கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அக்டோபர் 11 [October 11]....

  • தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்(1826)
  • ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1852)
  • ஜான் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு சேவை நியூயார்க்கிற்கும் நியூஜெர்சிக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது(1811)
  • நாசா முதல் முறையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது(1968)

>>>மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிறு சோதனை...

ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள். செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது. நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம். நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம்...

This simple experiment shows the importance of trees on the environment. The water that runs through soil with vegetation -- on the left, comes out clear, while that that without vegetation is muddy. COMMON SENSE. Yet, why do we keep cutting the trees in our forests and complaining why the water in our rivers are so muddy and dirty?

>>>CSSE‐I (Date of Exam:30.07.2011) MARKS OBTAINED BY THE LAST CANDIDATE IN EACH COMMUNAL CATEGORY / POST WERE ARE SUMMONED TO ORAL TEST

>>>TNPSC - Previous Year Question Papers

>>>உலக பல்கலை விவாதம்: 2013ல் சென்னையில் நடக்கிறது

2013ம் ஆண்டுக்கான உலக பல்கலை விவாதம், சென்னையில்  நடைபெறவுள்ளது. இதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள 70 முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவ, மாணவிகள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை உலக பல்கலைக்கழக விவாதம் நடைபெறும். இந்த ஆண்டு பெர்லின் நகரில் விவாதம் நடைபெறுகிறது. 1981ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த விவாத நிகழ்ச்சி, கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. அதில், 2013 ஆண்டு உலக பல்கலைக்கழக விவாதம் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் 2013ம் ஆண்டு இந்த விவாத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என இதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நடராஜன் தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களான, Oxford, Cambridge, Harvard, Yale, MIT, Stanford, Monash, Sydney போன்றவை இந்த விவாத நிகழ்ச்சிக்கு தங்களின் மாணவ, மாணவிகளை அனுப்பி வைப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் உலக சாம்பியன்களாகவே கருதப்படுவர். போட்டி விதிகளின்படி, முதலில் வரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதன் பின்னர் மாணவர்களை குழுக்களாக பிரித்து போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு குழுவுக்கும், போட்டி தொடங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக, விவாதத்திற்கான தலைப்பு வழங்கப்படும். சுமார் 100 அறைகளில் மாணவர்கள் தனித்தனியாக விவாதம் நடத்துவார்கள். இதில் வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில், படிப்படியாக அணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, முடிவில் இறுதிச் சுற்றுக்கான விவாதம் நடத்தப்பட்டு, சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான போட்டிகள் நடக்கும் பெர்லின் நகரில், 2013ம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட உள்ள போட்டிகள் பற்றி விளக்கமளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>தஞ்சை, நெல்லையில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் திறப்பு [Veterinary Colleges Opened in Tirunelveli & Thanjavur]...

தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம், சென்னையில் இருந்தபடி திறந்து வைத்தார். கால்நடைகளுக்கு தரமான மருத்துவ வசதிகளை அளிக்க, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலும், நெல்லை மாவட்டம், ராமையன் பட்டியிலும் புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்ட முதல்வர் உத்தரவிட்டார். ஒரத்தநாட்டில், 177.92 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. கட்டமைப்பு வசதிகளுக்காக, 16.34 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இக்கல்லூரிக்கு, முதல்வர் மற்றும், 38 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நெல்லை மாவட்டம் ராமையன் பட்டியில், மருத்துவக் கல்லூரிக்காக, 139.21 ஏக்கர் நிலமும், கட்டமைப்பு வசதிகளுக்காக, 12.59 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு, முதல்வர் மற்றும், 32 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கல்லூரிகளிலும், தலா, 40 மாணவ, மாணவியர் முதலாண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரு கல்லூரிகளையும், "வீடியோ கான்பரன்சிங்" மூலம், முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னை கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், திறந்து வைத்தார்.
கால்நடை மற்றும் மீன் வளத் துறையினருக்கு, 3.99 கோடி ரூபாயில், 61 புதிய வாகனங்களையும் முதல்வர் வழங்கினார். ஆவின் நிறுவனத்தில், பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின், 56 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

>>>குரூப் 2 முறைகேடு வழக்கு: 8 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி

குரூப் 2 வினாத்தாள் அவுட்டான வழக்கில் கைதான எட்டு பேரின் ஜாமீன் மனுக்களை தர்மபுரி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. தேர்வு வினாத்தாள் அவுட்டானது. இதை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்ட தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், 12 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் கைதான ரங்கராஜன், விவேகானந்தன், பிரபாகரன், பூபேஷ், சுரேஷ் உள்ளிட்ட எட்டு பேர் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வணங்காமுடி, எட்டு பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...