொலைதூர கல்வி திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
இது தொடர்பாக, அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.
இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.

>>>வெறும் பொழுதுபோக்கா சுற்றுலா: இன்று உலக சுற்றுலா தினம்
சுற்றுலா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கொண்டாட்டம் தான்.
சுற்றுலா என்பது, வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு நாட்டின்
பெருமை, அடையாளம், தனித்தன்மை, கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு
வாயில். இதன் மூலம் உலகை ஒருங்கிணைக்க முடிகிறது. சுற்றுலாவின்
முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல்,
சமூக, பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, என்பதை விவரிக்கும்
விதத்திலும், செப்., 27ம் தேதி, உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எரிசக்தி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பது இந்தாண்டின்
மையக்கருத்து. இதன்படி, மின் சிக்கனம், எரிபொருள் சிக்கனம், பசுமை போன்ற
நோக்கங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஒரே இடத்தில் வசிப்பவர்கள், அங்கு
இருந்து புதியதொரு இடங்களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி தானே.
சுற்றுலாக்களில் கல்வி சுற்றுலா, இன்ப சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல
வகை உண்டு.
மீண்டும் ஸ்பெயின்:2011ம்
ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகளவில் 98 கோடியே 30 லட்சம் பேர் சர்வதேச
சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டோடு ஒப்பிடும் போது,
இது 4.6 சதவீதம் அதிகம் என உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2010,
2011ம் ஆண்டுகளில் அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு என்ற பெருமையை,
பிரான்ஸ் பெற்றுள்ளது. 7 கோடியே 95 லட்சம் பேர் பிரான்சுக்கு சுற்றுலா
வந்துள்ளனர். இதற்கு அடுத்த 4 இடங்களில் அமெரிக்கா, சீனா, ஸ்பெயின்,
இத்தாலி உள்ளன. 2011 கணக்கின் படி, 62 லட்சத்து 90 ஆயிரம் வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
உலகின் விருப்பம் எது: தனியார் நிறுவன கணக்கின் படி, உலகில் அதிக மக்களை
ஈர்க்கும் இடமாக லண்டன் விளங்குகிறது. 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,
இங்கு 1 கோடியே 69 லட்சம் பேர் வந்துள்ளனர்.
"டாப் 10 ' எண்ணிக்கை
1. லண்டன் 16 கோடியே 9 லட்சம்
2. பாரீஸ் 16 கோடி
3. பாங்காக் 12 கோடியே 2 லட்சம்
4. சிங்கப்பூர் 11 கோடியே 8 லட்சம்
5. இஸ்தான்புல் 11 கோடியே 6 லட்சம்
6. ஹாங்காங் 11 கோடியே 1 லட்சம்
7. மேட்ரிட் 9 கோடியே 7 லட்சம்
8. துபாய் 8 கோடியே 8 லட்சம்
9. பிராங்பர்ட் 8 கோடியே 1 லட்சம்
10. கோலாலம்பூர் 8 கோடியே 1 லட்சம்
2. பாரீஸ் 16 கோடி
3. பாங்காக் 12 கோடியே 2 லட்சம்
4. சிங்கப்பூர் 11 கோடியே 8 லட்சம்
5. இஸ்தான்புல் 11 கோடியே 6 லட்சம்
6. ஹாங்காங் 11 கோடியே 1 லட்சம்
7. மேட்ரிட் 9 கோடியே 7 லட்சம்
8. துபாய் 8 கோடியே 8 லட்சம்
9. பிராங்பர்ட் 8 கோடியே 1 லட்சம்
10. கோலாலம்பூர் 8 கோடியே 1 லட்சம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...