தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு
காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து மக்களிடையே போதிய
விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவில்லை என்றே சொல்லலாம். டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது
கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது
எப்படி? வந்தால் தடுப்பது எப்படி? வழக்கமாக கொசுக்கள் தேங்கி
கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி
கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை
சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள்,
பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர்
மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும்
வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும். இந்த வகை கொசுக்கள் நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக
அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த
கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.
ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன்
எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள்
தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம்.
உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு
காய்ச்சலில் இருந்து விடுபடலாம். இந்த நோய் எளிதில் குணப்படுத்த
கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல்
தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள்
புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள்
ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம்
உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும்.
இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும். அதனால் இந்த நோய்க்கான
அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக்
கொள்ளலாம். சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக
வைத்துக் கொள்ளுதல் மூலமாகவும், வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில்
கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவதன் மூலமும்
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல்
தடுக்கலாம். அரசு இயந்திரங்களை நம்பாமல், பொதுமக்கள் சுகாதாரமாக,
விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல்
தற்காத்து கொள்ளலாம்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>எஸ்.எஸ்.ஏ., தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்பு
"அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000
தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என,
இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து
மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில், எஸ்.எஸ்.ஏ., திட்டம்,
2002ல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும்,
மாவட்ட, ஒன்றிய அளவில், 5,000 பேர், கட்டட பொறியாளர், டேட்டா என்ட்ரி
ஆபரேட்டர், கம்ப்யூட்டர் புரோகிராமர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், பணி
புரிகின்றனர். இவர்களுக்கு, 6,000 முதல், 13 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப்
படுகிறது. 10 ஆண்டுகளாக தொகுப்பூதிய நிலையில் பணிபுரிந்து வரும் இவர்கள்,
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழக அரசை, தொடர்ந்து வலியுறுத்தி
வருகின்றனர். பணி வரன்முறை குறித்த அறிவிப்பை, ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட்
மற்றும் சட்டசபை கூட்டத்தொடரில், ஊழியர் எதிர்பார்க்கின்றனர்; ஆனால்,
ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., இயக்கக வட்டாரம்
கூறுகையில், ""ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, தொகுப்பூதிய அடிப்படையில்,
ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனவே, அவர்களை, பணி நிரந்தரம்
செய்வதற்கு வாய்ப்பு இல்லை. எனினும், மத்திய அரசின் வேறு திட்டங்கள்
தொடர்ந்து வரும் என்பதால், அவர்களுடைய வேலைவாய்ப்பு பாதிக்காது,'' என,
தெரிவித்தன.
>>>அரசு பள்ளிகளை பாதுகாக்க பாதுகாவலர்கள் நியமிக்கபடுவரா?
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்துக்கும், வாட்ச்மேன்
பணியிடங்களை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசு
பள்ளிகளில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, வகுப்பறைகளும், ஒரு சில
பீரோக்களும் மட்டுமே சொத்துக்களாக இருந்தன. இதனால், திருட்டு போகும்
அபாயமின்றி, வாட்ச்மேன் பணியிடங்களுக்கு அவசியம் இல்லாமல் இருந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்பாட்டுக்கு வந்த பின்,
எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு செயல்
திட்டங்களும், கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இவையனைத்தும், சம்பந்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
வைத்து பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அனைத்து உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளுக்கும், தமிழக அரசு சார்பில், கம்ப்யூட்டர், லேப்-டாப்
உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. உயர்நிலைப் பள்ளிகளில், லேப் அமைப்பதற்காக,
50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், ஒவ்வொரு பள்ளியிலும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள்,
அசையும் சொத்துக்களாக இடம் பெற்றுள்ளன. இவை திருடு போகும் அபாயம் உள்ளதால்,
பள்ளி தலைமை ஆசிரியர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டுள்ளனர். பெரும்பாலான
பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் வாயிலாக, வாட்ச்மேன்களை
நியமித்தும் பாதுகாத்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளுக்கும் வாட்ச்மேன்
தேவையிருப்பதால், தமிழக அரசு சார்பில், வாட்ச்மேன் பணியிடங்களை உருவாக்க
வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:கிராமபுற பள்ளிகள்
பெரும்பாலும், ஊருக்கு வெளிப்புறம் அமைந்துள்ளது. அப்பள்ளிகளில்
காம்ப்பவுண்டு மற்றும் கேட் வசதி கூட இல்லை. மேலும், இரவு காவலர்களும்
இல்லாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சாதனங்களின் பாதுகாப்பு
கேள்விக்குறியாக உள்ளது; இவை சேதமடையவும் வாய்ப்பு உள்ளது.பள்ளிகளில்
வாட்ச்மேன் பணியிடங்களை உருவாக்குவதன் மூலம், பொருட்களை பாதுகாக்க
முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
>>>கலைமகளே வருக! கல்வி வளம் தருக!
