கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>விஜயதசமி ஸ்பெஷல்: வீரத்திருநாள் வெற்றி திருநாள்

 
படகில் பவனி வரும் அம்பாள்: ஆந்திராவின் காவல் தெய்வமாக திகழ்பவள் விஜயவாடா கனகதுர்க்கை. இவள், பர்வதம் மல்லேஸ்வரர் கோயிலில் அருளுகிறாள். சக்திபீடங்களில் இத்தலமும் ஒன்று. முன்னொரு காலத்தில் இப்பகுதியில் தவமிருந்த இந்திரகிலர் என்ற முனிவரை அசுரர்கள் தொந்தரவு செய்தனர். அசுரர்களிடம் இருந்து தன்னை காக்கும்படி இங்கு அம்பிகையை வேண்டி தவமிருந்தார் முனிவர்.  அம்பிகையும் அசுரர்களை அழித்து அவரைக் காத்தருளினாள். அதற்கு நன்றிக்கடனாக குன்று வடிவம் எடுத்து அம்பிகையை தன்மீது தாங்கிக்கொண்டார். பிற்காலத்தில் இந்த குன்று கிருஷ்ணா நதியின் போக்கை தடுத்ததால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே மக்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அம்பிகையின் வேண்டுகோள்படி குன்றாக இருந்த முனிவர், நதி சீராக செல்வதற்கு வழிவிட்டார். எனவே, இப்பகுதி "பெஜ்ஜவாடா' என்று அழைக்கப்பட்டது. "பெஜ்ஜம்' என்றால் "குகை'. இதுவே மருவி, விஜயவாடா' ஆனது. விஜயதசமியன்று இக்கோயிலில், கனகதுர்க்கையை, படகில் வைத்து, கிருஷ்ணா நதியில் பவனி வரச்செய்கிறார்கள். நதியின் போக்கிற்கு வழிவிட்டதற்கு, நன்றி செலுத்தும்விதமாக இவ்வாறு செய்கிறார்கள்.இவ்விழாவிற்கு "நௌக விஹாரம்' என்று பெயர்.
கருணையுள்ள தேவி:
ரம்பன், கரம்பன் எனும் அசுரர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி, தண்ணீருக்குள்ளும், நெருப்பிலும் நின்று பிரம்மனை நோக்கி தவமிருந்தனர். இவர்களது தவத்தினால் தனது பதவிக்கு ஆபத்து வந்து விடும் என அஞ்சிய இந்திரன், முதலை வடிவம் எடுத்து நீருக்குள் கரம்பனை கொன்று விட்டான். சகோதரனை இழந்த ரம்பன், தன் தவமாவது வெற்றி பெற வேண்டும், இல்லாவிட்டால் உயிர் துறக்க வேண்டும் என்ற வெறியில், தன் தலையை அறுத்து அக்னியில் போட முயன்றான். அப்போது அக்னி பகவான் அவன்முன் தோன்றினார். அவர் ரம்பனின் தவத்தைப் பாராட்டி ""என்ன வரம் வேண்டும்?'' என்றார். ரம்பன், ""யாராலும் அழிக்க முடியாதபடியும், விரும்பிய வடிவங்கள் எடுக்கும்படியும் ஒரு மகன் வேண்டும்,'' என்றான். அக்னி பகவானும் அப்படியே வரமளித்தார்.  மேலும், இந்த வரம் பெற்ற பின், எந்த பெண் வடிவை முதலில் பார்க்கிறாயோ, அவள் மூலம் உனக்கொரு மகன் பிறப்பான் என்றருளினார். அவன் முதலில் பெண் எருமை ஒன்றைப் பார்த்தான். அது கருவுற்றது. எருமையின் வயிற்றில் இருந்து தனக்கு மகன் பிறப்பான் என்று அறிந்த அவன், எருமையை தன்னுடன் அழைத்துச் சென்றான். ஒருநாள் அந்த எருமையை கண்ட மற்றொரு ஆண் எருமை அதனருகில் நெருங்கி வந்தது. ரம்பன் அதனை விரட்ட முயன்ற போது, அது அவனை முட்டிக் கொன்றுவிட்டது. ரம்பனின் உடலை எரித்தபோது, பெண் எருமையும் தீயில் பாய்ந்தது. அப்போது அதன் வயிற்றில் வளர்ந்த சிசு எருமைத் தலையுடன் வெளிப்பட்டது. மகிஷத்தின் (எருமை) மூலம் பிறந்தவன் என்பதால் அவனை, "மகிஷன்' என்று அழைத்தனர். இவன் ஏன் எருமை வயிற்றில் பிறந்தான் தெரியுமா? வரமுனி எனும் மகரிஷி, கடுந்தவம் செய்து பல வரங்களைப் பெற்று, ஆணவத்தால், மூத்த முனிவரான அகத்தியரையே அவமதித்தார். அகத்தியர் அவரை எருமையாக பிறக்கும்படி சபித்து விட்டார். வரமுனிவர் மன்னிப்பு வேண்டினார். அகத்தியர், "சாபம் கொடுத்ததை மாற்ற முடியாது. ஆனாலும், எருமையாக பிறக்கும்போது, அம்பிகையின் தரிசனம் கிடைக்கப்பெறுவாய்,' என்றார்.  இந்த வரமுனியே இப்போது மகிஷனாக பிறந்திருந்தார். கடுந்தவம் செய்த மகிஷன், பிரம்மாவிடம், கருவில் உருவாகாத பெண்ணைத் தவிர, யாராலும் இறப்பு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான். இதனால் ஆணவம் கொண்டு, தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் தங்களை காக்கும்படி மும்மூர்த்திகளிடம் வேண்டினர். அவர்கள் தங்களது சக்தியை ஒன்றாக்கி ஒரு பெண்ணைப் படைத்தனர். பேரழகியான அவளுக்கு தேவர்கள் பல ஆயுதங்களைக் கொடுத்தனர். அவளது அழகு பற்றி அறிந்த மகிஷாசுரன், திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது அனுப்பினான். அவள் பதிலே சொல்லவில்லை. போரிட்டு அடைய எண்ணி சண்டையிட்டான். அவனை எதிர்த்த அவள், ஒன்பது நாட்கள் சண்டையிட்டாள். பத்தாம் நாளில் அவனை அடக்கி, காலில் போட்டு மிதித்தாள். யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றிருந்தும், தன்னை அடக்கிய அவளது திருவடிகள் பட்டதுமே அவனுக்கு முற்பிறவி ஞாபகமும், தான் அம்பிகையின் திருவடி தரிசனம் பெற்றுள்ளோம் என்பதும் தெரிய வந்தது. அவளுக்கு கட்டுப்பட்டு அப்படியே காலடியில் கிடந்து விட்டான். கருணையுள்ள அந்த தேவியே "மகிஷாசுரமர்த்தினி' ஆனாள். மகிஷனை, அம்பிகை அடக்கி வெற்றி வாகை சூடி, வெற்றி நாயகியாக அருள்புரிந்த நாளே விஜயதசமி.

