டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம்
முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ
வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டி.இ.டி., மறு தேர்வு கடந்த 14ம்
தேதி நடைபெற்றது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த ஜுலை மாதம்
நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இதனால், சமீபத்தில் நடந்த மறுதேர்வு முடிவு, தேர்வர்கள் மத்தியில் பெரும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வைவிட, இந்த தேர்வுக்கு கூடுதல் நேரம்
வழங்கப்பட்டதாலும், வினாத்தாள் எளிதாக இருந்ததாலும் தேர்ச்சி சதவீதம்
நன்றாக இருக்கும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>ஆசிரியர் ஓய்வு வயது அதிகரிப்பு
ஜார்கண்ட் மாநில பல்கலை.,யில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது
உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் அர்ஜூன்முன்டா தலைமையில் நடந்த
அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 62 லிருந்து
65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
>>>அதிகரிக்கும் ஆசிரியைகள்...!
இந்தியாவில், 64 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 29 லட்சம் பேர் ஆசிரியைகள். சில ஆண்டுகளாக ஆசிரியைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008 2009ம்
ஆண்டில் 43.46 சதவீதமாகவும், 2009 2010ம் ஆண்டில் 44.83 சதவீதமாகவும்,
2010 2011ல் இந்த எண்ணிக்கை 45.51 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் ஆசிரியைகளின் பணியிடங்களை அதிகரிக்கும் முயற்சி 1990களிலேயே தொடங்கப்பட்டது.
>>>2012 வேலைவாய்ப்பு பட்டியலில் இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம்
சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு
நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளை 2012ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புப்
பட்டியலில், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம் முதல் 100
இடங்களுக்குள் வந்துள்ளது. கடந்த
2011ம் ஆண்டு இதே பட்டியலில் 134வது இடத்தில் இருந்த இந்திய அறிவியல்
ஆய்வு நிறுவனம், ஒரே ஆண்டில் சுமார் 100 இடங்கள் முன்னேறி 35வது இடத்தைப்
பிடித்துள்ளது. இந்தக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகளை தங்கள்
நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள சர்வதேச நிறுவனங்கள் போட்டா போட்டி
போடுவதையே இது காட்டுவதாக இந்திய அறிவியல் ஆய்வு நிறுவன பேராசிரியர்கள்
மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கன்சல்டிங் நிறுவனமான எமர்ஜிங் மற்றும் ஜெர்மன் நாட்டின் ட்ரென்டன்ஸ் ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து, உலகம்
முழுவதும் எந்தப் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பயிலும்
மாணவர்களுக்கு சர்வதேச சந்தையில் மவுசு இருக்கிறது என்ற கோணத்தில்
ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகின்றன. 2012ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில், Harvard, Yale, Cambridge, Oxford, Stanford, MIT, Columbia, Princeton, Imperial College of London, Goethe-University (Frankfurt) போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
>>>அக்டோபர் 27 [October 27]....
- அமெரிக்க கடற்படை தினம்
- பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
- காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
- நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)
>>>இன்று ஒரு தகவல்....
தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!
ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம். இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை பிறக்கும் காலம்
ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன. 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள். 41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள். குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
பிறக்கும் குழந்தையின் எடை
ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும். எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம். உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.
பராமரிப்பில் முக்கியமானவை:
தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்
தாய்ப்பால்
தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:
தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.
தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.
குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.
கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.
பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.
அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.
குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?
குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.
சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.
சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.
ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.
குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.
சில தகவல்கள்.....
கொலஸ்ட்ரம்
பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.
தாய்ப்பால்
பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.
ஊட்டும் போது முதலில் வரும் பால்
பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.
கடைசியில் வரும் பால்
பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.

>>>அரசு ஊழியருக்கு "லேப்டாப்' : பி.எஸ்.என்.எல்., சலுகை
பி.எஸ்.என்.எல்., மற்றும் அரசு ஊழியர்களுக்கு, 10 முதல்
12.5 சதவீத தள்ளுபடியில் "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது. இவை மூன்று
மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. "டிஇசட் 100' -ரூ.10,999, "டிஇசட்
200' -ரூ.6499, "டிஇசட் 300' -ரூ.3999 என்ற விலையில் கிடைக்கிறது. முதல்
கட்டமாக டெராகாம் நிறுவன "டிஇசட் 200' மாடல்கள், பி.எஸ்.என்.எல்., முகவர்
மூலம் விற்கப்படுகின்றன. இதனுடன், "3 ஜி டேட்டா கார்டு' -ரூ.2100, "கீ
பேடு' -ரூ.800, "சிம்கார்டு' -150 என மொத்தம், ரூ.9,549 க்கு
விற்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு 12.5 சதவீத தள்ளுபடியிலும் இவை வழங்கப்படுகின்றன. இச்சலுகை அக்., 31 ம் தேதி வரை உள்ளது. பொதுமக்கள், தள்ளுபடி இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...