காரைக்குடி அழகப்பா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி
கலையரங்கில் வரும் 8ம்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. தமிழக கவர்னர்
ரோசய்யா பட்டங்களை வழங்குகிறார்.
துணைவேந்தர் சேது சுடலைமுத்து கூறியதாவது: பட்டமளிப்பு விழாவில், பல்கலை
பல்வேறு துறைகள், மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற,
1035 மாணவ, மாணவிகளுக்கும், பல்கலை கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில்,
பயின்று தேர்ச்சி பெற்ற 7075 மாணவர்களுக்கும், இணைவு கல்வி திட்டத்தின்
கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற 648 மாணவ, மாணவிகளுக்கும், தொலை தூர கல்வி
வாயிலாக பயின்று தேர்ச்சி பெற்ற, 27571 மாணவ, மாணவிகளுக்கும் என, மொத்தம்
36 ஆயிரத்து 329 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.
இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 603,மாணவிகள் 20,726.
முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட, 112 ஆய்வு மாணவர்களும்,எம்.பில்., ஆராய்ச்சி
பட்ட ஆய்வில் முதல் இடம் பெற்ற 14 மாணவர்கள், முதுகலை பட்ட படிப்பில்
முதல் இடம்பெற்ற, 28 மாணவர்கள் தங்க பதக்கங்களை,கவர்னரிடம் நேரிடையாக
பெறுகின்றனர்.
இணைப்பு கல்லூரிகளில் முதலிடம் பெற்ற 46 மாணவர்கள், இணைவு கல்வி
தட்டத்தின் கீழ் பயின்று முதலிடம் பெற்ற 10 மாணவர்களுக்கு நேரிடையாக
சான்றிதழ்களை வழங்குகிறார், என்றார்.