நல்லதை பேசச்செய் நாமகளே!சரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் இதைப் பாராயணம் செய்தால் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்
*கலைமகளே! வெண்பளிங்கு நிறத்தவளே! ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அருள்பவளே! தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவளே! நல்லறிவினை வழங்க என் உள்ளத் தாமரையிலும் எழுந்தருள்வாயாக.
* வேதம் நான்கிற்கும் வித்தகியே! பூரணநிலவாக பிரகாசிப்பவளே! குளிர்ச்சி மிக்க முத்துமாலைகளை அணிந்திருப்பவளே! அறிவுடைய சான்றோர்களால் துதிக்கப்படுபவளே! உன்னையல்லால் எனக்கு வேறு கதி யாருமில்லை.
* பூமி, சுவர்க்கம், பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் ஆள்பவளே! கலைகளின் நாயகியே! நான்கு திருமுகங்களால் வேதம் ஓதும் பிரம்மதேவனின் துணைவியே! மயில் போன்ற சாயலைக் கொண்டவளே! எப்போதும் உன் பொன் போன்ற திருவடிகளை வணங்கும் பாக்கியத்தை அருள்வாயாக.
* அறியாமை என்னும் இருளைப் போக்குபவளே! ஒப்பற்ற வீணையை கையில் ஏந்தி இசைப்பவளே! வேதங்களின் முடிவுப்பொருளாகத் திகழ்பவளே! மலர்க்கொடி போன்ற மென்மை மிக்கவளே! எப்போதும் என் நாவில் அமர்ந்து நல்லவற்றைப் பேச வைப்பாயாக.
* குயில்போல இனிய மொழியாளே! அன்னம் போல நடை பயில்பவளே! இளம் பெண்மானாக இருப்பவளே! திருவடியில் பணிந்தவர்க்கு கலைஞானம் தருபவளே! சகலகலாவல்லியே! கலையரசியே! ஞானமும், நல்லறிவும் எனக்கு அளித்து வாழ்வை வளம் பெறச் செய்வாயாக.
* பாவலர் போற்றும் நாமகளே! கலைஞர்கள் வணங்கும் கலைமகளே! மாணவர் வழிபடும் சரஸ்வதியே! வேத நாயகியே! அனைத்திற்கும் ஆதாரமாக இருந்து அறிவை துலங்கச் செய்பவளே! கல்விக்குரிய இந்நன்னாளில் வணங்குவோருக்கு தூய்மையான உள்ளத்தையும், அழியாத புகழையும் என்றென்றும் தந்தருள்வாயாக.
*கலைமகளே! வெண்பளிங்கு நிறத்தவளே! ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அருள்பவளே! தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவளே! நல்லறிவினை வழங்க என் உள்ளத் தாமரையிலும் எழுந்தருள்வாயாக.
* வேதம் நான்கிற்கும் வித்தகியே! பூரணநிலவாக பிரகாசிப்பவளே! குளிர்ச்சி மிக்க முத்துமாலைகளை அணிந்திருப்பவளே! அறிவுடைய சான்றோர்களால் துதிக்கப்படுபவளே! உன்னையல்லால் எனக்கு வேறு கதி யாருமில்லை.
