கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா...: இன்று உலக மனநல தினம்

உலக மனநல தினம், 1992 முதல் அக்., 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு, ஆறுதல் அளிக்க வேண்டிய தினம். மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு, உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம். உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது. நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, மதுப் பழக்கம், பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம். மனநலம் பாதிக்கப்பட்டால் உடல் நலனும் பாதிக்கப்படும் என்பதை மறக்க கூடாது. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது, சவாலாக உள்ளது. நீண்டகால சிகிச்சை மூலமே, அதுவும் ஓரவுளக்குத்தான் இதை தீர்க்க முடியும். இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. கல்லூரிகளில் மனநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கருணை காட்டலாமே: மனநலம் பாதித்தவர்களை, தீண்டத்தகாதவர் போல பார்ப்பது பிரச்னையை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் வாழ்வோர், அதிகம் படித்தவர்களிடம் இப்பழக்கம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை மதிப்பது, சிகிச்சை அளிப்பது, அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவது போன்றவை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாமல் உள்ளது. மனநோயை பேய் பிடித்திருப்பதாக நினைக்கின்றனர். இதனால் மை வைத்தல், மருந்து வைத்தல், பேய் விரட்டுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இவை மூட நம்பிக்கைகள்.

பாதிக்காமல் இருக்க: மனநலம் பாதிக்காமல் இருக்க, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இசை கேட்பது, விளையாடுவது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது, உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்வது நல்லது. மற்றவர்களுடன் பழக வேண்டும். தனிமையை தவிர்க்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டால் டாக்டரை அணுகுவது போல், மனநலம் பாதிக்கப்பட்டாலும் அணுக வேண்டும்.

>>>அக்டோபர் 10 [October 10]....

  • உலக மனநல தினம்
  • சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்
  • நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)
  • இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்(1906)
  • தமிழறிஞர் மு.வரதராசன் நினைவு தினம்(1974)

>>>School Education- Teachers Recruitment Board - Teacher Elegibility Test - Recruitment Procedure of Secondary Grade Teachers and Graduate Assistants [G.O.(Ms).No.252,Dated:05-10-2012]...

For Secondary Grade Teachers:
  • Higher Secondary Exam - 15 Marks
  • D.T.Ed.,/D.E.Ed., Exam  - 25 Marks
  • Teacher Eligibility Test   - 60 Marks
For Graduate Assistants:
  • Higher Secondary Exam - 10 Marks
  • Degree Exam                  -  15 Marks
  • B.Ed., Exam                   -  15 Marks
  • Teacher Eligibility Test   - 60 Marks

>>>தமிழக அமைச்சர்களும், அவர்களின் துறைகளும் [TamilNadu Ministers and Their Departments]...

>>>உதவி தொடக்க கல்வி அலுவலர் 34 பேருக்கு பணி நியமன உத்தரவு

போட்டித் தேர்வு வழியாகத் தேர்வு செய்யப்பட்ட, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். ஆசிரியர் தேர்வு வாரியம், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, சில மாதங்களுக்கு முன், போட்டித் தேர்வை நடத்தி, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தேர்வுப் பட்டியலை வெளியிட்டது. தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். தேர்வான, 34 பேரில், 16 பேர் ஆண்கள்; 18 பேர் பெண்கள். 34 பேரும், அவரவர் சொந்த மாவட்டங்களில், பயிற்சியை மேற்கொள்ளும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் பயிற்சி மையம், பள்ளிகள், ஆகியவற்றில், 59 நாட்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், துறை முதன்மை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

>>>கல்லூரிகளுக்கு கட்டட உறுதிச்சான்று அவசியம்: அண்ணா பல்கலை துணைவேந்தர் கண்டிப்பு

"பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலை உடனான இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பித்திட, கட்டட உறுதிச்சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் (பொறுப்பு) கூறினார்.
அவர் கூறியதாவது: பொறியியல் கல்லூரிகள், அதிக கட்டணம் வசூலித்ததாக, மாணவ, மாணவியரிடம் இருந்து, 10 கல்லூரிகள் மீது புகார்கள் வந்தன. அண்ணா பல்கலை பேராசிரியர் ஜெயபாலன் தலைமையிலான, மூவர் குழு, சம்பந்தபட்ட கல்லூரிகளில் விசாரணை நடத்தி வருகிறது. அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலை உடனான இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பித்திட, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களுடன், கட்டட உறுதிச் சான்றிதழையும் இணைத்து வழங்க வேண்டும். அண்ணா பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு, நான் நேரில் சென்று ஆய்வு செய்ததில், பல கல்லூரிகளில், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர் இல்லாதது தெரிய வந்தது. 100 ஆசிரியர், பணி நியமனம் செய்ய வேண்டியுள்ளது; இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு, தாமதம் ஆகும் என்பதால், தற்காலிக அடிப்படையில், ஆசிரியரை நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர், எழுத்துத் தேர்வு அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர். எம்.இ., தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தற்காலிக சான்றிதழ் கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது. மாணவ, மாணவியர், உடனடியாக சான்றிதழ் தேவை எனில், அண்ணா பல்கலைக்கு நேரில் வந்து விண்ணப்பித்தால், ஒருசில மணி நேரத்தில், சான்றிதழ் வழங்கப்படும். அண்ணா பல்கலை இணைப்பு காரணமாக, சான்றிதழ் அச்சடிப்பில், சிறிது தாமதம் ஏற்பட்டு, தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 10 நாட்களுக்குள், தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு காளிராஜ் கூறினார்.

>>>தனியார் பள்ளிகளுக்கு 9 சதவீதம் கட்டணம் அதிகரிப்பு

"தனியார் பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு, 9 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம்,'' என, கட்டண நிர்ணய குழுத் தலைவர், சிங்காரவேலு கூறினார்.
சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: இதுவரை, 1,000 பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயித்துள்ளோம். புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், 400 பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்தப் பள்ளிகளுக்கு, டிசம்பருக்குள், புதிய கட்டணம் நிர்ணயிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது. முதல் கட்டமாக, 200 பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்து விட்டோம். இம்மாத இறுதிக்குள், கட்டண விவரம், அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். மீதமுள்ள, 200 பள்ளிகளிடம், விசாரணை நடந்து வருகிறது. நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பரிலோ, அந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரம் வெளியிடப்படும். அனைத்துப் பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணங்களை, தனித்தனியே அட்டவணையிட்டு வழங்குகிறோம். விலைவாசி உயர்வு, சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு, 9 சதவீதம் வீதம், கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம். "ஸ்மார்ட் வகுப்புகள்' நடத்துவதாக கூறி, பல பள்ளிகள் தனியாக கட்டணம் வசூலித்து வந்தன. தற்போது, அந்த வகுப்புகளுக்கும் சேர்த்தே, கட்டணம் நிர்ணயிக்கிறோம். எனவே, இனி, அதற்கென தனி கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித் தந்துள்ளன. கூடுதல் கட்டணங்களை திருப்பி வழங்கியதற்கான ஆவணங்களை காட்டாவிட்டால், மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகளிடம் கேட்டு, உறுதி செய்து கொள்கிறோம். இவ்வாறு சிங்காரவேலு கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...