கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>நரம்பியல் தொடர்பான மூன்றாண்டு பட்டப்படிப்பு
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, நரம்பியல் தொடர்பான மருத்துவப் பரிசோதனை குறித்து, மூன்றாண்டு பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
"பி.எஸ்சி., - நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி" என்ற, இந்த புதிய மூன்றாண்டு
பட்டப் படிப்பை, தமிழகத்தில் முதன்முறையாக, எம்.ஜி.ஆர்., மருத்துவப்பல்கலை
துவக்குகிறது. மூளை நரம்பியல் செயல்பாட்டை, துல்லியமாக அறிவது; முதுகுத்
தண்டுவடப் பகுதி மற்றும் முக்கியப் பகுதிகளில் உள்ள தசைப் பகுதிகளை ஆய்வு
செய்வது தொடர்பாக, இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
தசைப் பகுதிகளின் பலவீனத்தை அறிவது, தூக்கத்தில் திடீரென வலிப்பு
ஏற்படுவது உள்ளிட்ட பிரச்னைகளை, இந்தப் படிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்தப் படிப்பு, முன்னணி மருத்துவமனை வழியாக, மாணவ, மாணவியருக்கு
வழங்கப்படும் என, பல்கலை தெரிவித்துள்ளது.
பொதுவான நரம்பியல் மருத்துவம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த
பிரச்னைகள் குறித்தும், மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஆபத்தான நேரங்களில், நோயாளிகளை எப்படி கையாள்வது என்பது குறித்தும்,
பயிற்சி அளிக்கப்படும். படிப்பை முடித்ததும், உடனடியாக வேலை வாய்ப்புகள்
கிடைக்கும் எனவும், பிளஸ் 2வில், உயிரியல், இயற்பியல்மற்றும் வேதியியல்
பாடங்களை படித்த மாணவ, மாணவியர், இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
என்றும், பல்கலை தெரிவித்துள்ளது.
சென்னையில், விஜயா மருத்துவமனையில் உள்ள, விஜயா கல்வி அகடமி மூலம்,
இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இங்கு, அக்., 15ம் தேதி வரை,
விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
>>>அழகப்பா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
காரைக்குடி அழகப்பா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி
கலையரங்கில் வரும் 8ம்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. தமிழக கவர்னர்
ரோசய்யா பட்டங்களை வழங்குகிறார்.
துணைவேந்தர் சேது சுடலைமுத்து கூறியதாவது: பட்டமளிப்பு விழாவில், பல்கலை
பல்வேறு துறைகள், மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற,
1035 மாணவ, மாணவிகளுக்கும், பல்கலை கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில்,
பயின்று தேர்ச்சி பெற்ற 7075 மாணவர்களுக்கும், இணைவு கல்வி திட்டத்தின்
கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற 648 மாணவ, மாணவிகளுக்கும், தொலை தூர கல்வி
வாயிலாக பயின்று தேர்ச்சி பெற்ற, 27571 மாணவ, மாணவிகளுக்கும் என, மொத்தம்
36 ஆயிரத்து 329 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.
இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 603,மாணவிகள் 20,726.
முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட, 112 ஆய்வு மாணவர்களும்,எம்.பில்., ஆராய்ச்சி
பட்ட ஆய்வில் முதல் இடம் பெற்ற 14 மாணவர்கள், முதுகலை பட்ட படிப்பில்
முதல் இடம்பெற்ற, 28 மாணவர்கள் தங்க பதக்கங்களை,கவர்னரிடம் நேரிடையாக
பெறுகின்றனர்.
இணைப்பு கல்லூரிகளில் முதலிடம் பெற்ற 46 மாணவர்கள், இணைவு கல்வி
தட்டத்தின் கீழ் பயின்று முதலிடம் பெற்ற 10 மாணவர்களுக்கு நேரிடையாக
சான்றிதழ்களை வழங்குகிறார், என்றார்.
>>>நிதித்துறை அமைப்புகள் வழங்கும் படிப்புகள்
நிதித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் நபர்களுக்காக, நிதித்துறை
நிறுவனங்கள், பலவிதமான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன.
தேசிய ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் போன்றவை
அவற்றுள் முக்கியமானவை.
அத்தகைய நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளைப் பற்றி காணலாம்.
1. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ்(NSE)
பைனான்சியல் மார்க்கெட் தொடர்பான முதுநிலைப் படிப்பை இந்நிறுவனம்
வழங்குகிறது. வாரநாள் மற்றும் வார இறுதிநாள் முறையில் இப்படிப்பு
வழங்கப்படுகிறது. இப்படிப்பானது, பைனான்சியல் மேலாண்மைக்கான தேசிய கல்வி
நிறுவனத்தின்(NIFM) ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.
>>>கல்விக்கு உலக வங்கி உதவி
இந்தியாவில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி அளி்க்க உள்ளது.
இந்தியாவில் பள்ளி உயர்கல்வி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ராஷ்டீரிய
மத்யமி்க் சி்க்ஷா அபியான் (ஆர். எம்.எஸ். ஏ) திட்டத்திற்கு சுமார் 500
மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம்
புதுடில்லியில் வெள்ளி்க்கிழமை கையெழுத்தானது.
நிதியமைச்சகத்தின் இணை செயலாளர் பிரமோத் சக்சேனா மற்றும் உலக வங்கிக்கான
இந்திய இயக்குனர் ஓனோ ரூல் ஆகியோரிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக
வங்கி மூலம் பெறப்படும் நிதி கல்விதுறை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என
நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
November 14 - Jawaharlal Nehru's birthday
நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...