கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>137 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் உள்ளூர் திட்டக்குழுமம் அதிரடி

விதிமுறை மீறி கட்டப்பட்ட 137 கல்லூரி கட்டடங்களுக்கு, கோவை உள்ளூர் திட்டக்குழுமம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டட அனுமதிக்காக, விண்ணப்பிக்கும் கல்லூரி நிர்வாகங்கள், அனுமதிக்கப்பட்டதை விட, அதிக தளங்கள் அமைத்து கட்டியிருப்பதும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக கட்டியிருப்பதும், சமீபத்தில் உள்ளூர் திட்டக் குழுமம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, இக்கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவை உள்ளூர் திட்டக்குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது: விதிமுறைக்கு புறம்பாக கட்டடம் கட்டியுள்ள, 137 கல்லூரி நிர்வாகங்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இக்கல்லூரிகள், புறநகரில்தான் அமைந்துள்ளன. சில கல்லூரி நிர்வாகிகள், பஞ்சாயத்து தலைவரிடம் அனுமதி வாங்கியுள்ளனர். 2,000 சதுரடி பரப்பளவில் கடை கட்டவும், 4,000 சதுரடி பரப்பளவில் வீடு கட்டவும் மட்டுமே, பஞ்சாயத்து தலைவரின் அனுமதி பெற வேண்டும். சிலர் அனுமதியே வாங்காமல் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் கட்டியுள்ளனர். ஒரு மாத காலத்துக்குள், கட்டடத்தின் விதிமுறைகளை, சரி செய்து கொள்ள, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் கட்டடங்களை, இடிப்பதா, "சீல்' வைப்பதா, அபராதம் விதிப்பதா என்பதை, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

JACTTO GEO State high level committee members press meeting

 ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு JACTTO GEO State high level committee members press conference ...