உலகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களின்
வழியைப் பின்பற்றி, ஒருங்கிணைந்த பொறியியல்-மேலாண்மைப் படிப்பை, அண்ணா
பல்கலையில் வழங்குவதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பொறியியல் படிப்பை
முடித்தப்பிறகு, மேலாண்மை படிக்கவிரும்பும் மாணவர்களுக்கான ஒரு சிறந்த
வாய்ப்பாக இப்படிப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துப்
பிரிவுகளைச் சார்ந்த பொறியியல் மாணவர்களுக்கும், மேலாண்மைத் திறன்களை
வழங்குவதை இப்படிப்பு நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது,
ஒரு பொறியியல் பட்டதாரி, தொழில்துறையின் தேவைக்கேற்ப தயாராகி இருக்க
வேண்டும் மற்றும் ஒரு தொழில்முனைபவராக உருவாகும் திறனையும் பெற்றிருக்க
வேண்டும். இப்படிப்பில் மொத்தம் 10 செமஸ்டர்கள்(அகடமிக்) உண்டு. இதையடுத்து,
பொறியியல் மாணவர்களுக்கான, தொழில்துறை இன்டர்ன்ஷிப் செமஸ்டரும்(6 மாதங்கள்)
உண்டு. இப்படிப்பில் 3 ஆண்டுகள் நிறைவுசெய்த ஒருவர், பொறியியல் படிப்பில்
இளநிலைப் பட்டத்தைப் பெறுகிறார். அதை முடித்ததும், அவர் வெளியேறிச் சென்று
எங்கேனும் சிறிதுகாலம் பணிபுரிந்து அனுபவம் பெற்று, பின்னர் மீண்டும் வந்து
4ம் வருட படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். இதுதொடர்பாக, அண்ணாப் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறியதாவது: இந்த
புதிய படிப்பு தொடர்பான செயல்திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து
கொண்டுள்ளோம். இந்தப் படிப்பிலுள்ள, "வெளியே சென்று அனுபவம் பெற்று பின்னர்
திரும்பி வந்து படித்தல்" என்ற சலுகையால், படிப்பை பாதியிலேயே கைவிடுவோர்
எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஏனெனில், பல மாணவர்கள்
பொறியியல் பட்டம் பெற்றால் போதுமென நினைத்து திரும்ப வரமாட்டார்கள்
என்றார். தற்போதைய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில், M.Sc., Computer
science பிரிவில் மட்டுமே ஒருங்கிணைந்த(Integrated) படிப்பு வழங்கப்பட்டு
வருகிறது. இந்தப் புதிய படிப்பிற்கு தனி நுழைவுத் தேர்வு தேவை என்று சில
கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் கட்-ஆப் குறைவாக இருந்தால்,
மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு கிடைக்காத ஒரு மாணவர், இப்படிப்பை நாடி
வருவார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தம் 5.5 வருடங்களைக் கொண்ட, இந்த இணைப்புப் படிப்பை, அடுத்த 2013
முதல் வழங்க விரும்பும் Affiliated கல்வி நிறுவனங்கள், தன்னிடம்
விண்ணப்பிக்கலாம் என, சமீபத்தில், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி
கவுன்சில்(AICTE) அறிவித்தது. அதன்படி, 500 கல்வி நிறுவனங்கள் வரை
விண்ணப்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>கர்நாடகாவுக்கு “தாரைவார்க்க” இருந்த எஸ்.எஸ்.ஏ. திட்ட பள்ளிமானியம் தப்பியது...!?
கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், தமிழகத்தின்,
அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு
தாரை வார்க்கும் நடவடிக்கை, நிறுத்தி வைக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் ஒவ்வொரு
பள்ளிக்கும், பராமரிப்பு நிதியாக, 5000 ரூபாய், வளர்ச்சி நிதியாக, 5,000
ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதில், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். கடந்த மாதத்தில், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட அலுவலகத்தில் இருந்து, எந்த காரணமும் தெரிவிக்காமல், அனைத்து பள்ளிகளும் வளர்ச்சி நிதியில் இருந்து, கர்நாடக
மாநிலம் மைசூரில் மெட்டீரியல்ஸ் பேங்க்' என்ற பெயருக்கு, தலா, 2,000
ரூபாய், "டிடி' எடுத்து அனுப்ப வேண்டும்' என்று அவசர உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு:
இதனால்,
35 ஆயிரம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், "டிடி' எடுத்து, முதன்மைக்
கல்வி அதிகாரிகள் மூலம், மாநில திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். எந்த தகவலும் கூறாமல், "டிடி' அனுப்ப சொன்னதால், தலைமை ஆசிரியர்கள், கிராம கல்வி குழுவினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும், "கற்றல்
கற்பித்தல் உபகரணங்கள் தமிழகத்திலேயே கிடைக்கும்போது, கர்நாடக மாநிலத்தில்
உள்ள நிறுவனத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?' என்றும், எதிர்ப்பு
கிளம்பியது. இதுகுறித்து செய்தி வெளியானது. இந்நிலையில்,
மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும்,
"மைசூரு நிறுவனத்துக்கு வழங்க எடுத்த, "டிடி'யை அனுப்ப வேண்டாம்; நிறுத்தி
வையுங்கள்' என, தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரி
ஒருவர் கூறுகையில், "பணம் அனுப்பியிருந்தால், அது திரும்ப உங்களுக்கே
அனுப்பி வைக்கப்படும் என, மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து, தகவல்
தெரிவிக்கப்பட்டது' என்றார்.
>>>மருத்துவ மாணவர் தேர்ச்சி விகிதம் சரிவு!
கடந்த 2011ம் ஆண்டு, தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில்
சேர்ந்த மாணவர்களில், 33% பேர், முதலாமாண்டு தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர்
மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும், மொத்தம் 29 மருத்துவக்
கல்லூரிகளைச் சேர்ந்த 3,462 மாணவர்கள் முதலாண்டுத் தேர்வினை எழுதினர்.
ஆனால், அவர்களில் 2,341 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
மருத்துவத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற, ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம்
50% மதிப்பெண்களைப் பெற வேண்டுமென்ற புதிய விதியை மருத்துவப் பல்கலை
அறிமுகப்படுத்தி, அதனடிப்படையில் வெளியான தேர்வு முடிவுகளில் இந்த சரிவு
ஏற்பட்டுள்ளது. அக்டோபர்(இம்மாதம்) 8ம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய இத்தேர்வு
முடிவுகளை, பல்கலை நிறுத்தி வைத்திருந்தது. ஏனெனில், புதிய மதிப்பெண்
விதிமுறைகளுக்காக, இந்திய மருத்துவக் கவுன்சிலின்(MCI) அனுமதியைப் பெற
வேண்டியிருந்தது. அனுமதி கிடைத்ததும், முடிவுகள் தற்போது
வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, ஒரு மருத்துவ மாணவர் தேர்ச்சிப் பெறுவதற்கு,
ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம் 50% aggregate மதிப்பெண்களைப் பெற
வேண்டும் என்ற விதி இருந்தது.
தேர்ச்சி விகிதத்தில் முன்னணி பெற்ற கல்லூரிகள்
ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி - 86.67% தேர்ச்சி
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி - 85.33% தேர்ச்சி
கோவை மருத்துவக் கல்லூரி - 85.03% தேர்ச்சி
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - 85%
மிகக் குறைவான தேர்ச்சி சதவீகிதம் பெற்ற கல்லூரி
அன்னபூர்னா மருத்துவக் கல்லூரி - 45.94%.
>>>அக்டோபர் 28 [October 28]....
- செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)
- முதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)
- கனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)
- ஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)
>>>பெற்றோர்களுக்கு...
*
பிள்ளைகளை முடிந்தவரை அருகில் உள்ள பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும்.
