"அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழுள்ள அனைத்து
பள்ளிகளில் இருந்து, மைசூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு தலா ரூ.2 ஆயிரம்
"டிடி' அனுப்ப வேண்டும்' என்ற உத்தரவுக்கு ஆசிரியர்கள் மற்றும் கிராம கல்வி
குழு உறுப்பினர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநிலத்தில் 2009லிருந்து ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை அனைவருக்கும்
கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் பராமரிப்பு நிதி
ரூ.7,500, வளர்ச்சி நிதி ரூ.8 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்நிதி மூலம் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகள், பணிகள் மேற்கொள்ளப்படும்.
எஸ்.எஸ்.ஏ., திட்டம் செயல்படும் அனைத்து பள்ளிகளும் இந்நிதியில் கர்நாடக
மாநிலம் மைசூர் "லியோ லிட்டரேச்சர் அன்ட் சில்டரன் மெட்டீரியல்ஸ் பேங்க்'
பெயருக்கு, தலா ரூ.2 ஆயிரம் "டிடி' எடுத்து அனுப்ப வேண்டும், என்ற உத்தரவு,
மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இருந்து
பிறப்பிக்கப்பட்டது. என்ன காரணத்துக்காக என்ற விவரம் தெரியவில்லை என,
தலைமையாசிரியர்கள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள் புலம்புகின்றனர்.
எஸ்.எஸ்.ஏ., பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: எந்த தகவலும்
தெரிவிக்காமல் மைசூர் முகவரிக்கு ரூ.2 ஆயிரம் அனுப்ப மட்டும் உத்தரவு
வந்தது. மாணவர்களுக்கு கற்றல் "மெட்டீரியல்ஸ்'க்காக இத்தொகை
அனுப்பப்படுவதாக கூறுகின்றனர். அப்படி பார்த்தால், இதற்குமுன் அனைவருக்கும்
இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் புத்தகங்கள் பெற, கோவை
நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் "டிடி' அனுப்பினோம். கல்விக்கான
"மெட்டீரியல்ஸ்' அனைத்தும் தமிழகத்தில் கிடைக்கும்போது, தண்ணீர் தர
மறுக்கும் கர்நாடகா மாநில நிறுவனம் மீது மட்டும் எதற்கு இந்த பாசம்,
என்றனர்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>9ம் வகுப்பிற்கு 3 புத்தகங்கள்
அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம்
வகுப்பும் வருகிறது. இவ்வகுப்பிற்கு, பருவத்திற்கு, மூன்று புத்தகங்கள்
வீதம் வினியோகிக்க, பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை
திட்டம் அமலில் உள்ளது. அடுத்த ஆண்டில், ஒன்பதாம் வகுப்பிற்கும்
நீட்டிக்கப்படுகிறது. அதற்காக, ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களை, மூன்று
பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கும் பணி, கல்வித் துறையில் தற்போது நடந்து
வருகிறது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் மேற்பார்வையில்,
பணிகளை முடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்களில்
உள்ள பிழைகளை சரி செய்யும் பணியும், வேகமாக நடந்து வருகிறது. அனைத்துப்
பணிகளையும் முடித்து, மாத இறுதிக்குள், மூன்று பருவத்திற்கான பாடப் புத்தக
பகுதிகளை, பாட நூல் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட நூல் வட்டாரம் கூறியதாவது: ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்கள்
அச்சிடும் பணி, நவம்பரில் துவங்கும். தற்போது, எட்டாம் வகுப்பு வரை,
பருவத்திற்கு, இரு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஒன்பதாம் வகுப்பில்,
பாடத் திட்டங்கள் அதிகம். எனவே, ஐந்து பாடப் புத்தகங்களை, பருவத்திற்கு,
மூன்று புத்தகங்களாக வழங்க திட்டமிட்டுள்ளோம். எட்டாம் வகுப்பு வரையிலான
மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்களை அச்சிட, 140
அச்சகங்களுக்கு, தற்போது, "ஆர்டர்' வழங்கி வருகிறோம். இவ்வாறு, துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
>>>பள்ளிகள் பற்றிய புள்ளிவிபரங்கள் சேகரிப்பு: உண்மை நிலை வெளிவரும்
