புதுச்சேரி பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள பழைய புத்தகங்களை, இலவசமாகக் கொடுக்கும் முடிவிற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழகத்தில்,
ஆனந்தரங்கம் பிள்ளை நூலகம் உள்ளது. சர்வதேச தரத்திலான இங்கு, 2
லட்சத்திற்கும் மேற்பட்ட, பலதுறை நூல்கள், 31 மின் ஆய்வு இதழ்களை
பராமரிக்கின்றனர். பல்கலை மாணவர்கள் மட்டுன்றி, பிற மாநில ஆய்வு
மாணவர்களும் குறிப்பு எடுத்துச் செல்கின்றனர். புதுமையான பரிந்துரை: இங்குள்ள பழைய புத்தகங்களைப் பற்றி ஆராயக் குழு
ஏற்படுத்தினர். அவர்கள் நூலகத்தில் உள்ள, பழைய புத்தகங்களை பார்வையிட்டு,
அகடமி கவுன்சிலுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், பராமரிக்க முடியாத
புத்தகங்களை, மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து, அப்புறப்படுத்தி விடலாம்
என, புதுமையான பரிந்துரை செய்திருந்தனர். இதற்கு, பல்கலைக் கழக நிர்வாகமும் ஒப்புதல் அளித்தது. மாணவர்களுக்குத்
தேவையான புத்தகம் இருந்தால், அதன் பெயரை எழுதிக் கொடுத்து விட்டு இலவசமாகப்
பெறலாம் என, அறிவித்தனர். கொந்தளிப்பு: இந்த விசித்திரமான அணுகுமுறை, பேராசிரியர்கள், ஆராய்ச்சி
மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக
நிர்வாகத்தையும், நூலகத்தையும் தொடர்பு கொண்டு, இத்திட்டத்தை உடனே
நிறுத்துமாறு, எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: மிகப் பழமையான, அரிய நூல்கள் பல
உள்ளன. இவற்றில் பல மீண்டும் அச்சில் வருமா என்பது சந்தேகம். அவை வெளியில்
கிடைப்பதும் அரிது. அவற்றை இலவசமாகக் கொடுத்து, அழித்து விட்டால், ஆய்வு
மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். சிதம்பரம் ராஜா முத்தையா நூலகத்தில் பராமரிக்கும் நூல்கள் கிழிந்தாலும்,
அப்படியே வைத்துள்ளர். அவற்றை ஸ்கேன் செய்து, மீண்டும் உயிர் தருகின்றனர்.
அது போல், இங்கே செய்ய வேண்டும். இதற்கு, அதிக செலவாகாது. தனி நபர்களுக்கு
இலவசமாகக் கொடுப்பதை விட, துறை நூலகங்களுக்குக் கொடுத்தால், அனைத்து
மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வாய்ப்பு
அடுத்த ஆண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும்
தேர்வர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, இம்மாதம், 15ம்
தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
துறையின் அறிவிப்பு: நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு வசதியாக, செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிவு செய்ய, ஏற்கனவே பலகட்ட வாய்ப்புகள் தரப்பட்டன. எனினும், கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில், மாணவ, மாணவியர் பங்கேற்க வசதியாக, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்; இதுவே, இறுதி வாய்ப்பு. தேர்வுத்துறை இணையதளங்களில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தபட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம், 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
துறையின் அறிவிப்பு: நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு வசதியாக, செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிவு செய்ய, ஏற்கனவே பலகட்ட வாய்ப்புகள் தரப்பட்டன. எனினும், கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில், மாணவ, மாணவியர் பங்கேற்க வசதியாக, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்; இதுவே, இறுதி வாய்ப்பு. தேர்வுத்துறை இணையதளங்களில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தபட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம், 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
>>>டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் பாரிமுனை இடத்திற்கு மாற்றம்
சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும்
டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம், 15ம் தேதி முதல், பாரிமுனையில் உள்ள புதிய
கட்டடத்தில் இயங்க உள்ளது. வணிக வரித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தில்
இயங்கி வந்த தேர்வாணையத்திற்கு, பாரிமுனை, பல் மருத்துவக் கல்லூரிக்கு
பக்கத்தில், புதிய கட்டடம் கட்ட, நடவடிக்கை
எடுக்கப்பட்டது. ஆறு தளங்களுடன், 1.25 லட்சம் சதுர அடி பரப்பளவில், 20
கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இதை, கடந்த
மாதம், 27ம் தேதி, முதல்வர் திறந்து வைத்தார். இதைத்
தொடர்ந்து, தேர்வாணையத்தின் பல்வேறு பிரிவுகள், ஒவ்வொன்றாக, புதிய
அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது அனைத்துப் பிரிவுகளும் மாற்றப்பட்டு
விட்டன. எனவே, 15ம் தேதியில் இருந்து, புதிய இடத்தில், தேர்வாணையம்
முழுமையாக இயங்க உள்ளது. குரூப்-2 தேர்வுக்கான, பணி நியமன ஒதுக்கீட்டு
கலந்தாய்வு, புதிய இடத்தில், முதல் நிகழ்ச்சியாக நடக்கிறது. பாரிமுனை பஸ்
நிலையத்திற்கு அருகிலும், கோட்டை ரயில் நிலையத்திற்கு மிக அருகிலும்,
தேர்வாணைய அலுவலகம் அமைந்துள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும்
தேர்வர்கள், எளிதில் சென்று வரலாம்.