அம்பிகை கொண்டாட்டம் ஏன்:
அம்பிகை, துர்க்கையாக வடிவம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமி. பெரிய கோயில்கள் மற்றும் வசதிபடைத்தவர்கள் வீடுகளில் கணபதி ஹோமம், சண்டி யாகம், லட்சார்ச்சனை செய்து நவராத்திரி பூஜையை முடிப்பர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இவ்விழா பெரியளவில் கொண்டாடப்படுகிறது. பெருமாள் கோயில்களில் வன்னி மரத்தின் கிளையை வைத்து, பெருமாளை எழுந்தருளச்செய்து பாணம் போடும் நிகழ்ச்சி நடக்கும். விநாயகர் சதுர்த்தியன்று சுவாமியை கடலில் கரைப்பதுபோல, மேற்கு வங்காளத்தில் விஜயதசமியன்று, நவராத்திரி நாட்களில் பூஜை செய்து வழிபட்ட பிரமாண்டமான காளிதேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கின்றனர். விஜயதசமி பண்டிகையை மைசூருவில், "தசரா' என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். ராமன், பத்து தலைகளையுடைய ராவணனை வதம் செய்த நாளாக இங்கு விஜயதசமி கொண்டாடப் படுகிறது. எனவே இவ்விழா ஆரம்பத்தில் "தசஹரா' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. தசஹரா என்றால், "பத்து தலைகளைக் கொய்தல்'. பிற்காலத்தில் இதுவே, "தசரா' என மருவியது. இவ்விழா 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்கள் காலத்திலிருந்து கொண்டாடப்படுகிறது.
சிங்க வாகனம்:
அம்பாளின் வாகனம் சிங்கம் (சிம்மம்). சிலர் வாழ்வின் கடைசி வரை திருந்தவே மாட்டார்கள். இவர்களுக்கு பாடம் கற்பிக்க அம்பிகை சிம்மம் கடித்துக் குதறினால் எப்படி ஒரு வலி ஏற்படுமோ, அத்தகைய தண்டனையைத் தருவாள். அது மட்டுமல்ல. சிங்கம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தன் இணையுடன் சேரும். அதுபோல, பந்தபாசங்களைத் துறந்து, பிரம்மச்சரியத்தை அனுஷ்டிப்பவரே, அம்பாளின் திருவடியில் நிரந்தர வாசம் செய்ய முடியும் என்பதையும் இந்த வாகனம் வலியுறுத்துகிறது.