* பூமி, சுவர்க்கம், பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் ஆள்பவளே! கலைகளின் நாயகியே! நான்கு திருமுகங்களால் வேதம் ஓதும் பிரம்மதேவனின் துணைவியே! மயில் போன்ற சாயலைக் கொண்டவளே! எப்போதும் உன் பொன் போன்ற திருவடிகளை வணங்கும் பாக்கியத்தை அருள்வாயாக.
* அறியாமை என்னும் இருளைப் போக்குபவளே! ஒப்பற்ற வீணையை கையில் ஏந்தி இசைப்பவளே! வேதங்களின் முடிவுப்பொருளாகத் திகழ்பவளே! மலர்க்கொடி போன்ற மென்மை மிக்கவளே! எப்போதும் என் நாவில் அமர்ந்து நல்லவற்றைப் பேச வைப்பாயாக.
* குயில்போல இனிய மொழியாளே! அன்னம் போல நடை பயில்பவளே! இளம் பெண்மானாக இருப்பவளே! திருவடியில் பணிந்தவர்க்கு கலைஞானம் தருபவளே! சகலகலாவல்லியே! கலையரசியே! ஞானமும், நல்லறிவும் எனக்கு அளித்து வாழ்வை வளம் பெறச் செய்வாயாக.
* பாவலர் போற்றும் நாமகளே! கலைஞர்கள் வணங்கும் கலைமகளே! மாணவர் வழிபடும் சரஸ்வதியே! வேத நாயகியே! அனைத்திற்கும் ஆதாரமாக இருந்து அறிவை துலங்கச் செய்பவளே! கல்விக்குரிய இந்நன்னாளில் வணங்குவோருக்கு தூய்மையான உள்ளத்தையும், அழியாத புகழையும் என்றென்றும் தந்தருள்வாயாக.
பூமிக்கடியில் ஓடும் சரஸ்வதி நதி:
பிறகு தோன்றியவள் சரஸ்வதி. இவளை "கவுரி' என்றும் அழைப்பர். வெண்மை
நிறத்துடன், தாமரைப்பூவில் காட்சி தரும் இவள் எட்டு கருவிகளை
வைத்திருக்கிறாள். நிலாவைப் போல பிரகாசமான ஒளியை உடையவள். இவள் நமது
நாட்டில் நதியாக ஓடுகிறாள்.ரிக் வேதத்தில் இந்த நதி பற்றிய தகவல் உள்ளது.
"சரஸ்' என்றால் "தண்ணீர்'. ஒரு காலத்தில் இந்தநதியின் கரையில் பல யாகங்கள்
செய்யப்பட்டுள்ளது. வாக்கிற்கு அதிபதியான சரஸ்வதிக்கு "வாக்தேவி' என்றும்
பெயர் உண்டு. இதன் அடிப்படையில் இந்த நதிக்கு "வாக்தேவதை நதி' என்று
பெயரும் உண்டானது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும்
திரிவேணியில் சங்கமிக்கின்றன. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா
நடக்கிறது. திரி@வணியில் கங்கை, யமுனை ஆகிய நதிகள் சங்கமிப்பதை
காணமுடியும். ஆனால், சரஸ்வதி நதி பூமிக்கடியில் ஓடுவதாக ஐதீகம் உள்ளதால் அதைக் காண முடியாது.