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு
வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான
விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என,
மொத்தம், 55 ஆயிரத்து 667 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 5.49
லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 1.35 கோடி மாணவ, மாணவியர், படித்து
வருகின்றனர். அனைத்துப் பள்ளிகள், அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ,
மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி,
அவை, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த விவரங்களின்
அடிப்படையில், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களை தீட்டவும்,
பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை,
ஆண்டுதோறும் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து வகை
பள்ளிகளுக்கும், 32 பக்கங்கள் அடங்கிய படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட
இயக்ககத்தின் சார்பிலும், இதர வகுப்புகளுக்கு, மத்திய இடைநிலை
கல்வித்திட்டம் சார்பிலும், விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்ப படிவத்தில், தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அதற்கு,
சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர். மேலும், இனசுழற்சி என்ற அடிப்படையில், பல்வேறு இன
மாணவர்கள் பங்கேற்கும் நடைமுறை விவரம், ஒப்பந்த ஆசிரியர் எண்ணிக்கை,
அவர்களைப் பற்றிய விவரங்கள், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் உட்பட,
பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு பணியை, வரும்
நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளிகளில்
உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.
>>>போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பிரிவு பணி: வேலைவாய்ப்பு பதிவுமூப்பு பட்டியலால் அதிர்ச்சி
அரசு போக்குவரத்துக் கழகத்தில், தொழில்நுட்பப் பிரிவு பணிக்காக, மாவட்ட
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்ட பதிவு மூப்பு பட்டியலைக் கண்டு,
பலர் அதிர்ச்சியடைந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட, இளநிலை
தெழில்நுட்பர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இதே பணிக்கு, கடந்த, 2010ல் நடந்த நேர்முகத்
தேர்விற்கான பதிவு மூப்பு பட்டியலில், 1992, ஜனவரி மாதம் வரை பதிந்தவர்கள்
இடம் பெற்றிருந்தனர். தற்போது வெளியிட்ட பதிவு மூப்பு பட்டியலில், 1992,
பிப்ரவரி மாதத்திலிருந்து பதிந்தவர்களின் பெயர் இருக்க வேண்டும். ஆனால்,
1995, 96ல் பதிந்தவர்களின் பெயர்கள் மட்டும் உள்ளன. இதைக் கண்டு, ஐ.டி.ஐ.,
முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, அரசு வேலைக்காக
காத்திருக்கும் பலர், அதிர்ச்சி அடைந்தனர். வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர் இதுகுறித்து கூறியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, 46; பிற்பட்டோர் மற்றும் மிகவும்
பிற்பட்டோருக்கு, 41; பிற பிரிவினருக்கு, 36 என, வயது வரம்பு
நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதை முறையே, 41, 36 மற்றும்
31 ஆக குறைத்து, அரசு உத்தரவிட்டது. அதன்படி, பதிவு மூப்பு பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து வயது குறைத்ததால், கடந்த, 1992 முதல், 1994 வரை
பதிந்தவர்கள், பட்டியலில் இடம் பெறவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
எதிர்பார்ப்போடு பட்டியலை காண வந்த பலர், ஏமாற்றம் அடைந்தனர். அதோடு, "வயது
வரம்பை தளர்த்தி உத்தரவிட்டு, அரசு எங்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்'
என, கோரிக்கை விடுத்தனர்.
