கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த உத்தரவு

மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களின், தமிழ், ஆங்கில கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக கட்டுரையின் தலைப்பு மற்றும் அதற்கான முழு தகவல்களையும், ஆசிரியர்களே கொடுத்து விடுவார்கள். இதனால் மாணவர்களின் சிந்திக்கும், எழுதும் திறன் வளர்வதில்லை.
இனிமேல், கட்டுரையின் தலைப்பை மட்டுமே ஆசிரியர்கள் வழங்குவார்கள், அதற்கான அனைத்து தகவல்களையும் அவர்களே தொகுத்து, சொந்த நடையில் எழுத வேண்டும். கட்டுரையை மதிப்பீடு செய்து, அதற்கு மதிபெண் வழங்கப்படும்.
கட்டுரையின் நிறை,குறைகளை கூறி மாணவர்களின் எழுதும் திறனை மேம்படுத்த வேண்டும். சிறந்த கட்டுரையை வகுப்பறை மற்றும் கூட்டு பிரார்த்தனையின் போது மாணவர்களை வாசிக்க வைத்து உற்சாகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>7% அகவிலைப்படி உயர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மத்திய அரசு போல மாநில அரசும் ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தித் தரவேண்டும், என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன் கூறியதாவது: எப்போதெல்லாம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம், மாநில அரசும் உயர்த்தி வழங்கும்.
சமீபத்தில் மத்திய அரசு, 7% அகவிலைப்படி உயர்வை அறிவித்து, 65% அகவிலைப்படியை 72 சதவீதமாக்கியுள்ளது. அதேபோல மாநில அரசும் வழங்க வேண்டும். மேலும் இதில், 50% அடிப்படை சம்பளத்துடன் இணைத்து அறிவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

>>>புதுச்சேரி மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மனிதவள மேம்பாட்டு பயிற்சியை இலவசமாக அளிக்க புதுச்சேரி மனிதவள மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆலோசனை மையம் திட்டமிட்டுள்ளது.
புதுவை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் மனிதவள மேம்பாடு பயிற்சி நடத்தப்பட உள்ளது.
தன்னம்பிக்கை, மனக்கட்டுப்பாடு, உலக அளவில் சாதித்தவர்களின் வரலாறுகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித்தேர்வுகள் குறித்த விளக்கம் போன்ற பல தலைப்புகளில் இந்த பயிற்சி இலவசமாக நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியை நடத்த விரும்பும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் கடிதம் அனுப்பி தங்களை பதிவு செய்து கொள்ளலாம். இயக்குனர், மனிதவள மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆலோசனை மையம், 72, முதல் குறுக்குத்தெரு, ஆனந்த ரங்கபிள்ளை நகர், புதுச்சேரி௮ என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>செப்டம்பர் 30 [September 30]....

  • சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
  • போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
  • தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
  • உலகின் முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1882)
  • பாகிஸ்தான், ஏமன் ஆகியன ஐநாவில் இணைந்தன(1947)

>>>பாரதிதாசன் பல்கலை.,யில் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வியில் பி.எட். பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்களும், ஒரே துறையில் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை www.bdu.ac.in எனும் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை அக்டோபர் 7ம் தேதிக்குள் கிடைக்குமாறு, The Director, Centre For Distance Education, Bharathidasan University, Palkalai perur Campus, Trichy-620024 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.bdu.ac.in எனும் இணையதளம் அல்லது 0431- 2407027, 0431- 2407054, 0431- 2407028, 0431- 2407072 எனும் தொலைபேசி எண்களையும் அணுகலாம்.

