கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்லூரிகளுக்கு கட்டட உறுதிச்சான்று அவசியம்: அண்ணா பல்கலை துணைவேந்தர் கண்டிப்பு

"பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலை உடனான இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பித்திட, கட்டட உறுதிச்சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் (பொறுப்பு) கூறினார்.
அவர் கூறியதாவது: பொறியியல் கல்லூரிகள், அதிக கட்டணம் வசூலித்ததாக, மாணவ, மாணவியரிடம் இருந்து, 10 கல்லூரிகள் மீது புகார்கள் வந்தன. அண்ணா பல்கலை பேராசிரியர் ஜெயபாலன் தலைமையிலான, மூவர் குழு, சம்பந்தபட்ட கல்லூரிகளில் விசாரணை நடத்தி வருகிறது. அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலை உடனான இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பித்திட, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களுடன், கட்டட உறுதிச் சான்றிதழையும் இணைத்து வழங்க வேண்டும். அண்ணா பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு, நான் நேரில் சென்று ஆய்வு செய்ததில், பல கல்லூரிகளில், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர் இல்லாதது தெரிய வந்தது. 100 ஆசிரியர், பணி நியமனம் செய்ய வேண்டியுள்ளது; இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு, தாமதம் ஆகும் என்பதால், தற்காலிக அடிப்படையில், ஆசிரியரை நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர், எழுத்துத் தேர்வு அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர். எம்.இ., தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தற்காலிக சான்றிதழ் கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது. மாணவ, மாணவியர், உடனடியாக சான்றிதழ் தேவை எனில், அண்ணா பல்கலைக்கு நேரில் வந்து விண்ணப்பித்தால், ஒருசில மணி நேரத்தில், சான்றிதழ் வழங்கப்படும். அண்ணா பல்கலை இணைப்பு காரணமாக, சான்றிதழ் அச்சடிப்பில், சிறிது தாமதம் ஏற்பட்டு, தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 10 நாட்களுக்குள், தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு காளிராஜ் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge

  இன்று (23.01.2026) காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவு Order to take the National Voters' Day Pledge today (...