>>>14ம் தேதி டி.இ.டி., மறுதேர்வு: 6.82 லட்சம் பேர் எழுதுகின்றனர்
டி.ஆர்.பி., 14ம் தேதி நடத்தும், டி.இ.டி., மறுதேர்வில், 6.82 லட்சம் பேர்
பங்கேற்கின்றனர். ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வில், 6.67 லட்சம் பேர்
பங்கேற்றனர். அவர்களில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், தோல்வி
அடைந்த தேர்வருக்காக, இம்மாதம், 3ம் தேதி, மறுதேர்வு நடக்க இருந்தது; பின்,
புதிய தேர்வர்களும், தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக, 14ம் தேதிக்கு தள்ளி
வைக்கப்பட்டது. இதற்காக, கடந்த மாதம், 24 முதல், 28ம் தேதி வரை, மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன; 17 ஆயிரம்
பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து, 6.82 லட்சம் பேர், 14ம் தேதி நடக்கும்
தேர்வில் பங்கேற்கின்றனர். 1,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில், தேர்வுகள்
நடக்கின்றன. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல்தாளும், பிற்பகலில்,
பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இரு
தேர்வுகளும், தலா, 150 மதிப்பெண்களுக்கு நடக்கும். தேர்வுக்கு, 3 மணி நேரம்
வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தேர்வை கண்காணிக்க,
டி.ஆர்.பி., உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
>>>புதிய வழிமுறைகளால் ஆசிரியர் பணிக்கு கிடுக்கிப்பிடி...
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தமிழக அரசு வெளியிட்டுள்ள
புதிய விதிமுறைகளால், தேர்வர் மத்தியில், எப்போதும் இல்லாத அளவிற்கு,
கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. "வெயிட்டேஜ்'
அடிப்படையில், 100 மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. டி.இ.டி.,
தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 60 மதிப்பெண்களை பெற, தேர்வில், 150க்கு,
135 மதிப்பெண்கள் பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம், தேர்வர்களுக்கு
ஏற்பட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் அமலான பின், டி.இ.டி.,
தேர்வு முறை அமலுக்கு வந்தது. கடந்த ஜூலையில் நடந்த இத்தேர்வு,
வழக்கத்திற்கு மாறாக, அதிக சிந்திக்கும் திறனையும், அதிலும், ஒரு நொடியில்,
சரியான விடையை கணிக்கும் திறன் படைத்தவர்களால் மட்டுமே விடை அளிக்கும்
வகையிலும் அமைந்து இருந்தது.அதேபோல், தேர்வெழுதிய, 6.5 லட்சம் பேரில்,
வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தங்களை சமாதானப்படுத்தி, அடுத்த, டி.இ.டி., தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், "டி.இ.டி., தேர்வுக்குப் பின், ஆசிரியரை நியமனம் செய்ய, புதிய வழிமுறைகளை
உருவாக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்படி, "வெயிட்டேஜ்'
மதிப்பெண் அடிப்படையில், ஆசிரியர் பணி
நியமனம் நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2, ஆசிரியர்
பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, பி.எட்., மற்றும் டி.இ.டி., தேர்வு என,
தனித்தனியே மதிப்பெண்கள் பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், டி.இ.டி.,
தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள், "வெயிட்டேஜ்' மதிப்பெண்களாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர கல்வித் தகுதிகளில், தேர்வர் பெற்ற மதிப்பெண்