>>>அக்டோபர் 12 [October 12]....
- மல்லாவி அன்னையர் தினம்
- இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா பிறந்த தினம்(1918)
- ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)
- கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)
- சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட்டை விற்பனை செய்தார்(1823)
>>>கேட் தேர்வுகள் தொடக்கம்: ஜனவரி 9ம் தேதி ரிசல்ட்
ஐஐஎம் போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக
நடத்தப்படும் கேட் தேர்வு இன்று தொடங்கி வரும் நவம்பர் 6ம் தேதி வரை
மொத்தம் 21 நாட்கள் நடக்கிறது. இந்த தேர்வின் முடிவுகள் ஜனவரி 9ம் தேதி
வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ,
மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இதற்காக நாடு முழுவதும் மொத்தம் 36
நகரங்களில் 61 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் 10 மணிக்கு
முதல்தாள் தேர்வு நடைபெறும் என்றாலும், பாதுகாப்பு சோதனைகளை பூர்த்தி
செய்வதற்காக காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்தில் தேர்வர்கள் ஆஜராக வேண்டும்
என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிற்பகல் நடைபெறும் 2ம் தாள் தேர்வு 3..15 மணிக்கு தொடங்கும். இதில்
பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மதியம் 1.45 மணிக்கு மையத்தில் இருக்க
வேண்டும். இந்த ஆண்டு கேட் தேர்வில் முதல்தாளில் Quantitative Ability, Data Interpretation தொடர்பான கேள்விகளும், 2ம் தாளில் Verbal Ability, Logical Reasoning தொடர்பான கேள்விகளும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேட் தேர்வை எந்தவித சிக்கலும் இன்றி சுமுகமாக நடத்துவதற்காக, தேர்வு
நடைபெறும் மையங்களில் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக, இந்த
ஆண்டுக்கான கேட் தேர்வை நடத்தும் கோழிக்கோடு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனம்
தெரிவித்துள்ளது. கேட் தேர்வின் மூலம் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படக்கூடிய சில முதுநிலை மேலாண்மை பாடத்திட்ட விபரங்கள்: PGP, PGP - ABM, PGSEM, PGPPM, PGP - PGDM, PGP - PGDCM, EPGP, PGDHRM போன்ற படிப்புகள் திருச்சி, பெங்களூர் மற்றும் கோழிக்கோடு உட்பட, நாட்டில் மொத்தமுள்ள 13 ஐஐஎம்-களில் வழங்கப்படுகின்றன. மேலும் FPM (Fellow Programmes in Management) எனப்படும்
முனைவர் பட்டத்திற்கு இணையான படிப்பானது, அகமதாபாத், பெங்களூர்,
கொல்கத்தா, இந்தூர், கோழிக்கோடு, லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங்
மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலுள்ள ஐஐஎம் களில் வழங்கப்படுகிறது. கேட் 2012 தேர்வின் மதிப்பெண்களை, www.catiim.in என்ற
வலைத்தளத்தில் 9 ஜனவரி, 2013 முதல் பார்க்கலாம். மதிப்பெண் அட்டையின்
பிரிண்ட் அவுட் நகலை மாணவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த கேட்
2012 மதிப்பெண் அட்டையானது, 31 டிசம்பர், 2013 வரை செல்லும். இந்த மதிப்பெண் அட்டையை 31 டிசம்பர், 2013 வரை, www.catiim.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...