>>>பள்ளிக் கல்விக்கு ரூ.14,552 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

"இடைநிற்றல் போன்றவற்றை தடுத்து, பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி ரூபாய் முதல்வர்  ஒதுக்கி உள்ளார்" என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ராஜபாளையம் விழாவில் அவர் பேசியதாவது: மூன்றாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா நல்லாட்சி நடத்துகிறார். கல்வி, வணிகம் இருந்தால் தான் சமூக பொருளாதாரம் முன்னேறும். கல்விதுறையில் எண்ணற்ற சலுகைகளை முதல்வர் அறிவித்து வருகிறார். பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி, உயர்கல்விக்கு 2800 கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கி உள்ளார். தமிழகத்தின் தொழில், திட்டம், தொலைநோக்கு பார்வையை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன." என பேசினார். பின்னர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கினார்.

>>>அக்டோபர் 24 [October 24]....

  • ஐக்கிய நாடுகள் தினம்(1945)
  • ஜாம்பியா விடுதலை தினம்(1964)
  • ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது(1917)
  • ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது(1931)
  • பிரேசிலில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1930)

>>>முக்கியமான வலைதளங்கள் [Important Websites]...

>>>How to Get Driving Licence? [Tamilnadu Government Formats]

Driving Licence
 One of the basic aims of   Transport Department is to ensure that only skilled and qualified persons are given Driving Licenses.   A person who wishes to obtain a driving license should first get a Learner’s License. 
   1.     Learner’s License
   2.      Driving License
   4.     Public Service Badge
   7.     Renewal of Driving License

>>>திரு.சகாயம், இ.ஆ.ப. அவர்கள்... [Mr.Sahayam, IAS]

அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயி
ரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

>>>இன்று ஒரு தகவல்...

Photo: Like here first -->> இன்று ஒரு தகவல். Today A Message.
ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது...

அது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..

அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்...

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்...

ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்...

இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்...

ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்...

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்” என்றான்..

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்...!
ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது... அது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்.. அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்... ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்... ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்... இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டு சென்றான்... ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்... அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்” என்றான்.. சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்...!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...