தமிழகத்தில்
நிலவும் மின்வெட்டால், அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தைக்கும்
பணியில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது; குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு
வினியோகிக்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர். மாவட்டம்தோறும்
சீருடை தைப்பதற்காக, கூட்டுறவு சங்கங்களும், தாலுகா அளவில் அதன் கிளைகளும்
உள்ளன. வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள பெண்கள், சங்கத்தில் உறுப்பினர்களாக
சேர்த்து, அரசு பள்ளி சீருடைகளை தைத்து கொடுக்கின்றனர். ஒரு சீருடை தைக்க,
17 ரூபாய் வழங்கப் படுகிறது. நடப்பாண்டில், ஆண்டுக்கு நான்கு, "செட்'
சீருடை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 24 ஆயிரம் பேர்,
கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ள நிலையில், நடப்பாண்டில், 500 பேர்
புதிதாக சேர்க்கப் பட்டுள்ளனர். ஒரு உறுப்பினர், மூன்று நாட்களில், 100
செட் சீருடை தைக்க காலக்கெடு நிர்ணயித்து, பணிகளை விரைந்து முடிக்க, தையல்
இயந்திரத்தில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை
தவிர, பிற மாவட்டங்களில், தினமும், 14 முதல், 16 மணி நேரம் வரை நிலவும்,
தொடர் மின் வெட்டால், அதிகாரிகள் வழங்கும் கெடுவுக்குள், சீருடை தைக்க
முடிவதில்லை. இதனால், பாதி கல்வியாண்டு நிறைவடையும் தருவாயிலும் கூட, பல
பள்ளிகளில், முதல் செட் சீருடை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. சீருடை
தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் கூறுகையில், "மின்வெட்டு
பிரச்னையால், 100 சீருடை தைக்க, ஒரு வாரமாகிறது. அதிகாரிகளின் கெடுபிடியால்
பணிகளை நிறைவு செய்ய முடியாமல் திணறுகிறோம்' என்றனர். கூட்டுறவு சங்க
அதிகாரி ஒருவர் கூறியதாவது: உறுப்பினர்கள் குறித்த நேரத்தில், சீருடை
தைத்து வழங்காததால், பள்ளிகளுக்கு வினியோகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
முதல் செட் சீருடை, அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம்
செட் சீருடை வழங்குவதில், 50 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. மின்வெட்டு
பிரச்னை குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்
கூறினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு - பத்தாயிரம் பேர் அரசுப்பணிக்குத் தேர்வு...
கடந்த, ஜூலையில் நடந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், நேற்று மாலை
வெளியானது. இதன் வழியாக, தமிழக அரசுப் பணிக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு
செய்யப்பட்டனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 நிலையில், 10,793 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, ஏப்ரல் மாதம் வெளியானது. தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி என்பதால், போட்டி போட்டு இவ்வருடம், பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.ஏப்ரல், 27 முதல், கடைசி தேதியான, ஜூன், 4 வரை, 12 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். எப்போதும் இல்லாத அளவிற்கு, தேர்வர் எண்ணிக்கை ,10 லட்சத்தை தாண்டியதால், தேர்வை நடத்துவது, டி.என்.பி.எஸ்.சி.,க்கு சவாலாக விளங்கியது.
எனினும், மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடன், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ், அவ்வப்போது ஆலோசனை நடத்தி, உரிய ஏற்பாடுகளைச் செய்தார். இதையடுத்து, ஜூலை, 7ம் தேதி, 4,309 மையங்களில், தேர்வுகள் நடந்தன.மொத்தம், 200 கேள்விகள் தரப்பட்டு, ஒரு கேள்விக்கு, 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில், 75 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.முந்தைய தேர்வுகளைப் போல் இல்லாமல், சிந்தித்து விடை அளிக்கும் வகையில், கேள்விகள் இருந்ததால், போட்டி கடுமையாக இருக்கும் என, தேர்வர் கருத்து தெரிவித்தனர். அதனால், தேர்வு முடிவுகளும், தேர்வர் மத்தியில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.தர்மபுரி மாவட்டத்தில், 13 தேர்வர்களுக்கு வழங்கிய கேள்வித்தாளில், 200 கேள்விகளுக்கு பதில், 150 கேள்விகள் அச்சாகி இருந்தது, பிரச்னையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட தேர்வர், சென்னைஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், விடைத்தாள் மதிப்பீடு செய்ய அனுமதித்து, குரூப் - 4 முடிவை வெளியிட, இடைக்கால தடை விதித்து, ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு நடத்தப்பட்டது. 4ம் தேதி, மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வு முடிவை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால், தேர்வு முடிவு, எப்போது வேண்டுமானாலும், "ரிலீஸ்' ஆகலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, நேற்று மாலை, குரூப் - 4 தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. தகவல் அறிந்த தேர்வர், ஒரே நேரத்தில், தேர்வாணைய இணையதளத்தைப் பார்க்க முயன்றதால், இணையதளம் ஸ்தம்பித்தது. தேர்வு முடிவை உடனடியாக அறிய முடியாமல், தேர்வர் தவித்தனர்.
இந்த தேர்வு முடிவை அடுத்து, 10 ஆயிரம் பேர், தமிழக அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். எனினும், இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்' மதிப்பெண் விவரங்களோ, எந்தெந்த பிரிவில், யார் அதிகபட்சமதிப்பெண்களை பெற்றனர் என்ற விவரங்களோ, வெளியிடப்படவில்லை.