அடிப்படையில், 40மதிப்பெண்கள் வழங்கப்படும்.புதிய முறையின்படி, பெரும்பாலான
தேர்வர்களுக்கு, 40 மதிப்பெண்கள் சுளையாக கிடைக்கலாம். ஆனால், இது
மட்டுமே, வேலையை உறுதி செய்யாது. டி.இ.டி., தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள,
60 மதிப்பெண்களில், எவ்வளவு மதிப்பெண்களை தேர்வர் பெறுகின்றனரோ, அதைப்
பொறுத்தே, ஆசிரியர் வேலை கிடைக்கும். எனவே, டி.இ.டி., தேர்வு மதிப்பெண்களே,வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். டி.இ.டி., தேர்வுக்கு,
மொத்தம் 150 மதிப்பெண்கள். இதில், 60 சதவீதம் (90 மதிப்பெண்) பெற்றால்,
தேர்ச்சி என்ற நிலை இருக்கிறது. கடந்த தேர்வில், இந்த, 60 சதவீத
மதிப்பெண்களை பெற்றவர் எண்ணிக்கை வெறும், 2,448 தான்.இனி, புதிய
வழிமுறையின்படி, டி.இ.டி., தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 60
மதிப்பெண்களையும், முழுவதுமாக பெற வேண்டுமெனில், 90
சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற வேண்டும்.அதன்படி, 150க்கு, 135
மதிப்பெண்கள் பெற்றால் தான், 60க்கு, 60 பெற முடியும். 90 மதிப்பெண்களை
பெறவே,சிக்கலைச் சந்தித்த பலருக்கு, 135 மதிப்பெண்களை எடுப்பது சுலபம்
அல்ல. பணி நியமனம் நடக்கும்போது, தேர்வர் மத்தியில் கடுமையான போட்டி
ஏற்படும். மொத்தத்தில், ஆசிரியர் வேலை, இனி தகவல் தொடர்புத்துறையில் ஆள்
சேர்ப்பு போல தகுதிப் போட்டி அதிகரிக்கும்.மதிப்பெண் என்பதை விட, தகுதி
என்ற நிலை வரும்போது, அதிக அளவில் வடிகட்டும் நடைமுறைகளும் உருவாகும்.அரசு
பள்ளிகளில், நிரந்தர பணிகளில் சேரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம்,
பென்ஷன் மற்றும் அரசு விடுமுறைகள் வசதி மட்டும் அல்ல, பணிப் பளு, பொறுப்பு
அதிகரிப்புக்கு இத்தேர்வு முறை வழிகாட்டி இருக்கிறது என்ற கருத்தும்
உள்ளது.
>>>மொழிப்பாடம் கற்பிப்பதில் முரண்பாடு: ஆங்கிலத்தில் தடுமாற்றம்
தமிழக கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில், மொழிப்
பாடங்கள் கற்பிப்பதில் முரண்பாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு
உயர்கல்வி மன்றப் பரிந்துரைகளை, சில பல்கலைகள், நடைமுறைப்படுத்துவதில்லை
என்றும் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்திலுள்ள கலை, அறிவியல்,
கல்லூரிகளில், வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணலில், பெரும்பாலான மாணவர்கள்,
ஆங்கிலத்தில் பேச முடியாமல் சிரமப்படுகின்றனர்.இளநிலைப் பட்டப் படிப்பில்,
மொழிப் பாடத் திட்டத்திலுள்ள குறைபாடுகள் தான், இதற்கு காரணமாக,
கருதப்படுகிறது.
பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., போன்ற, இளங்கலை
துறை மாணவர்கள், 2 செமஸ்டர்கள் மட்டுமே ஆங்கிலம், தமிழ் பாடங்களைப்
படிக்கின்றனர். ஆனால், பி.எஸ்.சி., அறிவியல், பி.எஸ்.சி., ரசாயனம் போன்ற
படிப்புகளுக்கு இப்பிரச்னையில்லை.
படிப்புகளுக்கு இப்பிரச்னையில்லை.
இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அந்தந்த சிறப்புப்
பாடங்களில் பட்ட மேற்படிப்பில் சேரலாம். ஆனால், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம்
படிக்க வேண்டுமென்றால், மொழிப் பாடத்தை இளநிலைப் பட்ட வகுப்பில், படித்துத்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்ட வகுப்பில், பிற முதன்மைப்
பாடம் படிக்கும் மாணவர்கள், நான்கு செமஸ்டர்களில் மொழிப் பாடத்தில்
தேர்ச்சி பெற்றிருந்தால் தான், முதுநிலை ஆங்கிலம், தமிழ் படிக்க முடியும்.