>>>பணிமாறுதல், சம்பள பிரச்னையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்: இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

"பணிமாறுதல், சம்பளம் தொடர்பான வேண்டுகோளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்,' என, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
மதுரையில் இந்த ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. செயலாளர் ராபர்ட், பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் பிலிப்குணசேகரன், வின்சென்ட் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறியது: தமிழகத்தில் 2009ல், இடைநிலை ஆசிரியர்களை மாநில அளவிலான பதிவுமூப்பின் அடிப்படையில் நியமித்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, வேறு மாவட்டத்திற்கு செல்லக்கூடாது, என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்தது. தற்போது, இதை நீக்க அரசு முயற்சிக்க வேண்டும் என 7 ஆயிரம் பேர், அரசிடம் கோரிக்கை விடுத்தோம். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் விரும்பும் இடத்திற்கு பணிமாறுதல் பெறும்போது, நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எங்களில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் பலர் உள்ளனர். இருந்தும் நான்கு ஆண்டுகளாக அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அடுத்த பிரச்னையாக, சம்பள விகிதத்திலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஐந்தாவது ஊதியக்குழுவில் "பி' பிரிவில் இருந்த எங்களுக்கு, 6வது ஊதியக்குழுவில் "டி' பிரிவு ஊழியர்களுக்கு இணையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் எங்களைவிட ஒருநாள் முன்னதாக பணிநியமனம் செய்யப்பட்டவர், ரூ.11 ஆயிரம் அதிகமாக சம்பளம் பெறுகிறார். பெற்றோரை கவனிக்க இயலாது, தொலைதூர மாவட்டங்களில் பணியாற்றும் எங்களுக்கு பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். சம்பள வேறுபாட்டையும் களைய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

>>>"ஹால் டிக்கெட்' வழங்குவதில் கால தாமதம்: மாணவர் மயக்கம்; டி.பி.ஐ.,யில் பரபரப்பு

பிளஸ் 2 தனி தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குனரக வளாகத்தில் நேற்று, "ஹால் டிக்கெட்' வழங்கப்பட்டது. உடனுக்குடன், "ஹால் டிக்கெட்' வழங்க ஏற்பாடு செய்யாததால், பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த மாணவ, மாணவியர் பலர், மயக்கம் போட்டு விழுந்தனர்.
குவிந்த மாணவர்கள்: அக்டோபர், 4ம் தேதி முதல், 16ம் தேதி வரை, பிளஸ் 2, தனி தேர்வு நடக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், இதில் பங்கேற்கின்றனர். "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தேர்வு துறை இயக்குனர் அலுவலகத்தில், நேற்றும், இன்றும், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், நேற்று தேர்வுத்துறை அலுவலகத்திற்கு வந்தனர். "ஆன்-லைன்' வழியில் விண்ணப்பித்ததற்கான சான்றை காட்டி, "ஹால் டிக்கெட்' பெற, அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேர்வுத்துறை மெத்தனம்: ஆனால், இவர்களுக்கு உடனுக்குடன், "ஹால் டிக்கெட்' வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்யவில்லை. ஒரே ஒரு, "கவுன்டரில்' மட்டும், "ஹால் டிக்கெட்' வழங்கப்பட்டதால், மாணவரும், பெற்றோரும், நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, கூடுதல், "கவுன்டர்'கள் மூலம், "ஹால் டிக்கெட்' வழங்கவோ, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரே ஒரு பெண் போலீஸ் அதிகாரி மட்டும், மர நிழலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். திருப்போரூரைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்ற மாணவர், நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்ததால், பிற்பகல் 2:00 மணிக்கு, மயக்கம் போட்டு சரிந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்தவர்கள், தண்ணீர் தெளித்து, "ஜூஸ்' வாங்கிக் கொடுத்தனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து வந்த வள்ளி என்பவர் கூறுகையில், ""என் மகளுக்கு, "ஹால் டிக்கெட்' பெறுவதற்காக, காலையில் வந்தோம்; இதுவரை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில், என் மகளும், மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். ஒரு, "கவுன்டரில்' கூட, தொடர்ந்து, "ஹால் டிக்கெட்' வழங்கவில்லை,'' என்றார்.
அதிகாரி பதில்: தேர்வு துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை) கூறுகையில், ""2,000 பேர், "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்தனர். நாளைக்கும், "ஹால் டிக்கெட்' வழங்குகிறோம். ஒரே நாளில், பாதிக்கும் மேற்பட்டோர் வந்து விட்டனர். அனைவருக்கும் விரைவில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும்,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...