இது குறித்து, தேர்வாணைய வட்டாரம் கூறியதாவது:இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்' மதிப்பெண் விவரம், ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை, "ஸ்கேன்' செய்து, தேர்வாணைய இணையதளத்தில், "அப்லோட்' செய்ய வேண்டும்.இதை, இன்று முதல், 17ம் தேதி வரை செய்ய வேண்டும். அதன் பின், சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே, இன சுழற்சி வாரியாக, "கட்-ஆப்' மதிப்பெண்களை வெளியிட முடியும். "கட்-ஆப்' மதிப்பெண் வெளியிட்ட பின், கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>ராணுவ பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளை சேர்க்க எதிர்ப்பு
ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் செயல்படும்,
150க்கும் மேற்பட்ட பள்ளிகளில், நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை, 25
சதவீதம் சேர்க்க, ராணுவத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும்
கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009-ன் கீழ், அரசு நிதியுதவி பெறாத, ஒவ்வொரு
தனியார் பள்ளிகளும், ஒவ்வொரு ஆண்டும், நலிந்த மற்றும் வறுமையில் வாடும்
குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை, 25% அளவில் சேர்க்க வேண்டியது
கட்டாயம்.
இந்த விதிமுறை, நாட்டின் பல பகுதிகளில், ராணுவ வீரர்களின்
குழந்தைகளுக்காக, ராணுவத்தால் நிறுவப்பட்டுள்ள 150க்கும் மேற்பட்ட
பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்தப் பள்ளியில், நலிந்த பிரிவினரின்
குழந்தைகளைச் சேர்க்க, ராணுவத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக, ராணுவ தலைமையகம் சார்பில், ராணுவ அமைச்சகத்திற்கு கடிதம்
ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ராணுவத்தில் பணியாற்றும், 13 லட்சம் வீரர்களின் குழந்தைகளுக்காக, நாடு
முழுவதும், ராணுவ குடியிருப்புகளுக்கு அருகில் பள்ளிகள் நிறுவப்பட்டு
உள்ளன. இதுபோல், 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில்,
நலிந்த பிரிவைச் சேர்ந்த, குழந்தைகளை, 25% அளவில் சேர்த்தால், ராணுவ
வீரர்களின் குழந்தைகள் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு தரமான
கல்வி கிடைக்காது.
ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான பள்ளியில், ஏற்கனவே கடும்
இடப்பற்றாக்குறை உள்ளது. ராணுவ வீரர்களின் குழந்தைகளே, முழு அளவில் அங்கு
சேர முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில், மற்ற பிரிவு குழந்தைகளுக்கு, 25
சதவீத இடங்களை ஒதுக்கினால், ஏராளமான ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு இடம்
கிடைக்காமல் போய் விடும்.
ராணுவ வீரர்கள் மத்தியில் மனஅழுத்தம் அதிகரிப்பதற்கு, அவர்களின்
குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி கிடைக்காததும் ஒரு காரணம். அதனால்,
"ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காக கூடுதல் பள்ளிகளை திறக்க வேண்டும்"
என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்படும் பள்ளிகள்
எல்லாம், ராணுவ வீரர்களின் நல நிதியில் நடத்தப்படுகிறது; அரசு பணம் எதுவும்
அவற்றுக்கு செலவிடப்படுவதில்லை. எனவே, இந்த விஷயத்தில், ராணுவ அமைச்சகம்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>>வீடு தேடி வரும் நண்பன்: இன்று உலக தபால் தினம்
உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று இந்த அமைப்பில்
இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால்
இன்றைய தலைமுறையினருக்கு தபால் துறையின் மகத்துவம் பற்றி தெரிய
வாய்ப்பில்லை. ஆனாலும் இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில்
தபால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்., 9ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

நாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று நவீன
தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். இதனால் தற்போது தகவல்களை உடனுக்குடன்
பரிமாறிக்கொள்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன் உலகில் அல்லது உள்நாட்டில்
எதாவது ஒரு இடத்தில் இருப்பவர், தங்களது குடும்பத்தினை தொடர்பு கொள்ள தபால்
துறையை சார்ந்திருந்தனர்.
பழங்காலத்தில் புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி தகவல்கள் அனுப்பப்பட்டன. மன்னர்கள் ஆட்சியின் போது ஒற்றர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டன. தபால் துறை உருவாக்கப்பட்ட பின், தகவல்கள் தபால் துறை மூலமாக உலக முழுவதும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

குறைந்து விட்டது:
காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை கிராமம், நகரம் வித்தியாசமின்றி இந்தியாவை,
மக்களின் கலாசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை தபால்துறை செய்து வருகிறது.
பொது மக்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் இ-மெயில் வரவால்
குறைந்திருந்தாலும், தபால் வழியாக அனுப்பப்படும் அலுவல் ரீதியான கடிதங்கள்
உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.
உலகில் முதலிடம்:
இந்திய
தபால் துறை 1764ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23
ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது நாடு முழுவதும்
ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கு 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில்
89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. 12 ஆயிரம் தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர்
மையமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய
தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில்
பணிபுரிகின்றனர்.
ஈடு தர முடியுமா!
ஸ்டாம்ப்
விற்பனை, பதிவு தபால்,விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல்
சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை மேற்கொண்டு
வருகிறது. தற்போது மொபைல் போன்களின் வரவால் தபால் துறைக்கு சற்று பின்னடைவு
ஏற்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, தபால்துறையின் முன் உள்ள
மிகப்பெரிய சவாலாக உள்ளது. >>>அக்டோபர் 09 [October 09]....
- உலக அஞ்சல் தினம்
- உகாண்டா விடுதலை தினம்(1962)
- தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)
- டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)
- இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...