அன்புள்ள கோபாலசுந்தரி:
ஆதிசங்கரர் எழுதிய அம்பிகை
துதிகளில் மந்திரநூலாகத் திகழ்வது சவுந்தர்யலஹரி. நூறு ஸ்லோகங்களைக் கொண்ட
இந்நூல் அம்பிகையின் மேன்மையைப் போற்றுகிறது. இதற்குரிய விளக்கவுரையைப் பல
மகான்கள் எழுதியுள்ளனர். ஆனந்தகிரி என்பவர் எழுதிய விளக்கவுரைக்கு "கோபால
சுந்தரி' என்று பெயர். சவுந்தர்யலஹரி அம்பிகையை மட்டுமில்லாமல், அவளது
சகோதரரான விஷ்ணுவையும் போற்றுவதாக இவர் விளக்கம் தருகிறார். அண்ணனின்
பெயரான கோபால், தங்கையின் பெயரான சுந்தரி இரண்டையும் இணைத்து
"கோபாலசுந்தரி' என்று தன் உரைநூலுக்கு பெயரும் வைத்திருக்கிறார். சகோதர
சகோதரியின் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
பதிபக்தியில் நம்பர்ஒன்:
கணவர் மீது அன்பு கொண்ட பெண்களில் அம்பிகை தான் "நம்பர் ஒன்' என்கிறார்
ஆதிசங்கரர். சவுந்தர்யலஹரியில் இதை வெளிப்படுத்தும் விதத்தில் பல
ஸ்லோகங்கள் உள்ளன. கணவரான சிவபெருமானின் பெருமையைப் பேசிப் பேசியே
அம்பாளின் நாக்கு செம்பருத்திப்பூ போல சிவந்து விட்டது என்று 64வது
ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார். பரமேஸ்வரனின் திருவிளையாடல்களை சரஸ்வதி வீணா
கானமாக போற்றுவதைக் கேட்டு அம்பிகை சந்தோஷப் பெருக்கில் திளைக்கிறாள்
என்று 66வது ஸ்லோகத்தில் கூறுகிறார். 96வது ஸ்லோகத்தில் ""ஸதீநாம் அசரமே!''
என்றே அம்பிகையைப் போற்றுகிறார். பதிபக்தியில் "நம்பர் ஒன்' அம்பிகை தான்
என்பதற்கு இது சான்று.
சகலமும் தரும் சாரதாதேவி:
சிருங்கேரியில் சரஸ்வதிதேவியே சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். கல்வி
கேள்விகளில் சிறந்து விளங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகளை
பள்ளியில் சேர்க்கும்முன் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு. ஆதிசங்கரர்
ஸ்ரீசக்ரத்தில் சாரதா தேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா,
விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கையாகத் திகழ்கிறாள். >>>புதிய மருத்துவ கல்லூரிகள்: விதிமுறை தளர்த்த பரிசீலனை
மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான, தற்போதுள்ள கடுமையான விதிமுறைகளை
தளர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுபற்றி
ஆலோசிக்க, அடுத்த மாதம், அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள், செயலர்களின்
கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு
வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கேற்ப, டாக்டர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அடுத்த
ஐந்தாண்டுகளில், புதிதாக, 5,000 எம்.பி.பி.எஸ்., "சீட்"களை ஏற்படுத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு, தற்போது கடுமையான விதிமுறைகள் உள்ளன;
இவை, மிகவும் பழைய விதிமுறைகள். புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும்
என்றால், இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். தற்போதுள்ள விதிமுறைப்படி, மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு அதிகமான நிலம்
வேண்டும். விளையாட்டு மைதானம், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் ஆகியவை,
பரந்த அளவில் அமைக்க வேண்டும் என்பதால், இந்த விதிமுறைகள்
உருவாக்கப்பட்டன. தற்போது நிலங்கள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளதால், பல மாடி
கட்டடங்களில், மருத்துவ கல்லூரி அமைக்கலாம். விதிமுறைகளை தளர்த்துவது
குறித்து பரிசீலிக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம்,
ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை உருவாக்குவதற்காக, எம்.சி.ஐ., சார்பில், குழு
அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள்,
செயலர்களின் கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. அப்போது, இந்த விவகாரம்
குறித்து, ஆலோசிக்கப்படும். புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரி, எம்.சி.ஐ.,க்கு, 120
விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை விரைவாக
பரிசீலிக்கும்படியும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு
வட்டாரங்கள் தெரிவித்தன.
>>>அக்டோபர் 23 [October 23]....
- ஹங்கேரி தேசிய தினம்
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் வெளியிடப்பட்டது(2001)
- ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)
- முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)
- லெனின், அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்(1917)
>>>பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை, காரணமாக கடலூர் , விழுப்புரம் , நாகை ,சென்னை, திருச்சி,
காஞ்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அரியலூர், உதகை கோத்தகிரி குன்னூர்
குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings
34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...
