கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குரூப் 2 முறைகேடு வழக்கு: 8 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி

குரூப் 2 வினாத்தாள் அவுட்டான வழக்கில் கைதான எட்டு பேரின் ஜாமீன் மனுக்களை தர்மபுரி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. தேர்வு வினாத்தாள் அவுட்டானது. இதை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்ட தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், 12 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் கைதான ரங்கராஜன், விவேகானந்தன், பிரபாகரன், பூபேஷ், சுரேஷ் உள்ளிட்ட எட்டு பேர் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வணங்காமுடி, எட்டு பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

26-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2025 - School Morning Prayer Activities 76வது குடியரசு தின வாழ்த்துகள்... திருக்குறள்: பால்: ...