இதனால், பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ.,
பி.எஸ்சி.,(ஐ.டி.,) போன்ற பாடங்களில், இளநிலைப் பட்டம் பெற்றவர்கள்,
எம்.ஏ., தமிழ், எம்.ஏ., ஆங்கிலம் பட்டமேற்படிப்பு வகுப்பில் சேரத் தகுதி
இல்லாதவர்களாக, கருதப்படுகின்றனர். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள
விரும்பும் இத்துறை மாணவர்களுக்கு, முதுகலை தமிழ், முதுகலை ஆங்கிலம் பட்ட
மேற்படிப்பு படிக்க, வாய்ப்பில்லை.
மாணவர்கள் நலன் கருதி, இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் அனைவருக்கும்,
மொழிப்பாடங்களை, நான்கு "செமஸ்டர்"களிலும் நடத்த வேண்டும் என,
முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் கணேசன், முதல்வர் மற்றும் உயர்கல்வித்
துறை முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்கு, மனு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து, பேராசிரியர் கணேசன் கூறியதாவது:தமிழ்நாடு மாநில உயர்கல்வி
மன்றத்தின் பரிந்துரைப்படி, பொதுப் பல்கலைகள் அனைத்திலும், 2008- 09
கல்வியாண்டிலிருந்து, 4 செமஸ்டர்களிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்
பாடங்கள், இடம்பெற வேண்டும். இந்த பரிந்துரைகளை, சில பல்கலைகள்
நடைமுறைப்படுத்தாமல் உள்ளன.
தமிழகத்திலுள்ள, ஒன்பது பொது பல்கலைகளில், பாரதிதாசன், அழகப்பா, அன்னை
தெரசா ஆகியவற்றில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரை
பின்பற்றப்படுகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், இக்கல்வியாண்டு
முதல், நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிகிறது. மதுரைப் பல்கலையில், நான்கு
பருவங்களுக்கும் மொழிப்பாடங்கள் உள்ளன.
திருவள்ளுவர் பல்கலை, பெரியார் பல்கலைகளில், இது, பாடத்திட்டக்குழுவின்
பரிசீலனையில் உள்ளது. சென்னை மற்றும் பாரதியார் பல்கலையில், இப்பரிந்துரை
பின்பற்றப்படவில்லை. அனைத்து பல்கலைகளிலும், இந்த பரிந்துரை சீராக
பின்பற்றப்படாத நிலையில், 2008-09 கல்வியாண்டு முதல், 2011-12 கல்வியாண்டு
வரை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, இளநிலைப் பட்டங்கள், எந்த
அடிப்படையில் சமமாகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதுதொடர்பாக, கல்லூரிக் கல்வித்துறை சார்பில், விளக்கம்
கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், இளநிலை பட்டப் படிப்புகளில் மொழிப்
பாடங்கள், ஒரே முறையில், கற்பிக்கப்பட வேண்டும். அண்ணா பல்கலைகள் அனைத்தும்
ஒருங்கிணைக்கப்படுவதுபோல, கலை, அறிவியல் கல்லூரிகளில், மொழிப்பாடங்கள்
ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து, கடந்த ஆண்டு அக்டொபர் மாதம், அரசுக்கு அனுப்பப்பட்ட
கோரிக்கை மனு, ஆரம்ப நிலையிலே பரிசீலிக்கப்பட்டிருந்தால், தற்போது, இந்த
குறையை களைந்திருக்கலாம். இந்த, 2012- 13 கல்வியாண்டிலாவது, இக்குறையைச்
சரி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
பல்கலைகளில், இதுபோன்ற குளறுபடிகள், களையப்படாத நிலையில், தமிழ் மற்றும்
ஆங்கிலப் பாடங்களில், 25 மதிப்பெண்களுக்கு, செய்முறைத் தேர்வு முறையை
அறிமுகப்படுத்த, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...