குடியிருப்புப் பகுதிகளில் நான்கு கி.மீ. சுற்றளவுக்குள் ஓர் அரசுப் பள்ளி
இருக்க வேண்டும் என்பது விதி. அப்படி இருக்கவும் செய்கிறது. அந்தப்
பள்ளியின் தரம் சரியில்லை எனில், அதற்காக நாம் போராட வேண்டுமே ஒழிய, அரசுப்
பள்ளிகளைப் புறக்கணிப்பது தீர்வாகாது. ஏனெனில், அரசுப் பள்ளிகள் நம் வரிப்
பணத்தில் இயங்குகின்றன. அருகில் உள்ள
பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்போது இந்த விபத்து, ஆபத்துகளை எளிதாகத்
தவிர்க்க முடியும். அத்துடன், உடல் சோர்வு, நச்சுக் காற்று மூலம் ஏற்படும்
நோய்கள் போன்றவற்றில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.
*
தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் மட்டும் அல்லாது எந்த ஒரு பள்ளி
வாகனமும் அதிவேகத்தோடு சென்றால், அந்த வாகனத்தின் பின்புறம் 'புகார்
தெரிவிக்க’ என்று எழுதப்பட்டிருக்கும் எண்ணுக்குப் புகார் அளிக்கலாம்.
* ஒவ்வொரு பேருந்திலும் பின்புறம் பயணிகள் ஏறும் இடத்துக்கு அருகில் கடைசியாக எப்போது ஆய்வுக்குச் சென்றது என்ற விவரங்கள் எழுதப்பட்டு இருக்கும். அந்தத் தகவல்கள் மூலமும் அந்த வாகனத்தின் பராமரிப்பைப் பெற்றோரே உறுதி செய்துகொள்ளலாம்.
* ஒவ்வொரு பேருந்திலும் பின்புறம் பயணிகள் ஏறும் இடத்துக்கு அருகில் கடைசியாக எப்போது ஆய்வுக்குச் சென்றது என்ற விவரங்கள் எழுதப்பட்டு இருக்கும். அந்தத் தகவல்கள் மூலமும் அந்த வாகனத்தின் பராமரிப்பைப் பெற்றோரே உறுதி செய்துகொள்ளலாம்.
>>>டி.இ.டி.: 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு
ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716
பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு,
இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. டி.இ.டி., முதல்தாளில் தேர்ச்சி
பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு
முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு
செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு
செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம்
தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை,
சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும்,
"ஹால் டிக்கெட்" நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு,
டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வுக்கான புதிய விதிமுறையின்படி, டி.இ.டி., தேர்வில் பெறும்
மதிப்பெண்கள், "வெயிட்டேஜ்" அடிப்படையில், 60 மதிப்பெண்களுக்கு
கணக்கிடப்படுகிறது. அதோடு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத்
தேர்வில் பெறும் மதிப்பெண்கள், வெயிட்டேஜ் அடிப்படையில், 40
மதிப்பெண்களுக்கும் கணக்கிட்டு, 100 மதிப்பெண்களுக்கு, தேர்வர் பெறும்
மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர். அதன்படி, இடைநிலை ஆசிரியரைப் பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15, ஆசிரியர்
கல்வி பட்டய படிப்பிற்கு, 25 மற்றும் டி.இ.டி., தேர்வில், 60 என, 100
மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். இதனால், பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில், 1,716 பேர்
பெற்ற மதிப்பெண் விவரங்களை ஊர்ஜிதப்படுத்தவும், சான்றிதழ் நகல்களை பெறவும்,
இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் வருமாறு, டி.ஆர்.பி., அழைப்பு
விடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான அறிவிப்பு, இன்று வெளியாகும் என
தெரிகிறது.
>>>டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு
டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம்
முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ
வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டி.இ.டி., மறு தேர்வு கடந்த 14ம்
தேதி நடைபெற்றது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த ஜுலை மாதம்
நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இதனால், சமீபத்தில் நடந்த மறுதேர்வு முடிவு, தேர்வர்கள் மத்தியில் பெரும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வைவிட, இந்த தேர்வுக்கு கூடுதல் நேரம்
வழங்கப்பட்டதாலும், வினாத்தாள் எளிதாக இருந்ததாலும் தேர்ச்சி சதவீதம்
நன்றாக இருக்கும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key
3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...